(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட நெறிமுறைகளுடன் வாழ்பவரும், தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவரும், தன்னம்பிக்கை மிக்கவருமான சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
தங்கள் இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதியுமான குரு – ஆவணி 27 ஆம் நாளன்று தைரிய பாவமான துலாத்துக்கு மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு நற்பலன்களை அள்ளி வழங்கினார். இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும்.பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே சிறப்புத் தரும். சகோதர, சகோதரிகளினால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களின் நயவஞ்சகத்தனத்தால் ஏமாற்றப்படுவீர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. புதிது புதிதாக தேவையற்ற செலவுகள் வந்து கைப்பணம் கரையும். தொழில் வளர்ச்சிக்காகச் கூடுதலான முதலீடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை எழும். முதலீடுகளை தவிர்ப்பது பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்கும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களுக்குப் பிறகே சாத்தியமாகும். எவரையும் நம்பி பிணைக் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம். அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். உறவுகளும் பகையாகும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். தான தர்மமென தர்மச் செலவுகள் அதிகரிக்கும். மாணவ மாணவிகளுக்கு தகவல் தொடர்பு சாதனங்களான அலைபேசி போன்றவற்றில் அதிக காலம் செலவழிப்பதால், கல்வியில் ஈடுபாடு குறைந்து, கழுத்து வலியே மிச்சமாகும். சிலருக்கு, கௌரவ பங்கம், ஊரார் சிரிக்கும் அளவுக்கு அவமானங்கள் ஏற்படும். முரடராய் இருந்தாலும், தைரியமற்ற கோழை ஆகிவிடுவார். சந்தோஷமற்ற, குறிக்கோளற்ற அலைச்சல்களால் சரீரக் களைப்பு ஏற்படும்.
குரு தனது 5 பார்வையாக களத்திர பாவத்தை பார்வையிடுவதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன தோழர்கள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். சேவைகள் மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவியிடையே காதலும், பாசமும் கரைபுரண்டு ஓடும். காதல் விவகாரங்கள் கல்யாணத்தில் முடியும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம்.
குரு 7 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் சென்று தெய்வீக அருளைப் பெறுவீர்கள். தந்தையின் புகழ் ஓங்கும். பிள்ளைகளின் மீது காட்டும் அதிக அன்பால் அவர்கள் மனம் மகிழும். தாயாரின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தந்தை வழி சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து சாதகமாய் அமையும். தந்தை மூலமான எதிர்பாராத ஆதாயங்கள் இருக்கும். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய அம்மாவாசை படையல்களை முறையாகச் செய்துவர சந்ததிகள் வளம் பெருகும்.
குரு 9 ஆம் பார்வையாக இலாப பாவத்தைப் பார்ப்பதால் கலைத் துறையினர், ஆடம்பர பொருட்களை விற்பவர்கள், இனிப்பு தயாரிப்பாளர்களின் விற்பனை சூடு பிடித்து இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் காரணமாக அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் தங்கள் திருமண வயது எய்திய பிள்ளைகளுக்குத் திருமணங்கள் ஏற்பாடாகி, மங்கள காரியங்கள் நிறைவேறும். புதிதிர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம் ஏற்படும்.
சிம்ம இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான பாத்திரங்கள் சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலையில்லாதவர்களுக்கு வேலை கிட்டும் வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் கிட்டும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் நன்கு அமையும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ளல் கூடாது. ஒரு சிலருக்கு வேலையில் மாற்றமும் வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிட்டும். பரிட்சை எழுதி பாஸ் ஆகி நீண்டநாள் வேலையை எதிர் பார்த்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றம் பெறும். சுய தொழில் சிறுதொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். சுயதொழில் புரிபவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழில் மேற்கொள்வர். இரும்பு எஃகு சிமெண்ட் மருத்துவம் பொறியியல் துறைகள் ஏற்றமாக அமையும். ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், கைவினைப் பொருட்கள் துறை ஏற்றம் பெறும். கமிஷன், ஏஜென்ஸி, போக்குவரத்து, பத்திரிக்கை வண்டி வாகனங்கள் ஏற்றமுடையதாக அமையும். நிதி, நீதி, வங்கித் துறைகள் லாபகரமாகவும் இன்சூரன்ஸ், பங்குச்சந்தை சுமாரகவும் இருக்கும். ரோட்டோர வியாபாரம் லாபகரமாகவும் விளம்பரம் செய்தி, பத்திரிக்கை நல்ல ஏற்றமுடனும் அமையும். ரியல் எஸ்டேட் சற்று சுமாராக இருக்கும். லாட்டரி, ரேஸ் சற்று சுமாரகவே இருக்கும்.
விவசாயம்
விவசாயம் ஓரள்வு சுமாராகவே இருக்கும். லாபம் சற்று குறைந்து காணப்படும். கடன்வாங்க சந்தர்ப்பம் அமையும். பழைய நிலங்களை விற்றுவிட வாய்ப்புகள் வந்து சேரும். பழம் காய்கறிகள் தோட்டப்பயிர்களால் சற்று லாபம் அதிகரிக்கும்.
அரசியல்
அரசியல் வாழ்க்கை சற்று சுமாராகவே இருக்கும். கட்சியை விட்டு நீங்க அல்லது நீக்க வாய்ப்பு ஏற்படும். மக்களின் ஆதரவும் சற்று குறைந்து காணப்படும். வழக்குகள் இழுபறியாகவே இருக்கும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் விளங்குவர்.
கலைஞர்கள்
கலைத்துறை ஓரளவு சாதகமாக இருக்கும். நாடகம், சினிமா, இசை, ஓவியம், சிற்பம், ஜோசியம், இன்னும் பிற கலைத்துறைகள் சற்று ஏற்றமாகவும் ஒரு சிலர் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வெளியூர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புகள் அமையும்.
மாணவர்கள்
கல்வி நன்கு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பும் நல்ல மதிப்பெண் பெறவும் வாய்ப்புண்டு. படிப்பின் காரணமாக வெளியூர், வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு கிட்டும்.
பெண்கள்
சுபகாரியங்களில் அடிக்கடி ஈடுபட வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். பணப்புழக்கம் கையில் தாரளமாக இருக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை வந்து சேரும். கணவன் மனைவி உறவில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் சற்று ஒதுங்கியே இருத்தல் நலம். உடலில் வயிறு, கால் போன்ற பகுதிகளில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் சலிப்பு ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதே சமயம் உயர் அதிகாரிகள் மற்றும் சீனியர்களிடம் தேவையில்லாமல் பிரச்சனை வளர்த்துக் கொள்ளாமலும் சற்று அடக்கியே வாசித்தல் வேண்டும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பராப்தி அமையும். அவசரப்பட்டு வேலையைவிட்டு விடாமல் அடுத்த வேலை கிடைத்தபின் வேலையை விடுதல் நலம்.
உடல் ஆரோக்யம்
தலை, முகம், காலில் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். அதிக அலைச்சல் இல்லாமல் இருத்தல் நலம். சளித் தொல்லைகள் இல்லாமல் உடலை பேனுதல் வேண்டும். நரம்பு மற்றும் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அதனால் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை
சிம்மத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (3) 60%
|