|
||||||||
விண்வெளியில் மனிதன் நடை மேற்கொண்டு இன்றுடன் 60 ஆண்டுகள் |
||||||||
![]() மனிதன் விண்வெளியில் நடை மேற்கொண்டு இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1965ம் ஆண்டு இதே நாளில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியோனோவ் விண்வெளியில் நடைபயின்று சாதனை மேற்கொண்டார்.
1965 மார்-18 விண்வெளி அறிவியலில் மனித இனம் புதிய வரலாற்றுச் சாதனை படைத்தது. சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ரஷ்ய வீரர் அலெக்ஸி லியோனோவ் விண்வெளியில் முதன்முதலாக நடந்து சாதனை படைத்தார்.
பூமியிலிருந்து 480 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலத்திலிருந்து வெளியே வந்த அலெக்ஸி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
அலெக்ஸி விண்கலத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் 24 நிமிடங்களை விண்வெளியில் செலவிட்டார்.
பல்வேறு விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு அலெக்ஸி லியோனோவ் 2019ம் ஆண்டு தனது 85 வயதில் மறைந்தார்.
இன்றைய நவீன யுகத்தில் விண்வெளியில் வீரர்கள் நடப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டாலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியோனோவ் மேற்கண்ட முதல் விண்வெளி நடை விண்வெளி வரலாற்றில் என்றும் அழிக்கமுடியாத அடையாளம் என்பது நிதர்சனம்.
|
||||||||
by hemavathi on 18 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|