LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அகத்திணை

ஐந்திணை எழுபதில் அகத்திணைக் கூறுகள் - சி. ஜெபஸ்டெல்லா

அகம் என்பது மனித சமுதாயம் முழுவதையும் ஒரே மனப்பான்மையுடன் நோக்கும் தன்மையாகும். இது உலகியல் வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பயின்று வரும் பொருகளைப் பிரித்துப் பேசுவதாகும். இதனை அகத்திணை நெறி என்பர். ஐந்திணை எழுபதில் இடம்பெறும் இத்திணைக் கூறுகள் பற்றி இந்த ஆய்வு அமைகிறது.
அகத்திணைக் கூறுகள்: அன்பையும் இன்பத்தையும் உணர்த்துவது அகம். இவை மக்களை நல்வழியில் செலுத்துபவை. பண்டைத்தமிழ்ப் புலவர்கள் புனைந்துரை வகையில் செய்த நூல்களுள் ஒன்று ஐந்திணை எழுபது. இவ்வைந்திணை எழுபது பதினென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று. இத்தொகுதியிலுள்ள அகத்திணை சார்ந்த நூற்கள் ஐந்து. அவற்றுள் ஒன்றான ஐந்திணை எழுபது அகத்திணைக் குறிஞ்சி, முல்லை, பாலை மருதம், நெய்தல் என்று பாகுபடுத்துகின்றது. ஒவ்வொரு திணைக்கும் 14 பாடல்கள் உள்ளன. இவற்றுள் முல்லைத் திணையிலும், நெய்தல் திணையிலும் முறையே இரண்டிரண்டு பாடல்கள் மறைந்துள்ளன.
அன்பு இன்பத்திற்கு முதன்மையானதாகும். இதனை, அழகும் இனிமையும் தோன்றக் கூறுவது இந்நூல். இன்பத்தின் தோற்றமாகிய புணர்ச்சியையும், அப்புணர்ச்சியால் நிமித்தங்களையும் உணர்த்தும் குறிஞ்சியை முதலில் கூறுகின்றார். அப்புணர்ச்சியால் பெற்ற அன்பினைத் தளரவிடாது அகத்திருத்தி அமைவதாகிய முல்லையை எடுத்துரைக்கிறார். அதையடுத்து அவ்வன்பின் நிலைபேற்றைக் காண்பதற்குரிய பிரிவாகிய பாலையைப் பகருகிறார். இவற்றின் பயனாகிய ஊடலும், கூடலுமாகிய மருதத்தை நான்காவதாக நவில்கின்றார். இவைதான் பேரின்பத்தை அடைவிக்கும் பெருவழி என்பதைத் தெரிவிக்கும் இரங்கலாகிய நெய்தலை இறுதிவுரைக்கிறார் குறிஞ்சித்திணையில் இறைச்சிப் பொருளைக் கையாண்டுள்ளார். முல்லைத்திணைப் பாக்கள் அனைத்தும் தலைவிக் கூற்றாகவே இடம் பெறுகின்றன. பாலைக்குத் தனிநிலம் இல்லை என்பது புலனாகிறது. முப்பத்தாறாவது பாடலில் முல்லையையும் பாலையையும் குறிப்பிடுகின்றார். இத்திணையில் அக்கால மக்களின் நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. மருதத்திணையில் தலைவன் புதல்வனைப் பெற்றெடுத்தல் கூறப்படுகிறது. பரத்தையார் தலைவனை மாலையால் பிணைத்துச் செல்வதை உள்ளவாறே கூறுகிறார். நெய்தல் திணையில் தலைமகள் தலைமகனை இயற்பட மொழியும் திறன் இன்புறத்தக்கதாகும். இந்நூலை இயற்றியவர் மூவாதியார், இவரைப்பற்றி வேறு செய்திகள் காண்பதற்கில்லை. அகத்திணைக் கூறுகள் முப்பொருள்களைக் கொண்டிலங்குகின்றன.
இம்முப்பொருள்களை முதல், கரு, உரி என்று வகைப்படுத்துகின்றனர் இதனை,
முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுப் பயின்றவை நாடுங்காலை (தொல். அகத்.3)
என வரும் நூற்பா பகர்கின்றது.
முதற்பொருள்: ஒரு செயல் செவ்வனே நடைபெறுவதற்கு அடிப்படையாய் அமைவது இடமும் காலமும் ஆகும். இது முதற்பொருள் எனப்படும். இதனை.
''முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே'' (தொல். அகத்.4)
எனவரும் நுற்பா வெளிப்படுத்துகின்றது.
தமிழர்கள் நிலத்தை மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றும். காடு காடு சார்ந்த இடம் முல்லை என்றும், குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம் பாலை என்றும், வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என்றும் வகைப்படுத்துவர். ஐந்திணை எழுபதில் சாரற்கானக நாட (ஐந்.குறி.பக்.1) மலைநாடனை (3), போன்றவை குறிஞ்சிக்கும். கார்க்கொடி முல்லை (7), முல்லைத்தளவொடு (10), போன்றவை முல்லை நிலத்திற்கும், பழனம் (மரு.7) மருதத்திற்கும் திரை (நெய்.1) நெய்தலிருங்கழி (4), நெய்தல்கமழும் (5). திரை சேர்ப்பன் (6). திரை நீக்கி (12) போன்றவை நெய்தல் நிலத்தையும் குறிப்பிடுகின்றன.
பெரும் பொழுது: பண்டைத் தமிழர்கள் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இருவகையாகக் குறிப்பிடுகின்றனர். இதனை,
''காரே, கூதிர் முன்பனி பின்பனி
சீரிளிவேனில் வேனிலென்றாங்
கிருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே'' (நம்பி. அகம்.11)
என்று நம்பியகப்பொருள் கூறுகிறது. கார்காலத்தை முல்லை நிலம் உணர்த்துகின்றது. காரோடலமருங்கார் வானங்காண்டொறு (முல்.1)இ காரெதிரி (3), காரதிராவாவி (4), காரெதிர முல்லை யெயிறீனக் காரோ (7), கார்க்கொள (9) போன்றவை பெரும் பொழுதுகள் ஆகும்.
சிறுபொழுது: ஒருநாளில் இடம் பெறும், மாலை, யாமம், வைகறை, ஏற்பாடு, காலை, நண்பகல் ஆகிய ஆறு கூறுகளும் சிறுபொழுதாகும். இதனை,
''மாலை யாமம் வைகுறு வென்றா
காலை நண்பக லெற்பாடென்றோ
அறுவகைத்தென்ப சிறு பொழுதவைதாம்'' (இலக்கண விளக்கம் 385)
என வரும் நூற்பா நவில்கிறது. முல்லைத்திணையில் சிறுமாலை (3), வருந்தச்சிறுமாலை (6), வந்தலைக்கு மாலைக்கோ (41) போன்றவை அதனை மெய்ப்பிக்கின்றன.
கருப்பொருள்: கருப்பொருளை அகத்திணையின் முதிர்ந்த வீழ்கரு என்றும் அகத்திணையின் வளர்கரு என்றும் வ.சு.மாணிக்கம் குறிப்பிடுகிறார். (தமிழ்க்காதல் பக்.27-28) தொல்காப்பியர் இதனை,
தெய்வம் உணாவை மா மரம் புட்பறை
செய்தியாழின் பகுதியோடு தொகைகு
அவ்வகைப்பிறவும் கருவென மொழிப் (தொல்.அகத்.20)
எனவரும் நூற்பா குறிப்பிடுகிறது. ஐந்திணை எழுபது உணவு, மா, மரம், புன், செய்தி போன்றவற்றை விளக்குகின்றது. உணவினை ஐவனம் (9), வார்குலலேனல் (2), எறிசுறா (நெய். 6) பண்மீணுங்கல் (7), சிறுமீன் (8), போன்றவை உணவாக அமைகின்றன. ஆமான் (6), கொடுவரி (9) பேழ்வாயிரும்புலி (11), குஞ்சரம் (11), வெருடு (12), ஆகிதை போன்ற விலங்குகளும் மரங்களாக மன்றபலவின் (குறி3), கொன்றை (முல்4), ஓமை (பாலை 3), முதுமரம் (13) பன்னைமரம் (நெய்.2) பெண்ணை (9), போன்றவையும், பறவைகளாக மயில் (முல்.2) குருகு (நெய்.1) வாழும் குருகு (6), செந்தூவி நாராய் (8), புணரன்றில் (10) போன்றவையும், நீராக கான்யாறு, (குறி.6) சுனைநீர் (7), அருவி நீர் (8), போன்றவையும் மலர்களாக பைங்கொடி முல்லை (மருதம்.1), முண்டகம் (தாழை) போன்றவையும், மக்களைத் தாமரைக்கண்ணன் (மருதம்.1) போதுரமூரன், பொய்கை நல்லூரன் (9), வனவயலூரன் (11), புனலூரன் (13), துறைவன் (நெய்.1) துன்னந்துறைவன் (5), எனவும் குறிப்பிடுகின்றன.
உரிப்பொருள்: மக்கட்கு உரிய பொருள் உரிப்பொருள் ஆகும். இது மக்களின் வாழ்க்கையை ஒட்டியே அமைகிறது. ஐந்திணை என்பது ஐந்து வகையான ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். இவ்வைந்து ஒழுக்கங்களையும் அவை இன்னின்ன நிலத்திற்குரியன என்பதையும்,|
''போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கம் சேர் ஊடல் அளி மருதம் நோக்குங்கால்
இவ்விருத்தல் முல்லை, இரங்கல் நறுநெய்தல்
சொல்லிருந்த நூலின் தொகை''
என்ற பழம்பாடல் பகர்கின்றது. அகத்திணைப் பாடல்களில் உரிப்பொருள் சிறந்து விளங்க முதற்பொருளும், கருப்பொருளும் பின்னணியாக அமைகின்றன. உரிப்பொருள் இன்றி அகத்திணைப் பாடல் இயற்றப்படுவதில்லை. தலைவி தலைவனுக்காக ஆற்றியிருத்தல் இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும். இது முல்லைத்திணைக்குரிய உரிப்பொருள் ஆகும்.
குருந்தலை வான்படலை சூடிச் சுரம்பார்ப்ப
வாயன் புகுதரும் போழ்தினா னரியிழாய்
பின்னொடுநின்று பெயரும் படுமழை கொ
லென்னொடு பட்ட வகை''
எனவரும் பாடலில் தலைவன் வினை முடிப்பதற்காகச் செல்கிறான். செல்லும்போது, கார்காலம் வந்தவுடன் நான் மீண்டும் வருவேன் என்கிறான். கார்காலம் வந்தும் தலைவனைக் காணவில்லை. பசுக்கள் முல்லைக்காட்டில் மேய்ந்துவிட்டு தன் இல்லங்களுக்குச் செல்கின்றன. அதனைத் தலைவி பார்த்ததும், தலைவனைக் காணவில்லையே என்று ஏங்கி, அவன் வரும் வரை அவனுக்காகக் காத்திருக்கிறாள். இதில் இருத்தல் என்னும் உரிப்பொருள் இடம் பெற்றுள்ளது.
முடிவுரை: பண்டைத் தமிழர்கள் புனைந்துரை செய்த நூல்களில் ஐந்திணை எழுபதும் ஒன்றாகும். இந்நூலில் காணப்படும் பாடல்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பகுத்து ஆராயப்பட்டுள்ளன. திணைப்பாகுபாடு குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்று வைப்பு முறையில் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனித்தன்மையாகும். சங்க காலத்திற்குப் பின்தோன்றிய இந்நூலினுள் அகத்திணைக் கூறுகள் பண்டைத் தமிழ் மரபினை ஒட்டியே அமைந்துள்ளன.

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.