|
||||||||||||||||||
கல்வி என்று எதைச்சொல்ல |
||||||||||||||||||
கல்வி என்று எதைச்சொல்ல ---------------------------------------------------- அறியாப்பருவத்தில் நான் அறியாமல் செய்த பிழைதான் இந்தக்காலத்தில் அதை ஈவ் டீசிங் என்கிறார்கள் சகதோழி செய்த புகாரொன்றில் கோபமுற்று ஆசிரியர் அடித்த காயமொன்று வடுவாகி கையில் நிலைத்தது நினைவுகளாய்
அடித்ததில் வெகுண்டெழுந்து நான் வகுப்பறையை உடைக்கவில்லை மண்டியிட்டு அப்போதே மன்னிப்பும் கேட்டுவிட்டேன் பள்ளிகள் கோவிலென்றும் படைத்தவனும் பாடம்சொல்பவனும் சரிநிகர் சமானமென்றும் சொல்லிவளர்த்த காலமது
என்ன தப்பு செஞ்சே என்று அப்பா அடித்த அடி இன்னும் கனவில் வந்தால் கலங்குகிறேன் எந்த வாத்தி அடிச்சான் என்று வரிந்துகட்டிக் கிளம்பிவிடும் அப்பாக்கள் இல்லை அந்த நாளில்
பாலியல் குற்றத்தில் போக்சோவில கைதாகி சிறைபோகும் ஆசிரியர் செய்திகள் தினம்பார்த்து அடிவயிறு கலங்குகிறேன்
பள்ளி சென்றுவரும் என் பருவமகளை நினைக்கும்போதெல்லாம் ஏக்கமாய் தடவிக்கொள்கிறேன் கையில் தடித்திருக்கும் அந்த வடுவை
அந்த ஆசிரியரும் அந்த அப்பாவும் அந்த மாணவனும் வழக்கொழிந்துவிட்ட சமூகத்தில் கல்வி என்று எதைச்சொல்ல
|
||||||||||||||||||
by Pranavan on 26 Apr 2022 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|