LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு லக்னம்

தெய்வ சிந்தனையும், எடுத்த காரியத்தை முடிப்பதில் ஆர்வமும் திறமையும் உடைய உங்கள் லக்னத்திற்கு 9ம் இடத்தில் ராகுவும் 3ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வது மிகவும் நற்பலங்களாகும். அடிக்கடி ஆன்மீகப் பயணம் அமையும். நீண்ட தூர ஸ்தலயாத்திரை செய்ய வாய்ப்பும் சந்தர்ப்பமும் நடக்கும். அதனால் நன்மைகள் ஏற்படும். பேச்சில் சற்று கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதே சமயம் சற்று பற்றாக்குறை பட்ஜெட்டாவே அமையும். எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று தாமதமானாலும் இறுதியில் சாதகமான பலங்கள் வந்து சேரும். உடன்பிறந்த சகோதர சகோதரர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பாராத நேரத்தில் வந்து சேரும். உடன்பிறந்தவர்களுக்கு இதுவரை தள்ளிப்போன சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். புதிய உறவுகள் ஏற்படும். அதனால் எதிர்பாராத நன்மையும் பயனும் அமையும்.

புதிய விஷயங்களைக் கற்பதில் தடையேற்பட்டு விலகும். புதிதாக இடம், வீடு, வண்டி வாகனங்கள் வாய்ப்பும் வந்து சேரும். தாயாரின் அன்பும் ஒத்துழைப்பும் எதிர்பாராமல் வந்து சேரும். தேவையற்ற விஷயங்களைப் பேசுவதும் செயல்படுத்துவம் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வலம்வரும் வேளையில் உங்களைப்பற்றிய வீண் வதந்திகளும் செய்திகளும் வந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றிற்கு இடம் கொடாமல் கவனமுடன் செயல்படுதல் வேண்டும். பயணங்களில் அதிகக் கவனம் தேவை. விபத்து அடிபடுதல் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விலகும்.

தள்ளிப்பொன வீடு வாங்கும் எண்ணம் சற்று தலைதூக்கும். இறுதியில் கடன்வாங்கி வீடு கட்ட அல்லது கட்டிய வீடு வாங்க வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். விருந்து கேளிக்கை போன்ற விஷயங்களில் மனது அதிக அளவில் ஈடுபாடு கொள்ள வைக்கும். கலைத்துறையில் ஆர்வங்கள் அதிகரிக்கும், குழந்தைகளின் அன்பும் ஆதரவும் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பார்த்த பாஸ்போர்ட், விசா இவைகள் வந்து சேரும். விளையாட்டுக்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய கடன்  வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும். மறைமுகமாக எதிர்களின் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். நண்பர்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும்.

உத்யோகம், வேலை (JOB)

அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் இருப்பவர்கள் இருசாரர்க்கும், உத்யோகம் என்ற வார்த்தையே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளையில்லாமல் கஷ்டப்பட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். புதிய வேலையில் சற்று திருப்தி இல்லாமல் இருந்தாலும் கிடைத்த வேலையை முதலில் பார்த்தல் நலம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேறம் ஏற்படும். ஒரு சிலருக்கு நல்ல ஊதிய உயர்வும் அமையும். புதிய கம்பெனிக்கு வேலையில் சேர ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். “ஆன்சைட்” கிடைக்க சந்தர்ப்பங்களும் அதனால் மனமகிழ்ச்சியும் கிட்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் கூடாது. உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்காது. எனவே வேலையில் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு நன்கு அமையும்.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சற்று தாமதம் ஆகும். சிறுதொழில் சுயதொழில் குறுந்தொழில் புரிபவர்கள் லாபம் அடைவதில் சுணக்கம் ஏற்படும். அதே சமயம் உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். புதிய தொழில்கள் தொடங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பங்கள் அமையும். பார்ட்னர்ஷிப்புடன் சேர்ந்து தொழில் புரிய வாய்ப்புகள் அமையும். அது சற்று சுமாராகவே இருக்கும். பங்குச்சந்தை நல்ல லாபகரமாக இருக்கும். நீண்டகால பத்திரங்களில் முதலீடு செய்தல் உத்தமம் ஆகும். போக்குவரத்து, செய்தி மக்கள் தொடர்பு, ஐ.டி. துறைகள் ஏற்றம் பெற்று விளங்கும். இரும்பு எஃகு சிமெண்ட், கெமிக்கல் துறைகள் லாபகரமாகவும், மணல், சுரங்கம், கிரானைட் துறைகள் ஏற்றமாக்வும் கமிஷன் ஏஜென்ஸி புரோக்கரேஜ் கன்சல்டன்சி, கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட் சற்று சுணக்கமாகவே காணப்படும். மருத்துவம், பொறியியல், கட்டுமானத் துறைகள் சுமாராக இருக்கும். ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், அழகுசாதனப் பொருட்கள் துறைகள் நல்ல லாபகரமாக மையும். துறைமுகம், கப்பல், மீன்பிடித் தொழில் சுமாராக இருக்கும். நெசவுத் தறித் துறைகள் லாபகரமாக அமையும்.

விவசாயம்

விவசாயம் சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக அமையும். விளைச்சலுக்கேற்ற நல்ல விலை கிடைக்கும். பூக்கள், பழங்கள், காய்கறிகள், தோட்டப்பயிர்கள் லாபகரமாக இருக்கும். பழைய கடனை அடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். ஒரு சிலர் புதிதாக விளை நிலங்களை வாங்க வாய்ப்புகள் அமையும்.

அரசியல்

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அதே சமயம் தேர்தலில் நிற்பதாக இருந்தால் அதிகக் கவனம் தேவை. ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாகவே உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மறைமுகமாக எதிர்கள் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் மகிழ்ச்சியுடன் இருந்தாலும் தொண்டர்களின் ஒத்துழைப்பு சற்று குறைந்தே காணப்படும்.

கலைஞர்கள்

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஓவியம், சினிமா, நாடகம், நாட்டியத் துறையில் இருப்பவர்களுக்கு பெயரும் புகழும் வந்து சேரும். புதிய பட்டங்கள் கிடைக்கப் பெறும். சின்னத்திரை சாதகமாக இருக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விளையாட்டில் அதிகக் கவனம் தேவை. புதிதாகப் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பும் அதனால் இடமாற்றமும் அமையும். ஜோதிடம் ஆன்மீகம் போன்ற கலைத்துறைகள் சிறப்புடன் விளங்கும். மத சம்பந்தமான ஆன்மீகவாதிகளுக்கு சிறப்பான ஏற்றமான காலமாகும்.

மாணவர்கள்

புதிய விஷயங்களைக் கற்பதில் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் உடலையும் மனதையும் வைத்துக் கொள்ளல் வேண்டும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று கவனமுடன் சென்று வருதல் வேண்டும். தேவையற்ற நட்பை தவிர்த்தல் நலம். உயர்கல்வி பயில வாய்ப்பும் படிப்பின் காரணமாக வெளிநாடு செல்லவும் வாய்ப்பு அமையும். உயர் படிப்பின் பிரச்சனையில் காரணமாக தாய், தந்தையரை பிரிந்து புதிய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்தவும் சந்தர்ப்பங்கள் அமையும்.

பெண்கள்

இதுவரை நடவாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். திருமணம் நடப்பதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்பும் குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ரபாக்யமும் அமையும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களால் உடலில் தேவையற்ற சோர்வும் நிம்மதியற்ற சூழ்நிலையும் அமையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணத்திற்கு வாய்ப்பு அமையும். புதிய உறுப்பினர்களால் குடும்பத்தில் தேவையற்ற நிம்மதிகள் குறைந்து போகும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் அமையும். ஒரு சிலருக்கு ஆன்சைட் மூலம் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் இடமாற்றமும் அமையும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். சக ஊழியர்களி அன்பும் நட்பும் ஒத்துழைப்பும் நன்கு அமையும்.

உடல் ஆரோக்யம்

உடலில் சொரி, சிறங்கு, அரிப்பு, தேம்பல் வராமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். சளித்தொல்லைகள் அலர்ஜி இல்லாமல் இருத்தல் நலம். முதுகு, வயிறு, முழங்கால் போன்ற உடல் உறுப்புகளில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும். எதிலும் அலட்சியம் காட்டமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுதல் நலம்

அதிர்ஷ்ட எண்    :    5, 6
அதிர்ஷ்ட நிறம்    :    பச்சை, வெண்மை
அதிர்ஷ்ட நாள்    :    புதன், வெள்ளி
அதிர்ஷ்ட ரத்தினம்    :    மரகதப்பச்சை, வைரம்

பரிகாரம்

“செவ்வாய்க்கிழமை” தோறும் “முருகப்பெருமானை” தரிசித்தல் நலம். “ஞாயிற்றுக்கிழமை” தோறும் “ஆதித்யஹ்ருதயம் ஸ்தோத்திரம்” சொல்வதும் “சூரிய வழிபாடும்” “சிவன் கோயிலுக்குச்” சென்று சிவனை வழிபடுதும் சிறப்பானதாகும்.

 

- ஜோதிட இமயம் அபிராமி சேகர்

maduraiabiramisekar@gmail.com

9994811158

by Swathi   on 01 Dec 2015  0 Comments
Tags: Tamil Rahu Ketu Peyarchi 2016   Rahu Ketu Peyarchi   2016 Rahu Ketu Peyarchi   Thanusu Rasi   Thanusu Rasi Rahu Ketu Peyarchi   ராகு - கேது பெயர்ச்சி   ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2016 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள் 2016 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷ லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷப லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷப லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுன லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கடக லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கடக லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்ம லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்ம லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி லக்னம்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மீன லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - மீன லக்னம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.