|
||||||||
ஏலாதி -மருத்துவ நூல் |
||||||||
பதினெண் கீழ்க்கணக்கில் வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியம் ஏலாதி என்ற மருத்துவ நூல் ஆகும். இதற்குப் பெயர் காரணம் ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும்.
பதினெண் கீழ்க்கணக்கில் வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியம் ஏலாதி என்ற மருத்துவ நூல் ஆகும். இதற்குப் பெயர் காரணம் ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும்.
என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். மனித வாழ்விற்கு எப்படி உடல் நலம் இன்றியமையாததோ அதேபோல மன நலத்தையும் அதை முதலாகக் கொண்ட வாழ்க்கை நலத்தையும் சீராக ஆக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கும் ஒரு வாழ்வியல் நூல். மனநலமும் வாழ்க்கை சீராக்கி அறநெறியில் கொண்டு செல்லும் வழிமுறைகளை காட்டும் வாழ்வியல் நூல்.
மருத்துவத்துறையில் மனநலம் மிகவும் இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம், மனசோர்வு முதலிய நோய்களுக்கு சிகிச்சை உள்ளது. சங்ககாலத்திலேயே மனித வாழ்வியல் பற்றி மிகவும் அழகாக 80 பாடல்கள் மூலம் ஆறு வகையான கருத்துக்களை ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ளது. இதில் இல்லறவியல், துறவியல் இரண்டை பற்றியும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.இவர் மதுரை தமிழ் ஆசிரியர் மாக்காயனார் என்பவரின் மாணாக்கர். சிறுபஞ்சமூலம் நூலை இயற்றிய காரியாசானும் இந்நூலின் ஆசிரியராகிய கணிமேதாவியார் இருவரும் சமகாலத்தில் மாக்காயனாரிடம் தமிழ் பயின்றவர்கள். சிறுபஞ்சமூலம் நூலில் ஐந்து வகையான விஷயங்களை கொண்டுசெல்லப்பட்ட பாடல், ஏலாதியில் ஆறுவகையான கருத்துக்களை சொல்லும் பாடல் இடம் பெற்றுள்ளது. மிகவும் எளிமையான தமிழில் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் வகையில் இன்றைய வழக்கத்தில் உள்ள சொற்களைக் கொண்டே பாடல்கள் புனையப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. எடுத்துக்காட்டாக
கொலையுரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்
மண்ணவர்க்கும் அன்றி மதுமலிபூங் கோதாய்
விண்ணவர்க்கும் மேலாய் விடும்.
தேன் பொழியும் பூவை யணிந்த கூந்தலையுடையாய்! கொலைத்தொழிலை செய்யாதவன், கொல்லாதவனும், புலால் முதலிய அசைவ உணவை சுவைக்காதவன், மிகுந்த வருத்துந் தொழிலைச் செய்யாதவனும்,வஞ்சனை முதலிய கீழான குணங்கள் இல்லாதவன், தன்னிலைமையினின்று விலகாதவனும் என்பதை போதை முதலிய தீய பழக்கங்கள் இல்லாததால் எப்பொழுதும் தன் நிலையை உணர்ந்தவன் இத்தகைய ஆறு வகையான உயர் பண்புகளை ஒருவன் கொண்டு இந்த பூலோகத்தில் வாழ்ந்தால் அவனை விண்ணவர் என்று கருதப்படும் தேவர்கள் முதலியவர்களுக்கு மேலாக கருதப்படுவான் அல்லது தெய்வத் தன்மை உடையவனாக வணங்குவதற்குரியவனாக கருதப்படுவான் என்பதே இதன் பொருள்.
இந்தப் பாடலில் கூறியதுபோல இந்த ஆறு வகை குணத்தை கொண்டால் ஒருவன் இந்த வையகம் எல்லாம் தெய்வமாக போற்றப்படுவது சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.
அதற்கு விடை கௌதம புத்தர். அவர் சாம்ராட் அசோகனுக்கு கலிங்கத்து போர்க்களத்தை பார்வையிட்டு யுத்தத்தை கைவிடுமாறு சொல்லி அமைதியான அகிம்சை மார்க்கத்திற்கு அழைத்துச் சென்றார். முதல் கருத்தான கொலையுரியான். ஏனென்றால் புத்தரே ஒரு அரச வம்சத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அரசருக்கு உரிய தர்மம் யுத்தம் செய்வது, காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவது என்று எதையும் அவர் செய்யவில்லை. மேலும் அவர் புலால் உணவை தவிர்க்கும்படி உபதேசம் செய்தார். அவருடைய "பஞ்சன சில்லா" என்ற கொள்கை கோட்பாடு இந்தப் பாடலில் கூறப்பட்ட கருத்துக்களை மிகவும் ஒத்ததாக இருக்கும். அவை யாதெனில்
* எந்த உயிர்களையும் கொல்லாமை - கொலையுரியான்,கொல்லான்,புலால் மயங்கான்
* எந்தப் பொருள்களையும் களவு செய்யாமல் இருத்தல் -கூர்த்த அலைபுரியான்(வருத்துந் தொழிலைச் செய்யாதவன்)
* பாலியல் ஒழுக்கம் இல்லாமல் இருத்தல் -வஞ்சியான்
* பொய் சொல்லாமல் இருத்தல் - வஞ்சியான்
* போதைப் பழக்கத்திற்கு ஆட்படாமல் இருத்தல்- யாதும் நிலைதிரியான்
இத்தகைய கொள்கையால் தான் புத்தர் இன்றளவும் உலகில் பல நாடுகளில் தெய்வமாக வணங்கப்படுகிறார். இதிலிருந்து இந்தப் பாடலின் உண்மைத்தன்மை நமக்குப் புரிகிறது.
|
||||||||
by Dr. Girija Narasimhan on 01 Sep 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|