ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
உயர்ந்த சிந்தனையும் எதனையும் தலைமைப் பொறுப்பு ஏற்று வழிநடத்தும் ஆற்றலும் உடைய சிம்ம லக்ன நேயர்களே உங்கள் ராசியிலேயே ராகுவும் 2ம் இடத்தில் குருவும் 5ம் இடத்திலே சனியும் 7ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சிறப்பான ஒன்று ஆகும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்இ அந்நிய மொழி பேசுபவர்களால் எதிர்பாராத நன்மைகள் அமையும். பேச்சில் இனிமை கூடும். பணப்புழக்கம் தாராளமாக இருந்துவரும். குடும்பத்தில் புது உறுப்பினர்கள் வருகை அமையும்.
எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றிபெற கடுமையாக உழைக்க ஆரம்பிப்பீர்கள்இ அடிக்கடி பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் அமையும். அதனால் உங்களுக்கு நன்மையேற்படும். புதிய விஷயங்களில் தலையிட்டு அதை வெற்றிபெறக் கடுமையாக உழைப்பீர்கள். ஒரு சிலருக்கு மனைஇ வீடுஇ வண்டி வாகனங்கள் வாங்க சந்தப்பங்கள் ஏற்படும். வேலையின் காரணமாக இடமாற்றம் ஊர்மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். கொடுத்த பணம் பொருள் சாதகமாக வந்து சேரும்.
தாயாரால் நன்மையேற்படும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பம் அமையும். புதிய நட்புகள் உருவாகும். அதனால் நன்மை அமையும். அடிக்கடி உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியளிப்பாதாக அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அமையும். தள்ளிப்போன திருமணங்கள் இனிதே நடந்தேறும்.
வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். தந்தையாரால் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் கிட்டும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். விசா பாஸ்போர்ட் சீக்கிரம் வந்து சேரும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
குரு நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் அமையும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட வேண்டியது வரும். எனவே வேலையில் அதிகக் கவனம் தேவை. அடுத்த வேலை கிடைக்கும் வரை பார்க்கும் வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். சக ஊழியர்களால் நன்மைகளும் அதே சமயம் ஒரு சிலரால் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். வேலையின் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அதிகக் கவனம் தேவை. முதலீட்டில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவையற்ற முதலீட்டைத் தவிர்த்தல் அவசியமாகும். சுய தொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்வதில் சற்று எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் கொடுப்பதில் கவனம் தேவை. அதே சமயம் சிறுதொழில்கள் சுயதொழில்கள் சற்று லாபகரமாக இருக்கும். இரும்பு எஃகுஇ உருக்குஇ ரசாயனம்இ சிமெண்ட் மருத்துவம் சார்ந்தவை லாபகரமாக அமையும். கமிஷன் ஏஜென்ஸிஇ கான்ட்ராக்ட்இ கன்சல்டன்சிஇ புரோக்கர்ஸ் தகவல் தொடர்பு போக்குவரத்துஇ ஓட்டல்இ உணவுஇ ஆடைஇ ஆபரணம்இ அழகுசாதனங்கள் துறைகள் லாபகரகமாக அமையும். ரியல் எஸ்டேட் கட்டுமானம் சற்று சுமாரகவே இருந்து வரும். வங்கிஇ இன்சூரன்ஸ்இ கல்விஇ நிதிஇ நீதித்துறைகள் நல்ல லாபகரமாக அமையும்.
விவசாயம்
விவசாயத்தில் ஓரளவு லாபம் இருந்து வரும். அதே சமயம் ஒரு சிலர் புதிதாக இடம் மனை வாங்க அவற்றில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் கிட்டும். தேவையற்ற கடனை தவிர்த்தல் நலம். விளைச்சலுக்கேற்றவாறு ஓரளவு வருமானம் இருந்து வரும். விவசாயக் கடன்கள் கிடைக்கக் கூடிய காலமிது.
அரசியல்
அரசியல் வாழ்வு சாதகமாக இருந்து வரும். பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் கூடும். எதிர்கள் தலையெடுத்த வண்ணம் இருப்பர். இருப்பினும் அவர்களை எளிதில் வெல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிட்டும். தொண்டர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருந்து வரும். புதிய பதவிகள் பொறுப்புகள் தாமகவே ஒரு சிலருக்கு வந்து சேரும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர். புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே வந்து சேரும். அதனால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். பணச்சுழற்சி சாதகமாக இருந்து வரும். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளியூர்இ வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். விருதுகள் பட்டங்கள் வாங்கவும் வாய்ப்புகள் உண்டு.
மாணவர்கள்
அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும்இ விளையாட்டுகளில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். அதே சமயம் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதோ தலையிடுவதோ கூடாது. ஞாபகசக்தியை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும். எதிர்பார்த்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் இடம் கிடைக்க சந்தப்பம் கிட்டும். கல்விக்கடன் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஆகி பின்பு கடன் கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும்.
பெண்கள்
வேலை தேடுபவர்களுக்கு சற்று தாமதமாக வேலை அமையும். மேலும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை இருந்து வரும். எனவே பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. அடிக்கடி லீவு போடவேண்டியது வரும். எனவே லீவு போடுவதை தவிர்ப்பது நன்றாகும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். சுயதொழில்இ சிறுதொழில் புரிபவர்கள் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும். தடையாகி வந்த திருமணம் குழந்தைபாக்யம் போன்ற விஷயங்கள் மகிழ்ச்சியாக அமையும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவு சுமூகமாக அமையும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணம் அமைவதற்கான காலம் இதுவாகும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சக ஊழியர்களால் நன்மையேற்படும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அடிக்கடி ஒரு சிலருக்கு அமையும். உடலில் அசதி சோர்வு. இவை அடிக்கடி தோன்றும்இ உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.
உடல் ஆரோக்யம்
உடலில் கால்,அடிவயிறு,முதுகு போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடலில் தேம்பல் வைரஸ் காய்ச்சல் ஒரு சிலருக்கு வந்து போகும். சளித்தொல்லைகள் இல்லாமல் உடலைப் பேணுதல் வேண்டும். தேவையற்ற கவலைகளை விட்டுவிடுதல் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 5, 9 அதிர்ஷட நாள் : புதன், செவ்வாய் அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சிவப்பு அதிர்ஷட இரத்னம் : மரகதப் பச்சை, பவளம்
பரிகாரம்
குலதெய்வ வழிபாடு அவசியம் செய்தல் வேண்டும். முன்னோர்கள் சமாதி அல்லது சித்தர்கள் ஜீவசமாதி அல்லது காளி துர்க்கை வழிபாடு செய்தல் நலம். மசூதி சென்று பிரார்த்தனை செய்துவர நன்மையேற்படும்.
|