தமிழ் வளர்ச்சித்துறைக்கு பிற துறை பொறுப்புகள் இல்லாத தனி அமைச்சரை நியமிக்கவேண்டும் என்பது தமிழறிஞர்கள், உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் வளர்ச்சியை கவனமாக முன்னெடுக்க ஒரு தனி துறை வேண்டும் என்று சிந்தித்து 1996 ல் வெற்றிபெற்று அமைச்சரை அமைக்கும்போது பேராசிரியர். முனைவர்.தமிழ்க்குடிமகன் அவர்களை முதல் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக்கி அழகுபார்த்தார்.
அந்த நிலை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சிவரை தொடர்ந்தது. நிதி பெருமளவு ஒதுக்காவிட்டாலும் தமிழ் வளர்ச்சிக்கென நேரம் ஒதுக்கி அனைத்து பணிகளையும் முடுக்கிவிட ஒரு அமைச்சர் இருந்தார். அதன்பிறகு தமிழ் வளர்ச்சித்துறை பிற துறை அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படுகிறது.
தமிழ் வளர்ச்சித்துறை செய்யும் முன்னோடியான செயல்பாடுகள் அரசுக்கு நற்பெயரையும், உலகத் தமிழர்களுடன் ஆட்சி குறித்தான ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கொண்டுசேர்க்கும் முக்கியமான துறை. இப்படி அரசுக்கு சாதகமாக உள்ள துறையை உரிய முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் ஒரு தமிழார்வம் உள்ள , கல்விப்பின்புலம் உள்ள ஒருவரிடம் கூடுதல் பொறுப்பு இல்லாமல் தனியாக ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பல தமிழ்ச்சங்கங்களும் , தமிழ் அமைப்புகளும் , அறிஞர்களும் கோரிக்கையாக முதலமைச்சருக்கு வைத்துவருகிறார்கள்..
|