LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை- நிகழ்வு 6

தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம்பேராசிரியர் முனைவர் . பழனித்துரை- நிகழ்வு 6

"தமிழக கிராமப்புற உள்ளாட்சி சட்டம் 1994இ ஒரு பார்வை"

கிராமப் பஞ்சாயத்துச் சட்டம்:

    1993 ஆம் ஆண்டு 73வது அரசியல் சாசன சட்டம் முடிவடைந்திருந்தது. எனவே ஓராண்டுக்காலம் மாநில அரசுக்கு அவகாசம் கொடுத்து ஒவ்வொரு மாநிலமும் 73வது சட்டத் திருத்தத்தை உள்வாங்கி அம்மாநிலத்திற்கு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இந்தியா முழுவதும் அரசியல் திருத்தச் சாசனத்தையொட்டி அதனுடைய சாராம்சத்தை வைத்துத்தான் இனிமேல் உள்ளாட்சி நடக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் வந்ததால் எல்லா மாநிலமும் ஓராண்டிற்குள் அதாவது 24.04.1994 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் எல்லா மாநிலங்களுக்கும் வந்தது.

தமிழகத்தின் சூழல்:

    இந்நிலையில் பல மாநிலங்களும் எப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்குவது, கிராம சபைக்கு அதிகாரம் கொடுப்பது எப்படி, கிராம பஞ்சாயத்து உருவாக்குவது, எவ்வாறு ஒன்றிய மற்றும் மாவட்ட பஞ்சாயத்தை எவ்வாறு உருவாக்குவது என பல்வேறு நிலையில் அரசியல் கட்சிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பொது விவாதங்களிலும் ஓராண்டாக விவாதித்தன. ஆனால் தமிழகத்தில் இதனைப்பற்றி எந்தப் பொது மேடைகளிலும் ஓராண்டுக்காலத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மூன்றடுக்கு பஞ்சாயத்து தங்களுக்குத் தேவையில்லை என்பதே முன்னெடுத்துச் செல்லப்பட்டது. சில பல்கலைக்கழகங்களில் பேசப்பட்டதே தவிர வேறெங்கும் தமிழகத்தில் இச்சட்டம் பற்றிப் பேசப்படவில்லை. இத்தகையச் சூழலில் இந்தியப்பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்கள் தமிழகத்திற்கு வந்தபோது அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர், ‘ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொடுக்கப்பட்ட ஓராண்டுக்காலம் முடிவடைய சில நாட்களே உள்ளன. ஆனால் தமிழகத்தில் இதனைப் பற்றிய எந்த சட்டமும் வரவில்லை. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ‘ஒரு அரசியல் சாசன சட்டத்தை ஒரு மாநிலம் மீறினால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும், நான் சொல்லத்தேவையில்லை’ என்று கூறியுள்ளார். அதன்படி ஒரு ஆட்சியைக் கலைப்பதற்கான சூழலும் அமையலாம் என்பது அதன்வழி புலப்பட்டது. அதன்பிறகு இரண்டே நாட்களில் அவசரமாகச் சட்டம் இயற்றப்பட்டது. 73வது அரசியல் சாசன சட்டத்தை உள்வாங்கி தமிழகத்தில் 22.04.1994 ஆம் தேதி பஞ்சாயத்து அரசாங்கத்தை உருவாக்குவதற்காக வந்தது. 

தமிழகச்சட்டத்தின் பொருண்மை:

    இவ்வாறு கொண்டுவரப்பட்ட கிராம பஞ்சாயத்துச் சட்டத்தில் குறிப்பிட்ட பொருண்மைகள் இருந்தன. அதன்படி,

1. ஒரு கிராம சபை இருக்க வேண்டும், அது மக்களின் பாராளுமன்றமாக அமையவேண்டும்.

2. ஒரு கிராமத்தில் கிராம பஞ்சாயத்து, ஒன்றிய பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து என்ற மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை இருக்க வேண்டும்.

3. ஐந்தாண்டிற்கு முறைத்தேர்தல் நடத்த வேண்டும்.

4. அத்தேர்தலை நடத்துவதற்குரிய ஆணையம், அதிகாரிகள் குழு போன்றவை நிறுவப்பட வேண்டும்.

5. பஞ்சாயத்தும் உள்ளாட்சியும் மாநில அரசும் நிதி பங்கீடு செய்வது பற்றிய நிதி ஆணையம் அமைக்க வேண்டும்.

6. தலித்தினத்தவருக்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட வேண்டும்.

7. மேலும் பெண்களுக்கு 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

8. 73 மற்றும் 74வது சட்ட சாசனத்தின்படி திட்டக்குழு உருவாக்க வேண்டும்.

என்ற அடிப்படையான அதிகாரங்களைத் தமிழக அரசு அளித்திருந்தது.

 

சாராம்சத்தின் மாற்றம்:

    73வது அரசியல் சாசனத்தின்படி அனைத்துச்சட்டங்களும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. பொதுவாக ஒரு சட்டத்தை இயற்றும்போது அதன் சாராம்சத்தை விளக்கியபின் இயற்ற வேண்டும். 73வது பிரிவில் ‘மாநில அரசாங்கம் அதிகாரங்களை ஒரு பஞ்சாயத்திற்குக் கொடுக்கும் போது அவற்றைச் சட்டத்தின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட வேண்டும்.’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் சாராம்சத்தில் மேற்கூறியதில் ‘சட்டம்’ என்ற சொல் இடம்பெறாமல் ‘அரசாணை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு அதிகாரம் சட்டப்பூர்வமாக உள்ளாட்சிக்குத் தந்து பின்பு அதனைத் திரும்பிப்பெற எண்ணினால் அதனைச் சட்டசபை வாயிலாக அணுக வேண்டும். இவ்வாறு எண்ணினால் சட்டம் என்ற சொல் இடம்பெறாமை எவ்வளவு தவறு என்பது விளங்கும்.

மூன்றடுக்கு பஞ்சாயத்து நிலை:

    சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்றடுக்கு அரசியல் நிலைகள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட சிறிது எல்லைக்குள் செய்துவிடக்கூடிய அதிகாரங்களைக் கடைநிலை அமைப்பும் சற்று இயலாதவற்றை இடைநிலை அமைப்பும் இவை இரண்டும் செய்யமுடியாதவற்றை முதல்நிலை அல்லது தலைமை அமைப்பும் செய்துமுடிக்கின்றன. இதனால் உள்ளாட்சி முறை வலுவானதாக மாறுகின்றது. மேலும் தலைமை அமைப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதாக மட்டும் அமைகின்றது. மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையும் இவ்வாறே அமைய வேண்டும். ஆனால் நம்நாட்டில் எளிய அதிகாரங்களைப் பெறுவதற்கு மத்திய அரசை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக உள்ளது. பொதுவாக மத்திய அரசு, மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகளின் அதிகாரங்கள் எவை என்பதைச் சட்டத்தின் வழியே பிறப்பிக்க வேண்டும். ஆனால் தமிழக சாராம்சத்தின் படி சட்டத்தின் வழியில்லாமல் அரசாணைப்படியே அதிகாரங்களைப் பிறப்பித்துள்ளது. இதனால் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் திரும்பப்பெற வாய்ப்புள்ளன என்பதை மறுக்கமுடியாது. மேலும் மூன்று பஞ்சாயத்துகளும் இணைந்து பணியாற்றலாம் என்ற அதிகாரமும் தமிழக சட்டத்தில் இல்லை என்பதைக் காணலாம்.

எல். சி. ஜெயின் குழு:

    தமிழகத்தில் 1994 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவந்து இரண்டு ஆண்டுகள் முடிந்தும் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவில்லை. இதனால் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், சிறந்த காந்தியவாதியும் அறிஞருமான எல். சி. ஜெயின் அவர்கள் தலைமையில் குழு அமைத்து இதனைப்பற்றி ஆய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும்படி ஆணைபிறப்பித்தார். இவ்வாய்வறிக்கையில் தலைசிறந்த கருத்துக்களை விளக்கியிருந்தார் ஜெயின். அந்த காலகட்டத்தில் அக்கருத்துக்களை ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழகத்தில் சிறந்த உள்ளாட்சியை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பது திண்ணம். ஆனால் இக்குழுவின் அறிக்கையை யாரும் பெரிதாக அப்போது எடுத்துக்கொள்ளவில்லை.

மத்திய அரசின் செயல்பாடு:

    கிராம பஞ்சாயத்துக் கட்டத்தை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட நடவடிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. அதன்படி ஒரு கிராமப் பஞ்சாயத்தின் செயல்பாடு, ஒரு ஒன்றிய பஞ்சாயத்தின் செயல்பாடு மற்றும் ஒரு மாவட்ட பஞ்சாயத்தின் செயல்பாடு ஆகியவற்றைத் திட்டமிட்டு வரைபடம் போன்று உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தது மத்திய அரசு. ஆனால் இதனை யாரும் கடைப்பிடிக்கவில்லை.

    மேலும் மத்திய நிதிநிலை தாக்கலில் பஞ்சாயத்திற்கான ஒதுக்கீடு என்ன என்பதைத் தமிழகத்தில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்பதில்லை. ஆனால் கேரளத்தில் நிதிநிலை தாக்கலின் போதே தங்கள் பஞ்சாயத்திற்கான ஒதுக்கீட்டை அறிந்துவைத்திருக்கின்றனர். இதற்கெனவே கேரளத்தில் அவ்வரசு ‘பஞ்சாயத்துச் சாளரம்’ என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் தகவல்களை அறிந்து வைத்திருக்கின்றனர். தமிழகத்தில் இதுபோன்ற அமைப்பு இல்லை என்றாலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஓரளவிற்கு அறியத்துவங்கியுள்ளனர்.

அரசியல் சாசன சட்ட ஆய்வு:

    பொதுவாகக் கிராம பஞ்சாயத்தின் தேர்தல் நடைபெறும் போதும் பஞ்சாயத்திற்கு நிதி கிடைக்கப்பெறும் சூழலின் போதும் மத்திய ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அமைந்துவிடலாம். அத்தகைய சூழலை எதிர்கொள்ள ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையை மத்திய அரசு உருவாக்க எண்ணியது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் அரசியல் சாசனத்தை ஆய்வு செய்யலாம் என முன்மொழிந்த போது பலத்த எதிர்ப்பும் ஆலோசனைகளும் நாடெங்கிலும் வெளிப்பட்டன. எனவே சற்று மாற்றியமைத்து அரசியல் சாசனம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை ஆராயலாம் என்று குழு அமைத்தார். அக்குழுவின் ஆய்வறிக்கையில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை வேண்டாமென்று எண்ணினால் இரண்டடுக்கு முறையை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவ்வாறு தேர்வு செய்ய விரும்பும் இரண்டினைக்கூற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவ்விரண்டில் கட்டாயம் மாவட்ட பஞ்சாயத்து இடம்பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் இம்முறை செயல்படவில்லை.

அறிந்துகொள்ள வேண்டியவை:

    பஞ்சாயத்துத் தலைவராக வந்தவுடன் அரசாங்கம் தான் சொல்வதைத்தான் கேட்கும் என்று எண்ணக்கூடாது. ஏனெனில் இந்தியநாடு அரசியல் சாசன சட்டத்தால் உருவானது. அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படவேண்டும் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். ஒரு பஞ்சாயத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தைக் கிராமசபைகள் பெற்றுள்ளன என்பது பலரும் அறிந்திராத செய்தி ஆகும். இவையெல்லாம் சட்டத்தின் வழியில்லாமல் அரசாணையின் படியே அமைந்துள்ளன. எனவே இவற்றைத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

by Lakshmi G   on 15 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.