LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

பெர்லினுக்கு ஒரு கடிதம்!

தொலைதூர தேசத்தில்
குளிர் உறைக்கும் இரவில்
நீண்ட நேரம்
கண் விழித்திருந்து
அவள் எழுதிய கடிதம்
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு...

எங்கள் முற்றத்து
மாமரத்தோடு
எங்கள் கிராமத்து
செம்மண்ணோடு
எங்கள் தேசத்து
பனைவடலிகளோடு
வளர்ந்து மலர்ந்த
அந்த
உடன்பிறவா இனிய நேசத்தை
இன்னமும்
அவள் மறந்துவிடவில்லை.

நீனா!
நாம்
ஏன் உடன்பிறக்கவில்லையென
தினமும் சபித்துக் கொண்டும்
எவரையுமே கேட்காமல்
கூடித்தி¡¢ந்த
நாட்களுக்குப் பின்

அடுத்து வந்த ஒரு குறுகிய
அரசியல் வாழ்க்கைக்குப் பின்
அரசியல் இல்லாத
துப்பாக்கிகளைக் கண்டு
நீ
சகிக்க முடியாமல்
விட்டுப் பி¡¢ந்து சென்றதும்...

அதற்கும் பின்னால்
எங்கே என்றே தொ¢யாமல்
சிலகாலம் தேசமெங்கும் தி¡¢ந்து
நான்
திடீரென உனைக் காணவந்தபோது
நீ எனக்காக எழுதிவைத்த கடிதமும்

அந்நிய தேசமொன்றில்
மிக்க மோசமான மரங்களிடையே
புன்னகைக்க நீ மறந்து
உன் கணவனோடு கைகோர்த்து
அனுப்பிவைத்த புகைப்படமும்
எனக்காகக் காத்திருந்தன.

நீனா
இப்போதெல்லாம்
நீ
ஏன் சி¡¢ப்பதேயில்லை?

உனது கடிதத்தில் கேட்டிருந்தாய்
பி¡¢யமான
உனது சினேகிதி பற்றி
உனக்கும் பின்னால் விடுதலைக்காய்
வீட்டை விட்டு புறப்பட்டவள்தான்
வெகு நாட்களாய்
அவளைப் பற்றி செய்தி எதுவும் தொ¢யவில்லை.

பின்னர் அறிந்து கொண்டோம்
ஆடு மேய்க்கச் சென்ற
சிறுவனின் தகவலின் பின்னால்
கிளறப்பட்ட
ஆறு புதைகுழிகளில் இருந்து
சடலமாய் மீண்டாள்.

உனது
பழைய நண்பர்கள்
பலரையும் விசா¡¢த்திருந்தாய்
நீ கேட்டதாக அவர்களிடம்
கூறும்படி எழுதி இருந்தாய்.

நீ கேட்டவர்களில் பலர்
இன்று இல்லை.
பலருக்கு
என்ன நிகழ்ந்ததென்றே
தொ¢யவில்லை.

என்னதான் இருந்தபோதும்
மக்கள் மட்டும்
முன்புபோல இப்போ இல்லை.

நீயே நிரம்ப ஆச்சா¢யப்பட்டுப்போவாய்
நீண்டு வி¡¢ந்து கிடக்கும்
வானத்தில் இருந்து,
அதன் பின்னால்
கூட்டம் கூட்டமாய்

எங்களைப் பார்த்துச் சி¡¢க்கின்ற
நட்சத்திர மண்டலங்களிலிருந்து

எப்போதும்
போராடிக் கொண்டேயிருக்கும்
கருங்கடல்களுக்கு அப்பால்

ஏதோ
பெயர்தொ¢யாத
அந்நிய தேசமொன்றில் இருந்து

திடீரென
எங்களை மீட்க
மீட்பர்கள் வருவார்கள் என
முன்பு போல
இப்போதெல்லாம்
மக்கள் நம்புவதில்லை.

இப்போதெல்லாம்
மக்கள்
சந்தேகிக்கின்றனர்,
அடிக்கடி கேள்விகள் கேட்கின்றனர்,
தமக்குள் நீண்ட நேரம்
பேசிக் கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கையில்
என்ன ஏது என்று
பு¡¢யாவிட்டாலும்
ஒன்றுமட்டும்
நிச்சயமாக எனக்குத் தொ¢கின்றது,
மக்கள்
ஏதோ செய்யப் போகின்றார்கள்.

அது, முன்பு நடந்தது போல
இருக்காது.
எங்கள் மண்ணில்
ஒரு புதிய வரலாற்றை
நானும் நீயும்
திட்டித் தீர்த்த,
அதே சனங்கள்
எங்கள் மக்கள்
படைக்கப் போகின்றனர்.

நேசமானவளே!
இதுவரை
சோவியத்திலும்
சீனாவிலும்
வியட்னாமிலும் உள்ள
மக்களால்தான் முடியுமென
நானும் நீயும்
நம்பி இருந்தது
நமது தேசத்திலும்
நிகழப் போகிறது.

நிரம்ப ஆச்சா¢யம்தான்!

புத்தகங்களை புரட்டிடிப் பார்த்தேன்
மனித வரலாறு
அப்படித்தான் நடக்கும்
என்று கூறுகிறது.
நீயும் உன் இனிய குழந்தையும்
இப்போ வாழ்கிற
தேசத்திலும் நிகழுமாம்.

இது
இன்னமும்
ஆச்சா¢யமான விடயமாய்
உனக்கு இல்லையா?

சகோதா¢!
இந்நிலையில்
எ¡¢கின்ற
எங்கள் தேசத்தில்
எழுகின்ற எங்கள்
மக்களின் கரங்களுடன்
மெலிந்துபோன என் கரங்களை
இணைத்துக் கொள்வதற்காய்

நான்
எங்கள் தேசத்தில்
வாழவிரும்புகிறேன்.

எங்கள் தேசத்து நகரங்களை
எ¡¢த்த தீச்சுவாலைகள்
அணைந்து போக முன்னரே
எங்கள் தெருக்களில் படர்ந்த
எம்மவர் குருதியின் சுவடுகள்
உறைந்துபோக முன்னரே
மனித வேட்டையரால்
கொலை செய்யப்பட்டு
வீசி எறியப்பட்ட
எங்கள் தேசத்து இளைஞர்களின்
சடலங்களின் மேல் நடந்து

பெர்லின் விமான நிலையத்தில்
வந்து இறங்கும்
அகதிகள் கூட்டத்தில்
என்னைத் தேடி நீ அலையாதே.

கறை படிந்துபோன
பாடங்களின் முடிவில்
மக்கள்
எப்போதும்
புதிய வரலாற்றைப் படைப்பார்கள்.

எப்போதாவது
மீண்டும்
நீ
எங்கள் தேசத்திற்கு வந்தால்

மக்கள்
எங்கள் தேசத்தில்
வாழ்ந்து கொண்டுதான்
இருப்பார்கள்.

by Swathi   on 26 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
26-Jul-2018 02:33:12 சஞ்சயன் said : Report Abuse
செழியனின் இந்த அற்புதமான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி. இதை எழுதிய செழியனே தன் வாழ்வை தொலைதேசத்தில் அகதியாக கழிக்க நேர்ந்ததுதான் மிகப் பெரிய சோகம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.