LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள்-சாமிகள் Print Friendly and PDF
- கோயில்கள்

எங்கள் குலதெய்வம் - அக்கரை சாஸ்தா கோவில்

முன்னுரை : 

*"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்ற வாழ்வும் நனி சிறந்தது"* என்று பெரியோர் சொல்ல கேட்டிருக்கிறேன். குலதெய்வம் என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட சொத்து. மூதாதையர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு, ஏதோ ஒரு தெய்வ குற்றம் இருக்கிறது என்று நம்பினார்கள். அதற்காக அவர்கள் தாங்கள் விரும்பும் கிராமதேவதை என்று அழைக்கப்படும் சாஸ்தா (ஐய்யனாரப்பன்), முனீஸ்வரன், மாரியம்மன், பிடாரியம்மன், இசக்கியம்மன், போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். குலதெய்வம் என்பதின் அடிப்படை என்னவென்றால் தங்களுடைய மூதாதையர்கள் எந்த உருவில் வழிபட்டார்களோ அதையே நாமும் வழிபடுவதில் தான் உள்ளது. இந்த நாகரீக உலகிலும் நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் நேரிட்டால், ஜோதிடர்கள் "நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள் ஆகையால் தான் உங்களுக்கு இந்த துன்பம் நேறிவிட்டது" என்று கூறுவார்கள். இதை நாம் சிந்தித்து பார்த்தால் நம்முடைய மூதாதையர்கள் நடந்து வந்த பாதையை (அவர்களது பாதம் பட்ட மண்) நாமும் கடைப்பிடிக்கிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம் அப்படி நாம் அந்த குலதெய்வங்களை வணங்கும் போது அந்த தெய்வத்தின் அருளோடு நம்முடைய மூதாதையரின் ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.
தல வரலாறு:
எங்கள் குலதெய்வ கோவிலில் பெயர் மேல் அக்கரை சாஸ்தா கோவில் ஆகும். இக்கோவில் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலையகுண்டில் உள்ள மேலக்கரை என்னும் கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி உள்ள காட்டில் தான் உள்ளது.
எங்கள் குல தெய்வத்தின் பெயர் திருமேனிகண்ட பூசாஸ்தா ஆகும். இப்பெயரினது அர்த்தம் நாங்கள் பூக்குவியலினால் அலங்கரிக்கப்பட்ட இறைவனது (சாஸ்தா) திருமேனியை கண்டோம் என்பதுதான். மனிதர்களை வாழவைக்கும் தெய்வமான விஷ்ணுவும் (வைணவம்) மனிதர்களுக்கு முக்தி கொடுக்கும் தெய்வமான சிவபெருமானும் (சைவம்) ஒரே நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கும் தெய்வமே சாஸ்தா. மேற்கரையில் உள்ள மலையின் மேல் கற்பாறையில் இருந்தார் பகவான் சாஸ்தா. அவரை பூஜிக்கும் பிராமண குலத்தை சேர்ந்த பூசாரி தினம்-தினம் அவ்விடத்திற்கு சென்று அவரை பூஜிக்க முடியவில்லை என்று இறைவனிடம் மன்றாடினார். அதற்காக இறைவன் (சாஸ்தா) 200 அடிக்கு கீழே வந்து காட்சி கொடுத்தார். இவ்விசயத்தை நம்பமுடியாத மற்ற சமுதாயத்து மக்கள் அவர் மீது குற்றம் கூறினர் அவர்களை நம்ப வைப்பதற்காக இறைவன் அம்மலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் யாதவ குலத்தை சேர்ந்த ஒருவருக்கு இறைவன் (சாஸ்தா) ஆடுகுட்டி ஆக வந்து துள்ளி ஆடி காட்சி தந்து அருள் கொடுத்தார் ஆகையால் இறைவன் துள்ளும் குட்டி மாடன் என்ற பெயரோடு இங்கு அருள்பாவிக்கிறார்.மற்றும் சாஸ்தாவை தினம்-தினம் வணங்கும் வன்னியர் குலத்தைச் சேர்ந்த இரண்டு பக்தர்களுக்கு அவர் காட்சி தந்து அருள் கொடுத்தார் ஆகையால் இங்கு அவர் வன்னிய மாடன் என்ற பெயரோடும் விளங்குகிறார்.இக்காட்சிகளை தனது தவத்தில் பார்த்ததாக சொன்ன தவசுதம்பிரான் என்ற மாமுனிவனுக்கும் இங்கு ஒரு திருத்தலமும் இருக்கிறது. கடவுளை வழிபடுவதில் ஜாதி, மத வேறுபாடு இல்லை என்பதை காட்டுவதற்காகவும் இறைவன் (சாஸ்தா) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் காட்சி தந்து அருளியுள்ளார்.கார்மேனி கூடம் பரிவாரகாச சிவபெருமானின் நாங்க அவ தாரம் சுடரொளி ஆகும் சிவபெருமானின் அவதாரமாக சுடரொளியில் பிறந்த விசம் இக்கோவிலில் நாகமணி பூதத்தான் என்ற பெயரோடு காவலாக இருக்கிறார்.இங்கு பங்குனி உத்திரம் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி மாதத்தில் வரும் மண்டல பூஜை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை மனதாலும் காதாலும் வழிபாடு செய்வது இப்பூஜையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.இங்கு தினமும் அன்னதானம் சாப்பாடு செய்து கொடுப்பது பிரதானமாக உள்ளது.
முடிவுரை:
*"ஓல்ட் இஸ் கோல்ட்"* என்பது போல் நமது மூதாதையர்கள் 
ஏற்படுத்திவைத்த இந்த நடைமுறை நமக்கு நன்மையை ஏற்படுத்திகொடுக்கிறது. பரந்து விரிந்த இந்த உலகம் கையளவில் சுருங்கிவிட்டது ஆகையால் உறவுகள் சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் அங்கங்கே சென்று விட்டார்கள், பிரிந்த உறவுகள் தெய்வத்தின் பெயரால் ஒன்று சேர வேண்டும் என்று நம் மூதாதையர்கள் சிந்தித்து ஏற்படுத்தியதுதான் குலதெய்வம் என்று நான் நம்புகிறேன்.

 

-

Subramoni Bhavani 

by Sakthivel   on 15 Feb 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-5 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-5 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன்
திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு
முத்தாரம்மன் MUTHARAMMAN முத்தாரம்மன் MUTHARAMMAN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.