|
||||||||
தமிழறிஞர்கள் பேரா. ஆ. தனஞ்செயன் ( 1954) |
||||||||
![]() பேரா. ஆ. தனஞ்செயன் ( 1954) ... சிலப்பதிகாரக் காவியத்தின் ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவர், தமிழில் முதுகலைப்பட்டமும் நாட்டார் வழக்காறுபற்றி ஆய்வு மேற்கொண்டு, 1987 ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வை இவர் தொடங்கியபோது, அந்த நிறுவனத்தில் நான் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டு வந்தேன். அனைவருக்கும் அவர் நல்ல நண்பர். அமைதியான தோற்றம்.. ஆய்வு முடிந்தபின்னர் சிலகாலம் ஊடகங்களில் பணிபுரிந்தார்.
1987 ஆம் ஆண்டு பாளை தூயசவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றுத் துறையில் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது விருப்பமான ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 2013 ஆம் ஆண்டுவரை அங்கேயே பணியாற்றி, துறைத் தலைவராகப் பணி ஓய்வுபெற்றார். 'குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும் ' என்ற ஆய்வு நூலை 1996 இல் வெளியிடத் தொடங்கிய பேராசிரியர் சங்க இலக்கியம், தமிழர் பண்பாடு, நாட்டார் வழக்காறு, ஆவணப்படம், மானிடவியல், இனவரைவியல் ஆகிய துறைகளில் 2014 வரை மொத்தம் ஏழு நூல்களை உருவாக்கியுள்ளார். நாட்டுப்புறவியல் பற்றிய மூன்று தொகுதிகளுக்கு இணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்திய அகாதெமிக்காக 'மிசோ பாடல்களும் நாட்டார் கதைகளும்' என்ற ஒருமொழிபெயர்ப்பு நூலைத் தயாரித்துள்ளார்.
பேராசிரியர் ஆய்வாளராக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த படைப்பாளியாகவும் விளங்குகிறார். 'கட்டுமரங்கள்' 'ஒலிக்க மறுத்த தண்டோராக்கள்' என்ற இரு கவிதைநூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் 'தாமரை', ' சிகரம்', 'வானம்பாடி', முழக்கம், 'கவிதா மண்டலம்', காவியப்பாவை' போன்ற பல
இதழ்களில் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஃபோர்டு பவுண்டேஷன் நிதியுதவியுடன் ' தமிழக நாட்டுப்புற வழக்காறுகளை ஆவணப்படுத்துதல்',' தமிழகத்தில் ஏழு கன்னிமார் வழிபாடு' என்ற இரண்டு பெரிய ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின்
உதவியுடன் ' தமிழகத் தென் மாவட்டங்களில் சாதிய மோதல்கள் பற்றிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு' என்ற ஒரு ஆய்வையும், மத்தியப் பண்பாட்டு நிதியமைச்சகத்தின் நிதியுதவியுடன் 'தமிழக நாடோடிகளின் நிகழ்த்துக்கலைகள் பற்றிய இனவரைவியல் ஆய்வு ' என்ற ஒரு ஆய்வுத் திட்டத்தையும் மேற்கொண்டார். 2009 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரிலுள்ள நாட்டார் வழக்காறு தொடர்பான பன்னாட்டு மாநாட்டில் ஒன்றில் பங்கேற்று, சிறப்பான ஆய்வுரை ஒன்றை வழங்கினார். பணி ஓய்விற்குப்பிறகும் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் தகைசால் பேராசிரியர் பணியைப் பெற்று
(2013-15), ' தென்னிந்திய நாடோடிகளின் வழக்காறுகள் பிரதிபலிக்கும் உலகக்கண்ணோட்டம்' என்ற ஆய்வுத்திட்டத்தை மேற்கொண்டு முடித்துள்ளார்.
இனிய நண்பரான இவரைச் சென்ற வாரம் நெல்லையில் 'மேலும்' இலக்கியவட்டத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு!
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||
![]() ![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 21 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|