சூரியன், சந்திரனோடு பைரவரும் ஒரே சன்னதியில் இருப்பது கோயிலின் தனி சிறப்பு. வியாதிகளை விரட்டும் விடைவாகனரது கருவறையை விட்டு வெளியே
வந்தால், கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, மற்றும் விஷ்ணு துர்க்கையும்; கருவறைக்கு இடது புறம் வெளிச்சுற்றில்
சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் நால்வர் சன்னதிகள் அமைந்துள்ளன.
வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்க, அதற்கு எதிரில் மேற்குப் பார்த்த சூரியன், சந்திரனோடு பைரவரும் சேர்ந்து ஒரே சன்னதியில்
அருள்பாலிப்பது வித்தியாசமான காட்சி. கோயிலுக்கு வெளியே இடது புறத்தில் அகத்திய புஷ்கரணி அமைந்துள்ளது. அதன்கரையில் மிகப்பெரிய அரசமரமும்,
அதன்கீழ் நாகதேவதைகள், பிள்ளையார், பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி சிலையும் அமைந்துள்ளன.சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம்,
இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள்
இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.
சூரியன், சந்திரனோடு பைரவரும் ஒரே சன்னதியில் இருப்பது கோயிலின் தனி சிறப்பு. வியாதிகளை விரட்டும் விடைவாகனரது கருவறையை விட்டு வெளியே வந்தால், கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, மற்றும் விஷ்ணு துர்க்கையும், கருவறைக்கு இடது புறம் வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.
சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் நால்வர் சன்னதிகள் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் அமைந்திருக்க, அதற்கு எதிரில் மேற்குப் பார்த்த சூரியன், சந்திரனோடு பைரவரும் சேர்ந்து ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது வித்தியாசமான காட்சி. கோயிலுக்கு வெளியே இடது புறத்தில் அகத்திய புஷ்கரணி அமைந்துள்ளது.
அதன்கரையில் மிகப்பெரிய அரசமரமும், அதன்கீழ் நாகதேவதைகள், பிள்ளையார், பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி சிலையும் அமைந்துள்ளன. சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள். |