வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, அலை, யாவரும் நலம், மனம் படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் குமாரிடம் கதை கேட்டு நடிக்க சம்மதமும் தெரிவித்திருந்தார்.
அந்தப் படத்துக்கு தற்காலிகமாக அப்போது 24 என்று தலைப்பிட்டிருந்தனர். இப்போது அதையே நிரந்தரமாக்கிவிட்டனர்.
இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த த்ரில்லர் படமாக உருவாகும் 24-ஐ சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|