LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- மற்றவை

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?

வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும். வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும். ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா..? அதற்கான விடை தான் இந்த கட்டுரை.


நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை. அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது. முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட. கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன.


1. ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்.


2. ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


3. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.


4. மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது. ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.


5. ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள். இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்


6. சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில். 


7. மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர்.

அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை. எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்.

 

இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்.

by Swathi   on 06 Dec 2016  15 Comments
Tags: வளைகாப்பு   சீமந்தம்   Valaikappu   Seemantham           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..? கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..?
கருத்துகள்
30-Apr-2021 07:09:02 Ananthi said : Report Abuse
Vaigashi-3 valaikappu seiyalams
 
19-Aug-2019 11:00:50 Karpaga Valli said : Report Abuse
நான் சீமந்தத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
 
06-Jul-2019 01:05:39 Freeda said : Report Abuse
Enaku mutual kuzhandhaiku valaigappu செய்யவில்லை. Eppothu erandavathu kunzhanthai ku seiyalama.
 
29-Nov-2018 10:31:24 SARANYA said : Report Abuse
மார்கழி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா?
 
12-Nov-2018 06:12:46 Akhila said : Report Abuse
Is valaigappu only for 1st baby
 
16-Aug-2018 20:27:57 perumal said : Report Abuse
Thankyou
 
11-Aug-2018 02:57:13 Malini said : Report Abuse
வளைகாப்பு எங்கே செய்ய வேண்டும்? பிறந்த வீடு அல்லது புகுந்த வீட்டில்? இதன் தீர்வு என்ன?
 
09-Jan-2018 09:36:12 saranya said : Report Abuse
நன்றி இது பலருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்து உள்ளது
 
15-Nov-2017 01:28:40 arun said : Report Abuse
good message
 
13-Jul-2017 11:17:20 வீரபிரபா said : Report Abuse
தகவலுக்கு நன்றி
 
17-Jun-2017 07:36:38 sujatha said : Report Abuse
நாங்க 9 months செஸ் வைத்து ஈடுபட்டோம் குழந்தைக்கு பாதிப்பு இருக்குமா.
 
24-Feb-2017 22:37:56 kayalvizhi said : Report Abuse
3 வயதில் பையன் இருக்கிறான் 2 முறை aprsan பனி இப்ப 6matham கன்சீவ் பிறகும் பேபி கு ஏதும் பாதிப்பு ஆகுமோ இலை பாப்பா ஆரோக்கியமா இருக்கும் ல plz reply
 
16-Feb-2017 03:57:52 திலகவதி said : Report Abuse
நல்ல தகவல்
 
08-Jan-2017 02:30:14 இந்திரா said : Report Abuse
வெரி நைஸ் யு ர் இந்பொர்மதிஒந் தங்க யு
 
01-Jan-2017 04:03:28 Vedhavalli said : Report Abuse
I don't know any moment
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.