|
||||||||
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. |
||||||||
திரு மு.சிவலிங்கம் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்ச்சமூகத்திற்கு பயனுள்ள எழுத்துக்களை ஆரவாரம் இல்லாமல் எழுதியவர். தினத்தந்தி முதல் தமிழ்கம்ப்யூட்டர் வரை பல இதழ்களில் தொடராக கணினி சார்ந்து எழுதியவர். தமிழ்க்கணினி வல்லுநர், தமிழில் எண்ம கணினிதொடர்பாக ஆயிரம் பக்கத்திற்கு மேல் தனி நூலினை இயற்றிய அறிஞர். அதனை அனைத்து கல்லூரிகளுக்கு இலவசமாக அனுப்பியவர். இவரது மறைவு கணித்தமிழ் துறைக்கு பேரிழப்பு. திரு மு.சிவலிங்கம் அவர்கள் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், பன்னூலாசிரியருமான அறிஞர். மு. சிவலிங்கம் அவர்கள்(அகவை 73) 13.02.2024, இரவு 9.30 மணியளவில், சென்னை மாம்பலத்தில் உள்ள தம் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் மு.சிவலிங்கம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிறந்த கவிஞர், சிவகாசி கல்லூரியிலும், மதுரை பல்கலைக்கழகத்திலும் கணிதம் பயின்றவர். எம்.எஸ்.சி பட்டம் பெற்றவர். இந்திய தொலைபேசித் துறையில் இளம் பொறியாளராக பணியை தொடங்கி பல உயர் பதவிகளை வகித்தவர். அதே துறையில் பொறியாளராக பணியாற்றி வந்தவரை மணம் புரிந்து சிறப்பான மண வாழ்க்கையை நடத்தியவர். தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். மார்க்சியச் சிந்தனை மையத்தின் நிறுவனர். தமிழில் மெய்நிகர் உள்ளிட்ட எண்ணற்றக் கலைச்சொற்களையும் உருவாக்கியவர். சி மொழியையும் ஜாவா மொழியையும் லட்சக்கணக்கானவர்களுக்கு நூல்களின் வழிக் கற்றுத்தந்தவர். தமிழ்க் கணிமைத் துறைக்கு இவரின் மறைவு பேரிழப்பாகும்.
மு.சிவலிங்கம் எழுதிய நூல்கள்:
மு.சிவலிங்கம், அவருடைய இணையதளம்: https://www.sivalingam.in/
அன்னாரின் கணித்தமிழ் பங்களிப்பை உள்வாங்கி இளைஞர்கள் தொடர்ந்து பயணிப்பது அவசியம். அன்னாரின் ஆன்மா இறையருளின் இளைப்பாற வேண்டுவோம்.. |
||||||||
by Swathi on 14 Feb 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|