LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்தி வார பலன்கள் (28 – 05 – 2017 முதல் 03 - 06 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் (9994811158)

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்,பரணி-1, 2, 3, 4 பாதங்கள்,கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் பக்தி மயமான வாரமாக அமையும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். கல்வியில் சிறப்பான இடத்தை அடைவார்கள். அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுகமான சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். தொழிலாளர்களை அனுசரித்துச் சென்றால், உற்பத்தி அதிகரிக்கும்.
பரணி
இந்த வாரம் பக்தி மயமான வாரமாக அமையும். குடும்பத்தில் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகச் சேரும். குடும்பத்தினர் இடையே ஒற்றுமை ஓங்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.
இந்த வாரம் மங்கையரால் மன மகிழ்ச்சியும், இசையை ரசிப்பதின் மூலம் இன்பத்தையும் அடைவீர்கள். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும்.

ரிஷபம்
(கார்த்திகை , 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் ,
இந்த வாரம் திருமணத்திற்கு வரன் தேடும் நிகழ்வுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, திருமண ஆசைகள் நிறைவேறும். புது ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் துறையினர் தங்கள் வளர்ச்சிக்கு அதிக மூலதனங்களைப் போட வேண்டியது வரும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். குழந்தைகளால் தொல்லைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.
ரோகிணி ,
இந்த வாரம் புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்குக் கட்டுக் கடங்காத செலவுகள் ஏற்படலாம். இரவுப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தரும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயம் காண்பர். பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியார்களின் ஆசைகள் நிறைவேறும்.
மிருகசிரீஷம் (1 , 2 பாதங்கள்)
இந்த வாரம் தனிமையில் இருக்க நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். பக்தியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபடுவதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்டுவது அவசியம்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் , 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகளால் ஏற்றம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதப்படலாம். தீர்மானித்தபடி எதுவும் நடக்காது. குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் பிரச்சனைகள் தீர்ந்து, வீட்டில் அமைதி நிலவும். பெற்றோரின் உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்தல் அவசியம். பிறமொழி பேசும் பெண்களின் நட்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலத் தொழில் விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது முன்னேற்றத்தைத் தரும்.
திருவாதிரை
இந்த வாரம் திருப்திகரமான பணவரவால் பொருளாதார நிலை மேம்படும். சந்தோஷத்தால் ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும். தெய்வப் பிரார்த்தனைகளால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நடக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த தொழில் முதலீடுகள் உடனடியாகக் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு வங்கி மூலமான கடன் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
புனர்பூசம் , 1, 2, 3 , பாதங்கள்  
இந்த வாரம் ஓய்வும், அமைதியும் ஒருசேரக் கிடைக்கும். வியாபார விருத்தியால் செல்வ நிலையும் உயரும். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு அவர்கள் விருப்பப்படி நல்ல மணமகன் கிடைத்து, திருமண காலம் கூடிவரும். பிற்கால நலன் கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும்.

கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் , 4 ஆம் பாதம்
இந்த வாரம் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றலென வீசும். மணமேடையேறும் மங்கல நாளும் வந்து, மனதில் மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைத்திடவே பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும். எடுத்துக் கொண்ட புதிய திட்டங்களில் எதிர்பாராத தாமதங்கள் தடைகள் ஏற்படலாம்.
பூசம்
இந்த வாரம் அருகிலுள்ள அனைவரையும் கவர முற்படுவீர்கள். சீரான பொருளாதார நிலையால், மனதில் மகிழ்ச்சி நீடிக்கும். உங்கள் செயல்திறன் கூடி தனவரவுகளை அதிகரிக்கச் செய்யும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். ஆயினும், புதிய வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு முன், அதற்குரிய மூலப் பத்திரங்கள், வில்லங்க விவகாரங்கள், பட்டா போன்ற ஆவணங்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது. சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெறுவர்.
ஆயில்யம்   
இந்த வாரம் கை நிறையப் பணம் இருப்பதால் மனம் நிறைய மகிழ்ச்சி பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். இடுக்கண் களைய இனிய நண்பர்கள் அமைவர். குடும்பத்தாரோடு பொழுது குதூகலமாகக் கழியும். அதிகாரம் மிக்க பதவிகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தானே தேடி வரும்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்  
இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக அமையும். எதிர்பார்த்தபடி தனவரவு அதிகரிக்கும். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேறம் காண முயல்வீர்கள்.
பூரம்
இந்த வாரம் அதிக பிரயாசையின்றி உங்கள் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். அழகிய, புதிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். பூஜா வழிபாடுகளலால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழி முறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களைக் காட்டிலும் அரிய சாதனைகளைப் புரிவீர்கள். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
உத்திரம்- 1 பாதம்  
இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு, உயரிய கௌரவத்தையும் அடைவீர்கள். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். தந்தைவழி உறவுகளால் நன்மை ஏற்படும். வியாபார சம்பந்தமான தொலை தூரப்பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்குப் பணவரத்து அதிகமாகி, வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். பெண் பணியாளர்களுக்கு அரசு உதவிகள் உடனடியாகக் கிடைக்கும்.

கன்னி
(உத்திரம் , 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை , 1,2 பாதங்கள்)
உத்திரம் , 2, 3, 4 , பாதங்கள்
இந்த வாரம் இனிய சேவைகள் மூலமாக சுற்று வட்டாரத்தில் நல்ல புகழும், நவீன பொழுதுபோக்கு உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கௌரவமும் உயரும். சிலருக்கு எதிரிகளின் பணமும் வந்து சேரும். அதன் காரணமாக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.
ஹஸ்தம்   
இந்த வாரம் சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும் தனவரவும் உண்டு. சுற்றத்தார் மூலமான பணவுதவிகள் கிடைக்கலாம். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக ஆதாயம் கணலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். கௌரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும்.
சித்திரை , 1,2 பாதங்கள்  
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஏற்படும். எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். எதிர்பாராத வருமான வாய்ப்புகள் பெருகும்.

துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி , 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்  
இந்த வாரம் சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்பட்டாலும், செலவுகளைக் கட்டுக்குள் வைத்து வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.
சுவாதி   
இந்த வாரம் முன்னேற்றமும், சந்தோஷமும் வாசற்கதவைத் தட்டும். விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
விசாகம்- 1,2,3 பாதங்கள்  
இந்த வாரம் தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்  
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். புதிய தீவிர முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.
அனுஷம்  
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வாகன யோகம் உண்டு. தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத விதத்தில் திடீரென இடமாற்றங்கள் ஏற்படலாம். நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும்.
கேட்டை  
இந்த வாரம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுவீர்கள். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். வியாபார வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. வாக்கால் வருமானம் பெறுவர்.

தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் ,1 பாதம்)
மூலம்   
இந்த வாரம் சுறுசுறுப்பாக உழைத்து, நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகம், ஆடை ஆபரண சேர்க்கை, எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். அதிகா ளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்.
பூராடம்  
இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும்.
உத்திராடம் ,1 ஆம் பாதம்  
இந்த வாரம் இளைஞர்கள் வானமே எல்லையென, பட்டாம்பூச்சி போல் பறந்து சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் திரிவர். பல வழிகளிலும் தனவரவு கூடும். திருமண வயது எட்டிய பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். புதிய தொழில் தொடங்க உங்களால் எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு திடீர் பதவிகள் கிடைக்கும். அனுபவங்கள் எதிர்கால வாழக்கைக்கான அறிவினைக் கூட்டும்.
 
மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்  
இந்த வாரம் இனிய சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். பிறர் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை நிச்சியமாக எட்டுவீர்கள். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். சமூகத்தில் தங்கள் புகழ் ஓங்கும்.
திருவோணம்
இந்த வாரம் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம். அதன் காரணமாக பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். சேமிப்புகளில் இருக்கும் பணக் கையிருப்புக் கூடும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தேவையற்ற பயணங்களை ஒதுக்குதல் நலம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்  
இந்த வாரம் உடன் பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். சமூக அக்கறையுடன் முழுமனதோடு பொதுச் சேவைகளில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்

(அவிட்டம் , 3,4 பாதங்கள், சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் , 3,4 பாதங்கள்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். தொழில் எனும் விளையாட்டில் சிறப்பாக ஆடினால், நல்ல வளர்ச்சி ஏற்படும்.
சதயம்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். உத்யோக வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும். சிலருக்கு நண்பர்களும் பகைவர்களாக மாறுவர்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் ,
இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாகக் கிடைக்கும் . பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர்அதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் காண்பர். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகும்.

மீனம்
(பூரட்டாதி , 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி , 4 ஆம் பாதம் ,
இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். தேவையற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உழைப்பு காரணமாக, உணவு அருந்த கால தாமதம் ஆகலாம். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். சிலருக்குப் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்
ரேவதி  
இந்த வாரம் பல வழிகளிலும் பணவரவு கொட்டும். அன்பு மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உறவுகளை அனுசரித்துச் சென்றால், அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்

by Swathi   on 25 May 2017  0 Comments
Tags: Palangal   Natchathira Palangal   27 Star Rasi Palangal   Weekly Rasi Palangal   Tamil Natchathira Palangal   நட்சத்திர பலன்கள்   ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.