LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

[ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !

www.palakkavalakkam.com

 

  [ம.சு.கு]வின் : 
வெற்றியாளர்களின் பாதை !


‘குறிக்கோள்,  திட்டமிடல், 
துவக்குதல், செயல்படுத்துதல், 
 தொடர்தல், இலக்கை அடைதல்,
அடைந்தநிலையை தக்கவைத்தல்’

உலகின் யதார்த்தம்;

 • வெற்றிபெற்றவர்கள் யாவரும் மாபெரும் அறிவாளிகளாகவோ, பேராற்றல் படைத்தவர்களாகவோ இருப்பதில்லை. 
 • பல வியாபார வெற்றியாளர்கள் பள்ளிக்கல்வியைக்கூட பூர்த்தி செய்யவில்லை. 
 • பல கண்டுபிடிப்பாளர்கள், கல்லூரிகளில் கால்வைத்ததுகூட கிடையாது. 

அதேசமயம், படிக்காதவர்கள் எல்லோருமே வெற்றிபெற்று விடுவதில்லை. இதுவுமில்லை அதுவுமில்லை என்கிறபோது, பின் வெற்றிக்கான வழிதான் என்ன ? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். 

வெற்றிக்கான பதில் இன்னதென்று காலந்தொட்டு பல அறிஞர்கள் கூறிவருகின்றனர். பலரின் கருத்துக்களில் முயற்சி, பயிற்சி, அஞ்சாமை, சாமர்த்தியம் என்று எண்ணற்ற வழிமுறைகளை கேள்விப்பட்டிருக்கின்றோம். இவைகள் யாவற்றையும் பல வெற்றியாளர்களின் கதைகளோடு கேட்கும்போது மிகுந்த சுவாரஸ்யமானதாகவும், உத்வேகமுட்டுவதாகவும் இருக்கிறது. அதே சமயம் நம் குறிக்கோள் செயல்பாடு என்று வருகின்றபோது, இவைகள் யாவற்றையும் நம்மால் எதிர்கொண்டு செயல்படித்தி வெற்றிக்கான இயலுவதில்லை. அப்படி நமக்கும், வெற்றியாளர்களுக்கும் இடையே என்னதான் வித்தியாசமோ? என்று நாம் பல சமயம் சிந்தித்து குழம்புகின்றோம். 

வெற்றியும் - அதிர்ஷ்டமும்;

நம் ஊரில் மருத்துவர்கள் இருப்பார்கள். ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே பிரசித்திபெற்று அதிகவருவாய் ஈட்டுகிறார்கள். கல்வியிலும், பயிற்சியிலும் சமமானவராயினும், ஒரு சிலரால் அந்த மேல்நிலையை அடைய முடிவதில்லை. இது மருத்துவத்துறையில் மட்டுமல்ல ! எல்லா துறைகளிலும் மேம்பட்ட அறிவுநிலை உடையவராயினும், சிலரால் அந்த வெற்றிநிலையை அடைய முடிவதில்லை (சட்டம், கலைகள்,....). வாழ்வின் யதார்த்தம் இவ்வாறு இருக்க, நம்மில் பலருக்கு வழக்கமாக எழும் கேள்வியும், அதற்கான சமாதானமும் பொதுவான ஒன்றே, ‘பெரிய வெற்றிகான ‘அதிர்ஷ்டம்’ வேண்டும்.
 
உண்மையில் ‘அதிர்ஷ்டம்’ வெற்றிக்கணியை தந்துவிடுமா ? 
 மேம்பட்ட கல்வியறிவு வெற்றியை உறுதிசெய்வதில்லை ! 
 நிரூபிக்கப்பட்ட திறமைகளும் வெற்றியை உறுதிசெய்வதில்லை ! 
அதிர்ஷ்டமும் வெற்றியை உறுதிசெய்வதில்லை !

பின் வெற்றிக்கான வழிதான் என்ன? உண்மையில் சொன்னால், இந்த கேள்விக்கான நேரடி பதில் உலகில் எவரிடமும் இல்லை. எல்லா பதில்களும், விளக்கங்களும் பலரின் அனுபவம் சார்ந்த கருத்துக்களாகவே இருக்கின்றன.

வெற்றியும் – திறமையும்;

வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் எல்லா வெற்றியாளர்களும் திறமைசாலிகளாகவே உள்ளனர். ஆனால் இதன் எதிர்மறை வேறாக உள்ளது. எல்லா திறமைசாலிகளும் வெற்றியாளராக இல்லை ? ஏன் ?

சில சமயங்களில், திறமை குறைந்தவர்களுக்கு வெற்றி அதிர்ஷ்டத்தில் கிட்டிவிடுகிறது. அது ஒருமுறை ஏற்படும் எதேட்சையான நிகழ்வுதானே தவிர, மீண்டும் மீண்டும் தொடர்வதல்ல. இந்த அசாதாரன நிகழ்வுகளைக்கொண்டு நாம் அதிர்ஷ்டமற்றவர் என்று எண்ணி மனம் துவள்வதில் எந்த பயனுமில்லை. இப்படி வெற்றியின் சூத்திரம் மிகவும் குழப்புவதாக இருக்கின்ற நிலையில், வெற்றியை சுவைக்க எண்ணும் ஒவ்வொருவரும் வெற்றிப் படிநிலைகளை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இந்த படிநிலைகளை பல வெற்றியாளர்களின் வாழ்க்கை பயணத்தில் இருக்கும் பொது நிலைமையை அறிவதில் துவங்குகிறது.

சராசரியைவிட ஒரு படி மேலே !!

முதலாவதாக, எல்லா வெற்றியாளர்களும் பொதுவில் சராசரியர்களைவிட சற்றே கூடுதல் திறன் படைத்தவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு வெற்றியாளரும் அவருடைய துறையில் சராசரியானவர்களை விட குறைந்தது ஒரு சதவிகிதமேனும் அறிவும், திறமையும் கூடுதலானவர்களாகவே உள்ளனர். வெற்றிக்கு முதல்படி, நாம் தேர்வுசெய்யும் துறையில் சராசரியானவர்களைக் காட்டிலும் சற்றேனும் முன்னிருக்க வேண்டும். அதாவது கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் அவசியமாகிறது.

கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் !!

நான் மருத்துவத்துறையில் வெற்றிபெற குறைந்தபட்சம் முதலில் ஒரு மருத்துவராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவ அறிவைக்கொண்டு, நான் அலோபதி மருத்துவத்துறையில் கோலோச்ச விரும்புவது முற்றிலும் அர்த்தமற்றது. அடிப்படை கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் வெற்றிக்கு முதல்படியாகிறது. குறைந்தபட்ச உடல் தகுதியில்லாமல் விளையாட்டில் சாதிக்க இயலாது.

இந்த கதவுநிலை தகுதியை கடந்தவர்கள் மட்டுமே வெற்றுயை தோக்கிய ஓட்டப்போட்டியின் தகுதிச்சுற்றிற்கு நுழைய முடிகிறது. இந்தநிலை வெறும் நழைவுச்சீட்டு மட்டுமே. வெற்றியின் உறுதிச்சான்றிதழ் அல்ல. இந்த தகுதிநிலையோடு நம்முன்னே நூறுபேர் நிற்பார்கள். இங்குதான் வெற்றியாளர்களுக்கும் ஏனையவர்களுக்குமான வேறுபாடு துவங்குகிறது.

விலகுபவர்கள் மத்தியில் தொடர்வது !

‘வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செய்வதைக் காட்டிலும், சாதாரண செயல்களையே வேறுபட்ட விதத்தில் செய்து வெற்றிகொள்கிறார்கள்.’

 • மற்றவர்கள் சோர்ந்து ஓய்வெடுக்கும் நேரத்தில், இவர்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள் !!
 • நாம் போகும் பாதை சரியா ? தவறா ? என்று சிலர் குழம்பியிருக்கும் தருணத்தில், இவர்கள் குழப்பமின்றி உழைக்கிறார்கள் !!
 • சிறு, சிறு தோல்வி கண்டு அஞ்சி விலகிபவர்கள் மத்தியில் இவர்கள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள் !!

எல்லா வெற்றியாளர்களின் இரண்டாவது பொதுநிலை இதுதான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் தளர்ந்து ஒதுங்குகின்றபோது, இவர்கள் தங்களது முயற்சியையும், தன்னம்பிக்கையையும் தளரவிடாமல் தொடர்ந்து வெற்றியிலக்கை அடைகிறார்கள்.

தொடர் பயிற்சி வெற்றியை உறுதியாக்குமா ?

இப்படி இடைவிடாது தொடர்பவர்கள் எல்லோரும் வெற்றியை சுவைக்கின்றனரா ? என்று கேட்டால், கட்டாயம் வெற்றிபெறுகிறார்கள். இப்படி தொடர்ந்து பயிற்சித்துத்தான் இலட்சத்தில் ஒருத்தர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறுகிறார். தொடர்ந்த பயிற்சி, மாநிலம் மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றியை கொடுத்து ஒலிம்பிக்வரை அனுப்புகிறது. இப்படி கடுமையான பயிற்சியுடன் எல்லா நாட்டிலிருந்தும் எண்ணற்ற வீரர்கள் வருகின்றனர். எல்லோரிடைய கணவும் தங்க பதக்கம் வென்று தங்கள் நாட்டு தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய வேண்டுமென்பதே. எல்லாருமே கடுமையான பயிற்சி பெற்றவர்களாயிருந்தாலும் இறுதியில் ஒருவர் தான் வெற்றி பெறுகிறார். ஏன் அந்த இறுதி வெற்றிக்கணி மற்றவர்களுக்கு கிட்டுவதில்லை? அந்த இறுதி வெற்றிபெற்ற ஒருவர் அப்படி என்ன தனிபட்ட திறன் பெற்றள்ளார்?

தினமும் 1% ஆற்றலை மேம்படுத்துதல் !

வரலாற்றைப் பாருங்கள். நீச்சல் போட்டியில் தொடர்ந்து ஒருவரே தங்கங்களை வென்றுகுவிக்கிறார். தொடர்ந்து இரண்டு-மூன்று ஒலிம்பிக்குகளிலும் அவர் வெற்றிகொள்கிறார். இதை பல தடகள போட்டிகளில் தொடர்ந்து காண முடிகிறது. அந்த தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றியின் இரகசியம்தான் என்னவோ ? இந்த வெற்றியாளரிடம் தான் வெற்றியின் கடைசி சூத்திரம் உள்ளது. ஆம்! தொடர்த்து பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு சதவிகிதமேனும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். எவனொருவன் அன்றாடப் பயிற்ச்சியில் தொடர்ந்து சிறு சிறு முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறானோ, அவனே போட்டிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடிகிறது.

ஆம் ! எல்லோரும் பிறக்கும் போதே பெறும் ஆற்றலுடன் பிறப்பதில்லை. அன்றாடம் நம் ஆற்றல்களை தொடர் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருமுறை பயிற்சி செய்யும்போதும், நமது இலக்கு நேற்றைய பயிற்சியைவிட 1% மேம்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சிறிய 1% மேம்பாடு, நாளடைவில் நமது திறனை பண்மடங்காக உயர்த்தியிருக்கும். நாம் ஒரு வருடத்தில் நமது திறனை குறைந்தபட்சம் 37 மடங்கு அதிகரித்திருக்கும்.

வெற்றிக்கான பாதை;
வெற்றிக்கான வழிமுறைகள் இன்னதென்று இலக்கணத்தை நம்முன்னோர் வகுத்து வைக்காவிடினும், பலரின் அன்பவங்கள் நம்மை அந்த பாதையை நோக்கி வழிநடத்தும். பல வெற்றியாளர்களிடம் பொதுவாக கண்ட வெற்றிபாதையின் படிகளானவை ;
 1. சராசரியைவிட ஒரு படி மேலே இருத்தல் !
 2. கதவுநிலையை (Threshold) கடந்திருத்தல் !
 3. விலகுபவர்கள் மத்தியில் தொடர்வது !
 4. தினமும் 1% ஆற்றல் மேம்பாடு !

இவை நான்கும் வேதமொழிகள் அல்ல. அனுபவரீதியிலான வெற்றியாளர்களின் பொதுவுடைமைகள்.
 
இதை நாம் நமது வாழ்வில் எவ்வாறு செயல்படுத்தி வெற்றிகொள்கிறோம் என்பதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியுள்ளது.  

   -  ம.சு.கு
https://bit.ly/palakkavalakkam-வெற்றியாளர்களின்_பாதை
(www.palakkavalakkam.com)
(palakkavalakkam@gmail.com)
by Palakkavalakkam   on 24 Sep 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்! செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்!
தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1  -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1 -இராம.கி
12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள் 12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள்
சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது..... சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.....
விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும் விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும்
பாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.