LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறார் செய்திகள் - தகவல்கள் Print Friendly and PDF
- நிகழ்வுகள்-events

கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது..

 

நம் கதைசொல்லி குழுவின் பெற்றோர்கள் , தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலடங்கம் நேற்று ஒரு மணி நேரம் சிறப்பாக நடந்தேறியது. இதில் குழுவிலிருந்து பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தீர்கள் . இது ஒவ்வொரு மாதமும் ஒரு சிறுவர் இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு நடைபெற இருக்கிறது . கதை சொல்வது என்பது ஒரு தனித்திறமை..  அதில் கவனிக்க வேண்டிய , கையாளவேண்டிய உத்திகளை குழந்தைகள் உலகில் பயணிக்கும் திரு.விழியன் போன்றோர்களிடமிருந்து அறிந்து நம் வீட்டில் நடைமுறைப்படுத்தலாம், விழிப்புணர்வு பெறலாம். எனவே இந்த உரையாடல் நேற்று பதிவுசெயயப்பட்டதை இங்கே கலந்துகொள்ள இயலாதவர்களுக்காக பகிரப்படுகிறது . அனைத்து பெற்றோர்களுக்கும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பகிருங்கள் .. தினமும் குழுவில் இணைந்து கதைகளை பேசி பயனடையுங்கள் .. '
திரு.விழியனின் நிகழ்ச்சியில் பகிரப்பட்ட, பேசப்பட்ட சில விடயங்களின் சுருக்கம் ..
 
-இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு  கதைகள் தேவையா ?
-Bed Time Story Time - தமிழ் சூழலில் எப்படி உள்ளது?
-கூட்டுக்குடும்பங்கள் இல்லாத சூழலில், தாத்தா பாட்டிகள் அருகில் இல்லாத புலம்பெயர் சூழலில் குழந்தைகளுக்கு கதைகளை சொல்வது எப்படி?
=நம் மொழி, நம் நிலம், நம் வாழ்வியல்,நம் கலை,நம் உணவு, நம் பண்பாடு,, நம் வட்டார வழக்கு ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த கதை சொல்வது  சிறப்பான கருவி
-இதை கதை சொல்வது என்பதைவிட கதை பேசுதல் என்பதுதான் சரியான பொருளைத்தரும். இருவரும் உரையாடவேண்டியது அவசியம் .
-குழந்தை வளர்ப்பு , தரமான நேரம் ஒதுக்குதல் (Quality Time)
-குழந்தைகளுக்கு நல்ல நண்பனாக , மனதுக்கு நெருக்கமானவராக கதைசொல்பவர் மாறமுடியும்.. (Bonding will increase)
-ஒவ்வொரு பெற்றோரும் கதைசொல்லியாக மாறவேண்டும் . இதற்கு தக்க பயுற்சி மேற்கொண்டு , தயார்படுத்திகொள்ளவேண்டும் . 
-கதைசொல்வதால் பெற்றோர்களுக்கு தேடல் அதிகமாகும் .. குழந்தை உலகைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்பு... வாசிப்பும், புரிதலும் அதிகமாகும் .. 
-குழந்தைகள் வாசிப்பின் நோக்கத்தை, தேடலை அதிகப்படுத்த குழந்தைகளுக்கு இது பயன்படுகிறது . 
-பல மனிதர்களை அறிமுகம் செய்ய மிகவும் பயன்படுகிறது . 
-விலங்குகள்தான் குழந்தைகளுக்கு மிக நேர்காமான உலகம்.எனவே விலங்குகள் வழியே, அவைகள் பேசுவதுபோல் கதைகளை கொண்டுசெல்வது அவர்களுக்கு எளிதில் சென்றடையும். 
-கதைகளை ஆடியோவில் கேட்பது  , காணொளியாக பார்ப்பது தொடக்கத்திற்கு உதவலாம். ஆனால் இது ஒரு மாறுதலுக்கு  வெளிசாப்பாடு வாங்கி சாப்பிடுவது போன்றது, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி கதைசொல்வதுதான் வீட்டு சாப்பாடு சாப்பிடுவது போன்றது. வெளிசாப்பாட்டை எப்போதாவது ஒரு மாறுதலுக்கு சாப்பிடுங்கள் . 
-கதை சொல்வதால் என்ன பயன்? என் குழந்தை வளர்ந்து என்ன கதையாசிரியராக்வா ஆகப்  போகப்போகிறார்கள்? வேறு என்ன பயன்?
- நாம் பயன்படுத்தும் எல்லாம் ,நம் அறிவியல் உள்ளிட்ட அனைத்தும் ஒரு தனிமனிதனின் கற்பனையில் , மனத்திரையில் ஓடவிடுவதாலேயே உருவாகிறது . 
-ஒவ்வொரு கதையின் மையமும், அன்பு, மனிதநேயம், சக உயர்களை நேசிப்பது என்பதாகவே இருக்கிறது . 
-ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழிவழக்கு இருக்கிறது. இவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த இதுவே முக்கிய பங்குவகிக்கிறது. உதாரணமாக திருநெல்வேலி, தஞ்சாவூர் , கோயம்புத்தூர், மதுரை வட்டார வழக்குகளை குறிப்பிடலாம். 
-தமிழ்நாட்டில் கிடைக்கும் குழந்தைகளுக்கான நூல்கள் அமெரிக்காவில் பயன்படுத்த முடியுமா?
-தமிழ்ப்பள்ளிகள் இந்த கதை சொல்லிகளை அவர்கள் பள்ளிகளில் ஊக்கப்படுத்தி பெற்றோர்கள் இணைந்து கதைசொல்லும் அனுபவங்களை பகிர்ந்து அவர்களுக்கு கதைசொல்லும் திறமையை , உத்திகளை வளர்த்துக்கொள்வதன் அவசியம் ..கதைசொல்லிகளின் சந்திப்புகள் தமிழ்ப்பள்ளிகளின் வளாகத்தில் நடத்த பள்ளிகள் முயற்சி மேற்கொள்வது தமிழ் பாடநூல் படிக்க உதவும்..
-ஒரு வாரம், ஒரு மாதம் கதைகள் கிடைக்கும் ஆனால் தொடர்ந்து நல்ல கதைகள் கிடைக்க சரியான கட்டமைப்பு முக்கியம்.
-கதை சொல்வது ஒரு கலை. அதன் உத்திகள், பயிற்சிகள்  குறித்து   மேலும் சில பயிற்சிகள் கொடுக்க முடியுமா?
-அழிந்துவரும் சிறுவர் இலக்கியங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவது எப்படி?
-சிறுவர் நூல்கள் பெரும்பாலும் அண்ணா நூலகங்களில் கிடைக்கிறது. சென்னை வருபவர்கள் அண்ணா நூலகம் கண்டிப்பாக  குழந்தைகளுடன் பார்வையிடுங்கள் .
-தமிழகத்தில் உள்ள சிறுவர் இலக்கிய எழுத்தாளர்களுக்குள் ஏதும் கருத்தரங்கங்கள், சந்திப்புகள் நடைபெறுகிறதா?  
-முதல் சர்வதேச குழந்தைகள் கருத்தரங்கம் வரும் ஜூன் மாதத்தில் மலேசியாவில் நடக்க இருக்கிறது . 
-1975-ல் நடந்த குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய 25 வது ஆண்டு விழா நடத்தும்போது   400 எழுத்தாளர்களின் விவரங்களை வெளியிட்டார்கள்.  தற்போது 70- எழுத்தாளர்கள்கூட இல்லை என்பதுதான் கவலைகொள்ளும் நிலையாக உள்ளது.  
 


Are you getting the stories everyday ?  if not, Join TODAY

 

Kathaisolli - Group Details. Stay connected in any one group. 
===============================
===============================

 

by Swathi   on 18 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுத்தாளர் உதயசங்கர்  அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின்
முனைவர் மு. இளங்கோவனின்  மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள்  ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா! முனைவர் மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா!
கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன்  இரண்டாம் நாள். கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன் இரண்டாம் நாள்.
கல்வியில் நாடகம் கல்வியில் நாடகம்
சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் - 2
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5) கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது? தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.