இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திங்கள் முதல் செவ்வாய் காப்புக்கட்டி இரண்டாவது செவ்வாய், புதன் கிழமை திருவிழா நடப்பது வழக்கம்.ஊட்டுச்சோறு வந்தவுடன் அம்மனுக்கு ஊர் மக்களின் சார்பாக கிராமத்தில் அபிஷேகம் செய்து பூஞ்சோலைக்கு புறப்படும் இக்காட்சியை ஊரணியின் உள்ளேயும், நான்கு புறங்களிலும் மக்கள் குழுமி நின்று அம்பிகை பூஞ்சோலை செல்வதை கண்டு களிக்க காண கண் கோடி வேண்டும்.
அம்மன் கிழக்கு கரையை அடைந்தவுடன் அனை வரையும் காப்பேன் என்று உறுதி கூறுவது போல் நான்கு திசையிலும் மூன்று முறை அருட்கண் பார்வை செலுத்தி பூஞ்சாலை நோக்கி புறப்படுவது கண்டு மக்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி மெய் சிலிர்க்க ஆனந்த கண்ணீர் மல்க பிரியா விடை பெறுவார்கள். அன்று இரவு நாடகம் நடைபெறுவதுடன் திருவிழா இனிது நிறைவேறும். |