LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் – பேராசிரியர் முனைவர். திரு. க. பழனித்துரை – தொடர் நிகழ்வு 2

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் பேராசிரியர் முனைவர். திரு. . பழனித்துரை தொடர் நிகழ்வு 2

உலகமயமான சூழல்:

    உலகத்தில் 80 நாடுகளுக்கு மேல் அதிகாரப்பரவலை மிகப்பெரும் இயக்கமாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் வாழக்கூடிய சூழல் உலகமயமான சூழல். உலகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளக் கூடிய, நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ளக் கூடிய, மாநிலத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளக் கூடிய இந்த பின்னனியில்தான் நம்முடைய கிராமத்தை வளர்த்தெடுக்க வேண்டும், நம்முடைய கிராமத்திற்கு மேம்பாடு கொண்டு வர வேண்டும்.

உலகவங்கி சோதித்த அதிகாரப்பரவல்:

    உலக வங்கியானது இரண்டு அறிஞர்களைக் கொண்டு உலகம் முழுவதும் அதிகாரப்பரவல் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்தது. ஒருவர் ஆங்கில நாட்டு அறிஞர் ஜேம்ஸ் மனோர் மற்றும் இன்னொருவர் இந்திய நாட்டுக்காரரான அன்வர்ஷா ஆவார். அன்வர்ஷா இரண்டு மிகப்பெரிய புத்தகங்களை வெளியிட்டார்.

அன்வர்ஷா:

    தொழிற்புரட்சி மூலமாக மிக வளர்ச்சியடைந்த நாடுகளைத் தனியாகவும், வளர்ந்து வரும் நாடுகளைத் தனியாகவும் பிரித்து இந்த தொழில் மயமான நாடுகளில் எப்படி உள்ளாட்சி வளர்த்தெடுக்கப்பட்டது என்று அதன் அடிப்படைக் கூறுகளைப் படித்தார்.

    இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த வளர்ந்து வரும் நாடுகள் எப்படி உள்ளாட்சியை வளர்க்கிறது, குறிப்பாக இந்த உலகமயமான பொருளாதார சூழலில் உள்ளாட்சியை எப்படி மறுகட்டமைப்பு செய்தது என்பதைப் படித்து அன்வர்ஷா கட்டுரைகளை வெளியிட்டார்.

ஜேம்ஸ் மனோர்:

    ஜேம்ஸ் மனோர் 80, 90 நாடுகளில் மிக வேகமாக இயக்கங்கள் போல் உள்ளாட்சியை எதன் அடிப்படையில் வலுப்படுத்தினார்கள், என்ன எதிர்பார்ப்பில் இந்த உள்ளாட்சி உள்ளமைப்பை உருவாக்கினார்கள் என்று ஆய்வு செய்து கொடுத்தார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உருவான நாடுகள்:

    இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உருவான நாடுகள் அத்தனையும் ஜனநாயகத்திற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு ஜனநாயகத்திலான ஒரு அரசாங்க கட்டமைப்பை உருவாக்கிக் கொண்ட நாடுகள். இந்த எண்ணத்தில் தான் பாராளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றை உருவாக்கினர்.

    உள்ளாட்சி அமைப்பை உருவாக்க முக்கியமான காரணம் ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கு மற்றும் அகலப்படுத்துவதற்கு. ஜனநாயகத்தின் மூலக்கூறு என்பது சமத்துவத்தில், சமநீதியில், நியாயத்தில், நேர்மையில், கருத்துச் சுதந்திரத்தில், ஒருவரை ஒருவர் மதித்து நடத்தலில், அனைவரையும் சமமாகப் பாவிப்பதில் இருக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது தான் ஜனநாயகம் என்பது கிடையாது. இவை போன்ற அடிப்படைக் கூறுகள் சாதாரண வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

ஜனநாயகம்:

    இதுவரை பேச வாய்ப்பே பெறாத ஒரு சாதாரண மனிதன் பேச அதை மக்கள் கேட்கும் போது, ‘இந்த நாட்டில் எனக்கும் ஒரு மரியாதை இருக்கிறது, நாம் சொல்வதைக் கேட்பதற்கும் மக்கள் இருக்கிறார்கள்’ என்று எண்ணுவான். அந்த எண்ணம் தான் ஜனநாயகம். உள்ளாட்சிக்கு கிராமப்பஞ்சாயத்தில் ஒரு குழு, ஒன்றியத்தில் ஒரு அமைப்பு, மாவட்டத்தில் ஒரு அமைப்பு இருக்கிறது, சட்டமன்றம், பாராளுமன்றம் இருக்கிறது. இவ்வளவு அமைப்புகள் ஜனநாயகத்தை விரிவுபடுத்த இருக்கின்றன. அடிப்படையில் மக்களோடு தொடர்புடைய அமைப்பு உள்ளாட்சி தான். மக்களோடு தொடர்புடைய இந்த அமைப்புகள் ஜனநாயகத்தை ஆழப்படுத்த வேண்டும், அகலப்படுத்த வேண்டும்.

ஆளுகையின் பங்கேற்பு:

    ஆளுகையிலும், முன்னேற்றச் செயல்பாடுகளிலும் மக்களைப் பங்கேற்க வைப்பது என்பதையே புதிய உள்ளாட்சியானது நோக்கமாகக் கொண்டுள்ளது. சாதாரண மனிதனும் கிராம சபைக்குச் சென்று பிரச்சனைகளைச் சொல்லித் தீர்வு காண வேண்டும். ஆகச் சாதாரண மனிதனும் பங்கெடுக்கக் கூடிய சூழலுக்கு உள்ளாட்சியை உருவாக்கி வைக்க வேண்டும். ‘நான் கிராம சபையில் பேசுவேன், எனக்கு அருகில் இருக்கக்கூடிய வார்டு உறுப்பினர்களிடம் சொல்லுவேன், பஞ்சாயத்துத் தலைவர்களிடம் சொல்லுவேன், என்னுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வேன்’ என்கிற போது அவன் தன்னுடைய பங்கேற்பைச் செய்கிறான். இது ஆளுகையின் பங்கேற்பு.

முன்னேற்றச் செயல்பாடுகளில் பங்கேற்பு:

    உதாரணமாக ஒரு கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடக்கும் போது, ‘சாலையைச் சரியாக அமைக்கிறார்களா, எவ்வளவு தொகைக்கு இந்த பணி உங்களுக்கு விடப்பட்டது என்பன போன்றவற்றை அந்த கிராம மக்கள் உரியவர்களிடம் கேட்க வேண்டும். இப்படி முன்னேற்றச் செயல்பாடுகளிலும் மக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். எல்லா நிலைகளிலும் பங்கேற்க வேண்டும் என்பதே அதிகாரப்பரவலின் அடிப்படையாக அமைகிறது.

அரசாங்க கட்டமைப்பு:

    இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய அரசாங்கங்கள் கட்டமைக்கப்பட்டது. அரசாங்கமானது வறுமையை ஒழிக்கும், அரசாங்கம் மக்களுக்கு மேம்பாடு கொண்டு வரும், அரசாங்கம் மக்களுக்கு வசதிகளைச் செய்து தரும் என்கின்ற உணர்வினைத் தந்துதான் அரசாங்கத்தைக் கட்டமைத்தார்கள். ஆனால் இந்த செயல்முறைகள் எல்லாம் ஓரளவு தான் நடைபெற்றது, அதற்கு மேல் வெற்றி அடைய முடியவில்லை. உள்ளாட்சியை அரசாங்கமாக உருவாக்கி, அந்த அரசாங்கத்தில் மக்களைப் பங்கேற்கச் செய்து, மக்களுடைய மரபு வழி அறிவைத் தொடர்ந்து, தன்னுடைய அனுபவத்தால் பெற்ற அறிவையும் அந்த ஆட்சியில் பயன்படுத்த வேண்டும், அதுமட்டுமில்லாமல் அங்கு நடக்கக்கூடிய எல்லா முன்னேற்றச் செயல்பாடுகளிலும் மரபு வழி அறிவு என்பது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் காரணமாக வைத்துக் கொண்டார்கள்.

வளங்கள் பற்றிய பார்வை:

    இயற்கை வளம் என்பது இன்றைக்குச் சுருங்கிக் கொண்டுள்ளது. வளங்கள் எல்லாம் முன்னேற்றம் என்ற பெயரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் மரபு வழியில் வளங்களைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது, பரிமாறிக் கொள்வது என்கின்ற பழக்கம் கிராமங்களிலிருந்திருக்கிறது. ஒரு கிராமம் இன்னொரு கிராமத்திற்குத் தண்ணீர் கொடுக்கும். தண்ணீர் மேலாண்மைக்கென்று பல்வேறு அணுகுமுறைகள் இந்த சமுதாயத்திலிருந்திருக்கிறது.

புதிய உள்ளாட்சியின் அடிப்படை:

    அரசாங்கத்திற்கு உதவி புரிய வரும் சந்தைகளிடம் தொழில்நுட்பத்தைப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டு, செய்ய வேண்டிய பணிகளை அரசாங்கமே செய்கிறது. புதிய உள்ளாட்சி வரும் போது, அனைத்து முன்னேற்றச் செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர்கள் மக்கள் தான். மக்கள் கேள்வி கேட்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அந்த பொறுப்புகளை மக்களை உணர வைக்க புதிய உள்ளாட்சி ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

    பஞ்சாயத்துத் தலைவரானவர் 37 துறைகளையும், அந்தந்தத் துறைகள் தன் வேலையைச் சரியாகச் செய்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். கீழிருந்து மக்கள் பங்கேற்புடன் அனைவரையும் உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவது தான் அதிகாரப்பரவலின் அடிப்படை மூலக்கூறு.

அதிகாரப்பரவல் நகரக்கூடிய திசை:

    எல்லா கிராமங்களுக்கும் ஒரேவிதமான வசதிகள் வர வேண்டும். ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் போன்றோர்களை உள்ளாட்சி மனதில் கொள்ள வேண்டும். அதிகாரப்பரவல் நகரக்கூடிய திசை ஏழைகளை நோக்கியதாக, பெண்களை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இயற்கையைப் பாதுகாக்கும் புதிய உள்ளாட்சி:

    இயற்கை எந்த அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு ஏழ்மை நிலை குறையும். எங்கே மனிதர்கள் இயற்கையைப் பாதுகாக்கிறார்களோ, இயற்கை அவர்களைப் பாதுகாக்கும். புதிய உள்ளாட்சியானது இயற்கையைப் பாதுகாக்கிறது, இயற்கை பற்றிய புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. மத்திய, மாநில அரசாங்கம் போல புதிய உள்ளாட்சியும் அரசாங்கமாக வந்திருக்கிறது. சட்டம் இயற்றும் உரிமை இல்லை, ஆனால் முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உண்டு.

உலகநாடுகளில் அதிகாரப்பரவல்:

    மக்களுக்கே அதிகாரம் என்ற வாசகம் புதிய உள்ளாட்சியில் இன்றியமையாதது. அரசாங்கத்திற்கு இறையாண்மையைத் தந்தது பொதுமக்கள். மக்களுக்குத் தான் இறையாண்மை இருக்கிறது. உலகநாடுகளில் அதிகாரப்பரவலானது கீழ்க்கண்ட நான்கு முறைகளால் முன்னெடுக்கப்பட்டது.

1. தன் நாட்டின் அரசியல் சாசன சட்டத்தைத் திருத்தினார்கள்

2. பவ நாடுகளில் தனிச்சட்டமாகக் கொண்டு வந்தார்கள்.

3. மாநிலத்தில் சட்டம் போட்டார்கள்.

4. அரசாங்க ஆணையின் மூலம் உருவாக்கினார்கள்.

by Lakshmi G   on 11 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.