LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF
- மற்றவை-வகைப்படுத்தாதவை

*இன்று ஒரு பூச்சி*

தோட்டத்தில் பல வகையான பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான பூச்சிகள் - "சாறு உறிஞ்சும் பூச்சிகள் ". இவைகள்,கொசுக்கள் நம் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சுவதைப் போல செடிகளின் தண்டு,இலைகளில் துளையிட்டு, சத்துக்களை உறிஞ்சுவிடுகின்றன.

இவற்றில் வருடம் முழுவதும், நமது தோட்டத்திற்கு அழையாத விருந்தாளியாக வரும், சூடோகேசிடே குடும்பத்தைச்சார்ந்த Mealy bug எனப்படும்,மாவுப்பூச்சிகள் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

இப்பூச்சிகள் பப்பாளி,மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களை எளிதில் தாக்குகிறது.

காற்று, பறவைகள், விலங்குகள், தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடியது.

இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருளால் கவரப்பட்டிருப்பதால் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு வருடத்தில் இந்த மாவுப்பூச்சி 15 முறை இனப்பெருக்கம் செய்யக்கூடியது.ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகள் இடும் திறன் படைத்தது.இதனால், இவை அதிக அளவில் பெருகி பலத்த சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியது.

*மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்*

இலையின் அடிப்பகுதி, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.

சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.

ஒட்டும் தன்மை கொண்ட திரவத்தை வெளியேற்றுவதால், இவை, இலைகளை கருகிவிடக்கூடிய தன்மை கொண்டவை.

களைகளை அகற்றி தோட்டத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பூச்சிகள் அதிகளவில் தாக்கப்பட்ட செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் இருக்க அகற்றிவிடுங்கள்.

காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது இதன் தாக்குதல் இருக்கும்.

வேப்பங்கொட்டை கரைசல் 5மில்லியை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்

மீன்எண்ணெய் சோப்பு (Fish oil soap), ஒருலிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் அளவில், காதி சோப்புடன் கலந்து தெளித்து வரலாம்.

இஞ்சி 250 கிராம் பூண்டு 250 கிராம் பச்சை மிளகாய் 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் கோமியம் கலந்து இரண்டு நாட்கள் ஊறவைத்து இந்த கரைசலில் 30 மில்லி 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் காதி சோப்பு சேர்த்து 10 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வரலாம்.

 

நன்றி:அறிவழகன் மோகன்

 

by Swathi   on 08 Apr 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று!!!  இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.. இன்று!!! இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..
தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி  தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்! தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்!
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.