LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள் Print Friendly and PDF

திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் தஞ்சாவூர் மாவட்டம்

திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.

தல வரலாறு 

ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது என்று குறிப்பிடப்படுகிறது.  திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது. 

 

 

இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.

 

தேவாரத் தலம் :

சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், தனது 11 பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ‘திருத்தாண்டக’ப் பாடல்களிலும், சுந்தரர், ‘ஊர்த் தொகை’யிலும் இந்தத் திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

‘வெந்தநீறு மெய்பூசிய வேதியன்

சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வந்தன்

கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்

எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே’.

 

என்பது சம்பந்தரின் தேவாரப்பாடலாகும்.  

 

குழந்தைச் செல்வம் :

திருமணமாகி பல ஆண்டு களாகியும் கருத்தரிக்காதவர்கள், கருத்தரித்தாலும் உடனுக்குடன் அது தங்காமல் சிதைந்து போவது, தாய்க்கும், குழந்தைக்கும் பிரச்சினை ஏற்படுவது.. இப்படி எத்தனையோ உள்ளன. மருத்துவ உலகம் இதில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், தெய்வ சக்தியை நம்பும் மக்களுக்கு, பலனளிக்க எத்தனையோ ஆலயங்கள் இருப்பினும், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். 

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையில் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு என்ற நம்பிக்கையில் தமிழகம் மட்டுமல்லாது வேறு மாநில மக்களும் தொடர்ந்து வந்துபோகிறார்கள். அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். நேரில் வர இயலாதவர்களுக்கு, தபால் மூலம் பிரசாதம் அனுப்பும் திட்டமும் கோவில் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

அமைவிடம் : 

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 

by Swathi   on 14 Oct 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐந்து ஆண்டிகள் கட்டிய அருள்மிகு திருசெந்தூர் முருகன் கோவில் ஐந்து ஆண்டிகள் கட்டிய அருள்மிகு திருசெந்தூர் முருகன் கோவில்
எங்கள் குலதெய்வம் - பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி எங்கள் குலதெய்வம் - பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி
எங்கள் குலதெய்வம் - ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் எங்கள் குலதெய்வம் - ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார்
எங்கள் குலதெய்வம் - அக்கரை சாஸ்தா கோவில் எங்கள் குலதெய்வம் - அக்கரை சாஸ்தா கோவில்
எங்கள் குல தெய்வம் - ஸ்ரீ போத்திராஜா எங்கள் குல தெய்வம் - ஸ்ரீ போத்திராஜா
எங்கள் குலதெய்வம் - ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமி எங்கள் குலதெய்வம் - ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமி
தஞ்சை பெருவுடையார் கோவில் தஞ்சை பெருவுடையார் கோவில்
பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில் பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்
கருத்துகள்
20-Apr-2020 00:43:36 shashiwarman said : Report Abuse
இது வாழ்வில் தெரிந்து கொள்வது மிகஅவசியம் ஏனென்றால் பிற்காலத்தில் அதுநமக்கு அவசியவமாகும் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.