நடிகர் ரஜினிகாந்த் லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஞ்சித்குமார் இயக்கத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஸ் நாராயணன் இசை அமைக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. ரஜினிகாந்த் ஜோடியாக கடைசியாக அவர் நடித்த நான்கு படங்களில் வட இந்திய நடிகைகளே நடித்துள்ளனர். இதில் ஸ்ரேயா சிவாஜி படத்திலும், ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்திலும், தீபிகா படுகோனே கோச்சடையான் படத்திலும், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா லிங்கா படத்திலும் நடித்துள்ளனர். அதனால், அவர்கள் வரிசையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் வட இந்திய நடிகைகளில் யாரையாவது நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்களாம். இதற்கு இந்தி நடிகைகளில் பல பெயர்கள் அடிபட்டாலும், அவர்களில் அனேகமாக வித்யா பாலன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் அடிபடுகிறது.
|