|
||||||||
மாதம் தோறும் பயிர்கள் |
||||||||
![]() மாதம் தோறும் பயிர்கள் சித்திரை: சித்திரை மாதத்தில் உளுந்து, நிலக்கடலை, தினை, எள், சோளம், நாட்டுக்கம்பு, துவரை, வெங்காயம், சேனைக்கிழங்கு ஆகியவை பயிர் செய்யலாம். வைகாசி: வைகாசி மாதத்தில் எள், உளுந்து, முருங்கை, சூரியகாந்தி, நிலக்கடலை, சாமை, ராகி, பனிவரகு, கருத்தக்கார், ரஸ்தாளி வாழை, ஆனைக் கொம்பன் வெண்டை, சின்ன வெங்காயம், வெண்டை, புதினா, சேப்பக்கிழங்கு, மஞ்சள் ஆகியவை பயிர் செய்யலாம். ஆனி: ஆனி மாதத்தில் உளுந்து, மஞ்சள், நிலக்கடலை, செம்பருத்தி, வெண்டை, எள், மா, சின்ன வெங்காயம், சாமை, கொடி பீன்ஸ் ஆகியவை பயிர் செய்யலாம். ஆடி: ஆடி மாதத்தில் சோளம், ராகி, கம்பு, துவரை, நாட்டுப் பருத்தி, வாழை, நிலக்கடலை, செடி முருங்கை, உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி, காவளிக் கிழங்கு, எலுமிச்சை, மிளகாய், குதிரைவாலி, வரகு, தினை, சாமை, நேந்திரன் வாழை, சேனைக்கிழங்கு, பப்பாளி, செம்பருத்தி, வெண்டை, மாப்பிள்ளைச் சம்பா, மா, மல்லிகை, சின்ன வெங்காயம், நாட்டுக்கம்பு, நாடன் வாழை, கொய்யா, கோவைக்காய், வெண்டை, கத்திரி, தக்காளி, முள்ளங்கி, பாகல், பீர்க்கன், புடலை, கறுப்பு மொச்சை ஆகியவை பயிர் செய்யலாம். ஆவணி: ஆவணி மாதத்தில் நிலக்கடலை, துவரை, எலுமிச்சை, கொய்யா, மா, சின்ன வெங்காயம் ஆகியவை பயிர் செய்யலாம். புரட்டாசி: புரட்டாசி மாதத்தில் பாசிப்பயறு, பனங்கிழங்கு, உளுந்து, எலுமிச்சை, கொய்யா, கொடுக்காப்புளி, நாவல், முல்லைப் பூ, சின்ன வெங்காயம், மொச்சை, கொண்டைக்கடலை, மா, புளி, வெற்றிலை, குண்டு மிளகாய், களாக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம். ஐப்பசி: ஐப்பசி மாதத்தில் நாட்டுக்கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, கறுப்புக் கொள்ளு, பனங்கிழங்கு, முருங்கை, ஓமம், மல்லி, குண்டு மிளகாய், நிலக்கடலை, எலுமிச்சை, ரஸ்தாளி வாழை, நாவல், கொடுக்காப்புளி, சின்ன வெங்காயம், எள், மா, களாக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம். கார்த்திகை: கார்த்திகை மாதத்தில் எள், தினை, கொண்டைக்கடலை, செடி முருங்கை, ஓமம், குண்டுமல்லி, சூரியகாந்தி, எலுமிச்சை, நிலக்கடலை, மரவள்ளி, அறுபதாம் குறுவை, கருத்தக்கார், கொள்ளு, ரஸ்தாளி வாழை, தர்பூசணி, நாடன் வாழை, பப்பாளி, கத்திரி, மா, பட்டன் ரோஜா, சின்ன வெங்காயம், கறுப்புக் கொள்ளு, புதினா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கற்பூரவல்லி வாழை, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம். மார்கழி: மார்கழி மாதத்தில் எள், பனிவரகு, கத்திரி, தென்னை, உளுந்து, தர்பூசணி, சின்ன வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கற்பூரவல்லி வாழை, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம். தை: தை மாதத்தில் தினை, செடி முருங்கை, உளுந்து, நாட்டுக்கம்பு, கொய்யா, தர்பூசணி, சின்ன வெங்காயம், பாகல், பீர்க்கன், புடலை, சேப்பக்கிழங்கு, கற்பூரவல்லி வாழை ஆகியவை பயிர் செய்யலாம். மாசி: மாசி மாதத்தில் பாசிப்பயறு, எள், முலாம்பழம், ரஸ்தாளி வாழை, பேயன் வாழை, கொய்யா, தர்பூசணி ஆகியவை பயிர் செய்யலாம். பங்குனி: பங்குனி மாதத்தில் முலாம்பழம் பயிர் செய்யலாம். ஆண்டு முழுவதும்: ஆண்டு முழுவதும் கீரை, செண்டுமல்லி, பாகற்காய், வெள்ளரி, பப்பாளி, தக்காளி, உளுந்து, வெண்டை, கொத்தவரை, செடி அவரை ஆகியவை பயிர் செய்யலாம். |
||||||||
by Lakshmi G on 07 Nov 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|