நாம் இப்போது நவீன கல்வி அளிக்கக் கூடிய காலத்தில் இருக்கிறோம். ஆனாலும் பழைய பயிற்று முறைகளைக் கையாளுகிறோம். இன்றைய நவீன உலக மாணவர்களுக்கு, நவீன கற்றல் அனுபவம் தேவையாக இருக்கிறது. அந்த தேடுதலில் நான் இருந்த போது, திருமதி. அன்னி ஃபிளாரன்ஸ், (பிரபலமாக பிரியசகி என்று மக்களால் அறியப்படுபவர்,ஆசிரியர், குழந்தை நல ஆர்வலர்) அவர்கள் எனக்கு அறிமுகப் படுத்திய புதிய கல்வி முறைதான், இந்த கல்வியில் நாடகம் எனப்படும் புதிய முறை. 10 நாட்கள் சிறப்பாக பயிற்சி அளித்தார் திரு.சந்திரமோகன் அவர்கள். இன்றும் நாளையும் அந்த பயிற்சியில், ஆசிரியர்கள் கற்றதும் பெற்றதும் வகுப்பறை நிகழ்த்துதலாக உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். பாரதி புத்தகாலயம் இந்நிகழ்வை யூடியூப் live இல் நிகழ்த்துகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள்.அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
|