|
||||||||
எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின் |
||||||||
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் உதயசங்கர் அவர்களுக்கு சாகித்திய பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.. பன்னாட்டு புத்தகவிழாவில் சந்தித்து முதன்முறையாக சில மணித்துளிகள் உரையாடினோம் . அவருடைய ஆக்கப்பூர்வமான உரையை கேட்கமுடிந்தது.
வானம் பதிப்பகத்தின் "ஆதனின் பொம்மை"க்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆதனின்பொம்மை கீழடி சார்ந்த கதைக்களத்தை மையமாகக்கொண்டு உருவான நூல். எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
வலைத்தமிழ் மொட்டு முன்னெடுக்கும் உலகத் தமிழர்களுக்கான "இல்லம்தோறும் சிறார் நூலகம் " திட்டத்தின் முதல் பகுதியாக 25 சிறுவர் நூல்களைத் தேர்ந்தெடுத்து உதவுவதில் கதைசொல்லி சரிதா ஜோ அவர்களுக்கு பின்புலமாக இருந்து உதவிவருகிறார் எழுத்தாளர் உதயசங்கர்.
சிறுவர்கள் குறித்து உண்மையான அக்கறையோடு பயணிக்கக்கூடிய ஆளுமையாக விளங்கும் எழுத்தாளர் உதயசங்கர் சிறுவர் உலகத்தின் இன்றைய நிலையை மேம்படுத்த தொடர்ந்து உழைக்க இவ்விருது ஒரு ஊக்க சக்தியாக இருக்கட்டும்.
குழந்தைகளுக்காக தொடர்ந்து குரல் உயர்த்திப்பேசுங்கள், எழுதுங்கள். புலம்பெயர் சமூகம் இவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
வலைத்தமிழ் குழுவின் சார்பாக வாழ்த்துகள்..
|
||||||||
by Swathi on 24 Jun 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|