6 3/4 அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வேல், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூத
சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்புப் பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில் விதானத்தில் ஒரு சிறிய துவாரம்
அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபம் அறுகோண வடிவில் முருகனின் சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகனின் பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து
வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்துவருவது சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளது. வெற்றிவேல்,
வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என பல்வேறு திருநாமத்தில் அழைக்கப்படும் வேலின் சிறப்புகள் பல்வேறு நூற்களில் காணலாம். வேல்
பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. வேல் சின்னத்தை உடலில் அணிந்து கொள்வதும், மனதார வேல் வேல் என ஓதுவதும் வேலை மனதில் நிறுத்தி
தியானிப்பதும் வேலை வழிபடுவோர்க்கும் வினைகள் பட்டழியும். இதனைத்தான் வேலுண்டு வினை இல்லை என்பர். இத்தனை சிறப்புக்களும் ஒருங்கே
அமையப்பெற்ற வேலுக்கென ஒரு தனிக் கோயில்.
6 3/4 அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வேல், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்புப் பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில் விதானத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபம் அறுகோண வடிவில் முருகனின் சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகனின் பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்துவருவது சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளது. வெற்றிவேல், வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என பல்வேறு திருநாமத்தில் அழைக்கப்படும் வேலின் சிறப்புகள் பல்வேறு நூற்களில் காணலாம்.
வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. வேல் சின்னத்தை உடலில் அணிந்து கொள்வதும், மனதார வேல் வேல் என ஓதுவதும் வேலை மனதில் நிறுத்தி தியானிப்பதும் வேலை வழிபடுவோர்க்கும் வினைகள் பட்டழியும். இதனைத்தான் வேலுண்டு வினை இல்லை என்பர். இத்தனை சிறப்புக்களும் ஒருங்கே அமையப்பெற்ற வேலுக்கென ஒரு தனிக் கோயில். |