|
||||||||
ஐன்ஸ்டீனை விட அதிக IQ திறன்கொண்ட இந்திய வம்சாவளி சிறுவன் |
||||||||
குழந்தைகள் கேள்வி கேட்டாலே பெரியவர்களுக்குப் பிடிக்காது. 'பேசாமல் இருடா' என்று அடக்கி விடுவோம். கேள்வி கேட்பதுதான் குழந்தைகளின் இயல்பு. கேள்விகள் உதிக்கும்போதுதான் பதில் தேடும் ஆர்வம் தொடங்கும். 10 வயது க்ரிஷ் அரோரா அதற்கு நல்லதொரு உதாரணம். இந்தச் சிறுவனின் IQ அளவு 162 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விடவும், நவீனக்கால விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங்கை விடவும் இது அதிகம். மேலும் அதீத அறிவுடையவர்களின் IQ நிலையாகக் கணிக்கப்படும் 130 குறியீடுகளை விட அதிகமான நிலையுடன், க்ரிஷ் அரோரா காணப்படுகிறார்.
யார் இந்த க்ரிஷ் அரோரா?
மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன். இவருடைய பெற்றோர் மௌலி மற்றும் நிச்சால். கணிதம் முதல் இசை வரை பல திறன்களைப் பெற்றுள்ள கிரிஷ், உயர்ந்த IQ திறனுடைய நபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் மென்சா சமூகத்தில் உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.
க்ரிஷ், 4 வயதில் வெறும் மூன்று மணி நேரத்தில் கணிதப் புத்தகத்தை முடித்ததுடன், 8 வயதில் ஒரே நாளில் தனது வகுப்புப் பாடங்களில் தேர்ச்சியும் பெற்று அசத்தியுள்ளார். தன்னுடைய ஓய்வு நேரத்தில், க்ரிஷ் தனது நண்பர்களின் படிப்பிற்கு உதவிசெய்கிறார். பியானோ வாசிப்பதில் அதிகத் திறமை வாய்ந்தவராக இருக்கும் க்ரிஷ், 10 வயதில் அதிகபட்ச தரமான 8 கார்டில் வாசிக்கக்கூடியவராக இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் 'ஹால் ஆஃப் ஃபேம்'-ல் இடம்பெற்றுள்ளார், பல இசைப் போட்டிகளில் வென்றுள்ளார். செஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் க்ரிஷ் காண்போரை வியக்க வைக்கிறார்.
|
||||||||
by on 02 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|