இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய சிவாலயம்.மேற்கு நோக்கிய தலம், மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ்
சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் பைரவர், குருபகவான், நடராஜர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், நால்வர்,
திருநீலகண்ட நாயனார் சன்னதிகள் உள்ளது.தலவிருட்சம் வன்னி மரத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னதியில் 7 நாகங்கள் உள்ளன. இங்கு வேண்டிக்
கொண்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.இங்கு அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பது வித்தியாசமானதாகும். இவளது
சன்னதி எதிரில் விநாயகர் இருக்கிறார். இவர் தாயைப் பார்த்தபடி இருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும்
என்பது நம்பிக்கை. சூரிய, சந்திர பூஜை: கல்வெட்டுக்களில் இவ்வூர் "மேற்றலைத்தஞ்சாவூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் ராஜகோபுரத்தின் அருகில் சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளது. தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சூரியனுக்கும்,
திங்கள்கிழமையில் சந்திரனுக்கும் அதிகாலையில் விசேஷ பூஜை நடக்கிறது. நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சூரியனைப் பார்த்தபடி
இருக்கிறது. சனீஸ்வரன் தனிச் சன்னதியில் இருக்கிறார். சனிக்கிழமைகளில் காலையில் இவருக்கு எள் சாதம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய சிவாலயம்.மேற்கு நோக்கிய தலம், மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் பைரவர், குருபகவான், நடராஜர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், நால்வர், திருநீலகண்ட நாயனார் சன்னதிகள் உள்ளது.தலவிருட்சம் வன்னி மரத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னதியில் 7 நாகங்கள் உள்ளன.
இங்கு அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பது வித்தியாசமானதாகும். இவளது சன்னதி எதிரில் விநாயகர் இருக்கிறார். இவர் தாயைப் பார்த்தபடி இருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கல்வெட்டுக்களில் இவ்வூர் "மேற்றலைத்தஞ்சாவூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் ராஜகோபுரத்தின் அருகில் சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளது.
தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சூரியனுக்கும், திங்கள் கிழமையில் சந்திரனுக்கும் அதிகாலையில் விசேஷ பூஜை நடக்கிறது. நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சூரியனைப் பார்த்தபடி இருக்கிறது. சனீஸ்வரன் தனிச் சன்னதியில் இருக்கிறார். சனிக்கிழமைகளில் காலையில் இவருக்கு எள் சாதம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. |