பெரிய ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.ஏறத்தாழ இரண்டு
ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழிலும் மண் மணமும் கொஞ்சும் அழகான கிராமம் எழுச்சூர். மன்னர்களின் மான்யங்கள், மகான்களின்
அருளாசி, விக்கிரகங்களின் வியப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகள் என்று எழுச்சூருக்கே உரித்தான ஏராளமான சிறப்புகளும் உண்டு.
கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற விக்கிரகங்கள் உள்ளன. இந்தப் பிரகாரத்தில் விநாயகர்,
சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள், 54-வது காஞ்சி பீடாதிபதியான வியாசாசல மஹாதேவேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிர்ஷ்டானம் போன்றவை உள்ளன. மகாவிஷ்ணு மற்றும் தாயார் விக்கிரகங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு ஆலயத்தின்
பின்பகுதியில் உள்ளன.ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து
ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார்.
ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழிலும் மண் மணமும் கொஞ்சும் அழகான கிராமம் எழுச்சூர். மன்னர்களின் மான்யங்கள், மகான்களின் அருளாசி, விக்கிரகங்களின் வியப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகள் என்று எழுச்சூருக்கே உரித்தான ஏராளமான சிறப்புகளும் உண்டு.
கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை போன்ற விக்கிரகங்கள் உள்ளன. இந்தப் பிரகாரத்தில் விநாயகர், சூரியன், கால பைரவர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள், 54-வது காஞ்சி பீடாதிபதியான வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிர்ஷ்டானம் போன்றவை உள்ளன.
மகாவிஷ்ணு மற்றும் தாயார் விக்கிரகங்கள் கருடாழ்வார், ஆஞ்சநேயரோடு ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளன. ஆறுமுகப் பெருமான் தமது வலப் புறத்து ஆறு கைகளில் வர முத்திரையும், சக்தி, அம்பு, கத்தி, சக்கரம், பாசம் போன்ற ஐந்து ஆயுதங்களையும், இடப் புறத்து ஆறு கைகளில் அபய முத்திரையும், வஜ்ரம், வில், கேடயம், சங்கு, அங்குசம் போன்ற ஆயுதங்களையும் தாங்கி உள்ளார். |