எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து துரைசெந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் காக்கிசட்டை.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். காக்கிச்சட்டை படம் பொங்கல் வெளியீடாக வெளிவர இருந்தது. ஆனால், அன்றைய தேதியில் விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’, ஜீவி பிரகாஷ் ‘டார்லிங்’ ஆகிய படங்கள் வெளிவர இருந்ததால் போட்டியை சமாளிக்க முடியாமல் இப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், காக்கிச்சட்டை படம் வருகிற பிப்ரவரி 27-ல் வெளியாவதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
|