|
|||||
அம்பிகாபதி திரை விமர்சனம் ! |
|||||
![]() நடிகர் : தனுஷ்
நடிகை : சோனம் கபூர்
இயக்குனர் : ஆனந்த் ராய்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : நட்ராஜ் சுப்பிரமணியம்
விமர்சனம் : காசியில் இருக்கும் ஒரு ஏழை புரோகிதரின் மகன்தான் தனுஷ். கதையின் நாயகி சோனம் கபூரின் குடும்பமோ ஒரு பணக்கார முஸ்லீம் குடும்பம். சிறு வயதில் இருந்தே தனுஷ், சோனம் கபூர் மீது ஒரு விதமான ஈர்ப்பில் இருந்துவருகிறார். இதுவே இளமை பருவத்தில் காதலாக மாறியது, சோனம் கபூரும் தனுசை காதலிக்க ஆரம்பிக்கும்போது, மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார்.
ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி காதலை ஏற்று கொள்ள மறுக்கிறார். இருந்தாலும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை துண்டிக்காமல் தொடர்ந்து பழகி வருகிறார்.இந்நிலையில் சோனம் கபூர் வீட்டில் அவருக்கு தெரியாமல் அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். விருப்பம் இல்லாத இந்த திருமணத்தை நிறுத்த சோனம் கபூருக்கு, தனுஷ் உதவி செய்கிறார். இருப்பினும் தானும், அபேதியோலும் காதலிப்பதாக தனுஷிடம் சோனம் கபூர் சொல்கிறார். இதனால் மீண்டும் வெறுப்படைகிறார் தனுஷ். இறுதியாக தனுஷ் காதல் கைகூடியதா? இல்லை அபேதியோல், சோனம்கபூர் காதலில் என்ன நடந்தது? என்பதே படத்தில் மீதி கதை.
பலம் :
1. அம்பிகாபதி படம் தனுசிற்கு பாலிவுட்டிலும் ஒரு நிரந்தர இடத்தை பெற்று தரும் என்பதை அவரது நேர்த்தியான நடிப்பின் மூலம் காணலாம்.
2. வித்தியாசமான கதாபாத்திரத்தில் வரும் அபே தியோல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்து முடித்திருக்கிறார்.
3. அரசியல்,காதல் போன்ற பல்வேறு கதை களத்தில் புகுந்து விளையாடும் சோனம் கபூர் கதைக்கு மிக பொருத்தம்.
4. ஏ.ஆர்.ரஹ்மான் இசை பாடல்களை கேட்க தூண்டுகிறது. மேலும் படத்தின் பின்னணி இசை அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது
பலவீனம் :
படம் முதல் பாதி முழுவதும் காதல், இசை என்று விறுவிறுப்பாக பயணிக்க. இரண்டாம் பாதியில் அரசியலில் இறங்கி, தட்டுதடுமாறி எல்லையைக் கடப்பதை சரி செய்திருக்கலாம். |
|||||
by Swathi on 29 Jun 2013 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|