இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் இது.கந்தசஷ்டி கவசம் படிப்பவர்கள் "இடும்பாயுதனே இடும்பா போற்றி' என்ற வரியை வாசிப்பார்கள். இதிலிருந்தே
பழநிமலை தோன்றக் காரணமான இடும்பனின் முக்கியத்துவத்தை அறியலாம். இங்கு செல்லும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இடும்பன் மலையை எட்டிக்கூட
பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், பழநியாண்டவரின் திருவருளால் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டு 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச் சிறப்பு உண்டு. ""என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும். உன்னை வணங்கு
வோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும்,'' என்று முருகனே அருள் பாலித்திருக்கிறான். இனி பழநி செல்பவர்கள் அவசியம் இடும்பன் மலைக்கும் சென்று
வாருங்கள்.2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி
வருவது போன்ற பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் இது.கந்தசஷ்டி கவசம் படிப்பவர்கள் "இடும்பாயுதனே இடும்பா போற்றி' என்ற வரியை வாசிப்பார்கள். இதிலிருந்தே பழநிமலை தோன்றக் காரணமான இடும்பனின் முக்கியத்துவத்தை அறியலாம். இங்கு செல்லும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இடும்பன் மலையை எட்டிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், பழநியாண்டவரின் திருவருளால் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டு 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச் சிறப்பு உண்டு. ""என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும். உன்னை வணங்கு வோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும்,'' என்று முருகனே அருள் பாலித்திருக்கிறான். இனி பழநி செல்பவர்கள் அவசியம் இடும்பன் மலைக்கும் சென்று வாருங்கள்.2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. |