முருகப்பெருமானின் ஆறு முகங்களும் முன்னும் பின்னுமாக அனைத்து திசைகளையும் நோக்கிய வண்ணம் இருக்கும். ஆனால், ஒரே திசையை நோக்கிய
ஆறுமுகங்களைக் கொண்ட முருகனாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம்
வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நம் படைப்பில் கோளாறு இருந்தாலும், விதியையே மாற்றும் வல்லமையுள்ளது என்பர்.இங்கு அருள்பாலிக்கும்
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நம் படைப்பில் கோளாறு இருந்தாலும், விதியையே மாற்றும்
வல்லமையுள்ளது என்பர். மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு.
சோமஸ்கந்தராக உள்ள முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காட்சிதருகிறார். வடக்குநோக்கிய மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற
பெயருடன் உள்ளார். இவரது ஆறுமுகங்களும் நேரே நோக்கியநிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களைத் தாங்கியபடி காட்சி தருவது சிறப்பாக உள்ளது. கோயில்
அமைப்புப்படி இவரே மூலவராக அருள்பாலிக்கும் தோற்றத்தில் உள்ளார். சுவாமிக்கு இடப்புறத்தில் அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது. ஒரு தூணில் மேற்கு
நோக்கியபடி ஆஞ்சநேயர் அருட்காட்சிதருகிறார்.
முருகப்பெருமானின் ஆறு முகங்களும் முன்னும் பின்னுமாக அனைத்து திசைகளையும் நோக்கிய வண்ணம் இருக்கும். ஆனால், ஒரே திசையை நோக்கிய ஆறுமுகங்களைக் கொண்ட முருகனாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு.சோமஸ்கந்தராக உள்ள முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காட்சிதருகிறார். வடக்குநோக்கிய மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற பெயருடன் உள்ளார்.
இவரது ஆறுமுகங்களும் நேரே நோக்கியநிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களைத் தாங்கியபடி காட்சி தருவது சிறப்பாக உள்ளது. கோயில் அமைப்புப்படி இவரே மூலவராக அருள்பாலிக்கும் தோற்றத்தில் உள்ளார். சுவாமிக்கு இடப்புறத்தில் அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது. |