|
||||||||
கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன் இரண்டாம் நாள். |
||||||||
பயிற்றுனர் ஒரு புத்தர் சிலையுடன் Dramatic effect கொடுத்தவாறு திரையில் வந்து பயிற்சியை ஆரம்பித்தார். ஒரு விளையாட்டுடன் வகுப்பு துவங்கியது. எந்த வகையிலும் தொடர்பில்லாத இரண்டு பொருட்களைக் கொண்டு வரவேண்டும் என்று விளையாட்டு ஆரம்பமானது. அந்த பொருட்களைக் கொண்டு இரண்டு நாள் வகுப்பில் என்ன நடந்தது என்று நாடகமாக உருவாக்கி காட்ட வேண்டும் என்று வீட்டுப் பாடம்.(இப்படின்னு தெரிஞ்சிருந்தா, அப்போவே நல்லா படிச்சி இருக்கலாம் இல்ல.....)
கல்வியில் நாடகம் -மூன்றாம் நாள். வீட்டுப் பாடம் அசாதாரணமாக எனக்கு தோன்றியது. ஆனால் நல்லவேளை எனக்கு இந்திய நேரப்படி மாலை வகுப்புதான் என்பதால், காலை வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் ஏற்கனவே வீட்டுப் பாடங்களை ஒருநிமிட காணொளியாக ஆக்கி குழுவில் பகிர்ந்திருந்தார்கள். அப்படி இப்படி நானும் என் வீட்டுப் பாடத்தை ஒரு பொம்மலாட்டம் வடிவில் காணொளியாக்கி ஒருவழியாக அனுப்பி விட்டேன். எனக்கு அப்பாடா என்று இருந்தது.அது நல்லா இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒரு வழியாக வீட்டுப் பாடம் செய்துவிட்டோம் என்ற உணர்வே எனக்கு ஒரு திருப்தியைத் தந்தது. அன்றுதான் புதிதாக இணைந்திருந்த ராணி ராஜேந்திரன், ஒவ்வொருவர் பற்றிய அறிமுகம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். நாடகத்தின் சுவாரசியத்தில் நேரம் போவது உணராமல் பேசிக் கொண்டிருந்தோம் என்பதால் அடுத்தநாள் அறிமுகப் படலத்தை வைத்துக் கொள்ளலாம் என்று வகுப்பு முடிந்தது. (அப்படி என்ன நாடகம் செய்தீர்கள் என்று நீங்கள் நாற்காலி முனையில் வந்து அமருவது புரிகிறது..... சொல்கிறேன், அதைச் சொல்லாமலா?) ஒரு அழகான கிராமம்.திரு. சந்திரமோகன் “என் இனிய தமிழ் மக்களே!” போட்டு துவங்கி வைத்தார். அங்கே உள்ள சூழ்நிலைகள் மனதில் ஓட, அங்கே என்னென்ன வேலை செய்பவர்கள் இருப்பார்கள்? என்று ஒரு கேள்வி வைத்தார். அனைவரும் ஒவ்வொன்று சொன்னார்கள். உழவு, பானை வனைதல், வண்ணார் என்று பலவிதமான பதில்கள்.(எனக்கு ஒன்றும் சொல்ல தெரியவில்லை..... எப்போதாவது கிராமத்தைப் பார்த்திருந்தால்தானே!) டீச்சர் பாடம்நடத்தும் போது , புரியாத குழந்தை எப்படி முழிக்குமோ அப்படித்தான் நானும், எச்சில் முழுங்கி கொண்டே ரொம்ப புரிந்த மாதிரி நடித்துக் கொண்டிருந்தேன். (இது நடிப்புக்குள்ளே ஒரு மகா நடிப்பு). ஆஹா, நமக்கு கூட நடிக்க வருகிறதே என்று நான் உணர்ந்த தருணம் அதுதான். அதன் பிறகு ஒரு ஒரு உணர்வு பிரவாகத்தை ஏற்படுத்திக் காட்டினார் நம் பயிற்றுனர். ஒரு மாவட்ட ஆட்சியாளரிடம் இத்திட்டத்தை மாற்ற மனு கொடுக்க செல்வதாக ஊருக்குள் தலைவருடன் பேசி முடிவெடுக்கப் பட்டது. பிரம்மாண்டமாக ஆட்சியாளராக வந்து அமர்ந்தார் நம்ம அழகு வெங்கடேசன் சார். அடேங்கப்பா. நம் மனதுக்குள் போன சூழ்நிலை, ஒரு சாதாரண நிகழ்வை எவ்வளவு பிரம்மாண்டமாக்கி காட்டுகிறது. நம்ம அழகு வெங்கடேசன் சார், சந்திரமுகியாகவே மாறியிருந்த கங்காவைப் போல, கலெக்டராவே மாறியிருந்தார். கிராமம் என்றால் எப்போதோ சிறுவயதில் அப்பாவின் ஊருக்கு போனதும் அங்கே உள்ள அமராவதி என்னும் ஆற்றங்கரையில், நாள்-மணி என்ற கணக்குகளை மறந்து என் சித்தப்பா மகன்களோடும், என் அக்காளோடும் ஆடிக் கொண்டும், படித்துறையில் ஆடும் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், துவைக்கப் பட்ட துணிகள், காய போடும் நேரத்துக்குள் காய்ந்து விடும் விந்தையையும் மட்டுமே நான் அறிந்தவை. எப்போதும் மாநகரங்களில் வாடகை வீடுகளில் வசித்த நான், எல்லோரும் வீடுகளை காலி செய்யுங்கள் என்று அறிவிப்பினைக் கேட்டால், " ஹை, ஜாலி! நாம் புது வீட்டுக்கும் போகப் போறோம் " என்ற சந்தோச குரல் மட்டுமே கேட்டுப் பழகியவள். From The Known To Unknown என்று ஒரு வரியில் திரு. சந்திரமோகன்அவர்கள் இந்த உயிரோட்டமுள்ள வகுப்பினை முடித்தார் |
||||||||
by Swathi on 12 Aug 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|