LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

அம்மானைப்பருவம்

358     நிறைதரு முழுக்கலை மதிக்கடவுள் வாவென்ன நெடியாது வரவெடுத்து
      நெடியசெங் குழைபாய் கருங்கண் களிப்புற நிமிர்ந்தபே ரழகுநோக்கி
மிறைதரு மனத்தொடுன் றமர்நாடு வார்யாம் பிளித்தபோ திங்குவரலாம்
      விண்ணகத் தொல்லெனச் செல்லென வெடுத்துமீ மிசையெறிவ தேய்ப்பவாய்ப்ப
வுறைதரு பசும்பொற் றசும்பொளி யசும்பூற வோங்குபொன் மாடத்தினொள்
      ளொளிபாய வெண்டிசையி லருவிபாய் வரைமுழுது மொழுகொளிய மேருவேய்க்கு
மறைதரு முறந்தைப்பெண் முத்திட் டழைத்ததிரு வம்மானை யாடியருளே
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.
    (1)

359     நளியெறி செழும்பொற் றகட்டுநெட் டேட்டுநறு நளினமனை யாட்டிபாலின்
      னசையுறத் தழுவித் திளைத்தெழீஇ மீச்செல்லு நாயகப் பரிதியேய்ப்ப
வளியெறி முறச்செவி மறம்பாவு நாற்கோட்டு மால்யானை குளகுகொள்ள
      வானாறு தேனா றெனப்பொலிய வூற்றுதேன் மடைதிறந் தோடியெங்குங்
களியெறி மனத்தர மடந்தையர் பயின்றிடுங் கனகநகர் மருகுபாய்ந்து
      கால்வைத் திருந்தொறு மிசுப்புற விசும்பிடை யசும்பொளிப் பொங்கர்காணு
மளியெறி யுறந்தைப்பெ ணவிர்பதும ராகப்பொன் னம்மானை யாடியருளே
      யம்பலத் திரையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.
    (2)

360     பாயொளிய செங்கையம் பங்கயத் தமரிளம் பைஞ்சிறை மடக்கிள்ளைமீப் -
      பற்பல தரம்பறந் துன்கையின் மீட்டும் பரிந்துவந் துறல்கடுப்ப,
மேயதிரை சூழக லிடப்பொறை பரிக்குமொரு விறலாமை முதுகுளுக்க -
      விரிதரும் ப·றலை யநந்தன் படங்கிழிய வெற்றித் திசைக்களிறெலாங்,
காய்சின முகுத்துப் பிடர்த்தலை கவிழ்த்தடற் காத்திர மடித்துநிற்பக் -
      கடலள றெழப்பரிய கனகாச லம்பொருவு கதிர்மணித் தேர்செல்வீதி,
யாய்தமி ழுறந்தைப்பெண் முழுமரக தக்கோல வம்மானை யாடியருளே -
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.     (3)

361     செந்நிற விதழ்க்கமல மலரின்மே னின்றுபொறி செறிவண்ட ரெழுவ தேய்ப்பச் -
      செந்நெற் படப்பைச் செழும்பழன நின்றெழுஞ் சினைவரால் விண்ணகத்துப்,
பொன்னிறக் காமதே னுவின்மடித் தலமுட்டு போதுகன் றென்றிரங்கிப் -
      பொழிநறும் பால்வெள்ள மடையுடைத் தோடியலை பொங்கிநறு நாற்றம்வீசி,
மின்னிற மருப்புப் பொருப்புக ணெடுந்தொண்டை மீமிசை யெடுத்துநீந்த -
      மிளிர்பொற் கொடிஞ்சியந் தேர்தெப்ப மாகநெடு வீதியிற் புக்குலாவு,
மந்நிற வுறந்தைப்பெ ணவிருமுழு நீலப்பொ னம்மானை யாடியருளே -
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.     (4)

362    விரிமல ரிருந்தவர் முதற்றுணைச் சேடியர்கள் வீசுமம் மனைகைபற்ற -
      வேண்டிவல மோடியு மிடத்தோடி யுந்திரிய மேவுமம் மனைசெல் வழிநின்,
வரிமதர் மழைக்கண் டொடர்ந்தோட விருசெவி வதிந்தபொற் குழைவில்வீச -
      வண்கைவளை யோலிட் டரற்றக் கருங்குழலில் வரியளிக் குலமுமார்ப்பக்,
கரியமுது மேதிக ளுழக்கச் சினந்தெழுங் காமரிள வாளையெழில்சேர் -
      கற்பகக் காவின் கழுத்தொடி தரப்பாய் கருங்கழனி புடையுடுத்த,
வரிலறு முறந்தைப்பெ ணாணிப்பொ னம்பவள வம்மானை யாடியருளே -
      யம்பலத் திடையாட வெம்மானை யாட்டுமயி லம்மானை யாடியருளே.     (5)

வேறு.

363    வெதிர்படு தோளிணை மங்கையர் நம்பால் வீணாள் படுமென்று
      மென்பெடை யைத்தழு விக்குயில் புணரும் விதம்பா ரீரென்று
மெதிர்படு வேனிற் பருவமி தெற்றுக் கெய்திய தோவென்று
      மெளமென் கொம்பர்த் தழுவியு நகைசெய் தெழிலுட றிருகல்செய்துங்
கதிர்படு கொங்கை திறந்துந் தங்கள் கருத்தை யுணர்த்தமரீக்
      காதல ரொன்று செயப்பொங் கோதைக் கவின்மே கலையொடுவண்
டதிர்படு பொழில்சூழ் கோழியில் வாழ்மயி லாடுக வம்மனையே
      யகிலமு நிகிலமு முதவிய திருமக ளாடுக வம்மனையே.     (6)

364     பற்பல மணிகள் குயிற்றிய செம்பொற் படரொளி யடரூசற்
      பருநித் திலமணி நீள்வட முயரிய பைங்கமு கிற்புனையா
விற்பொலி நுதலிய ரோடிள மைந்தர்கள் மிகுமுவ கையினேறி
      மெல்ல வசைத்தலு மக்கமு கசையா விண்ணுல கத்தமருங்
கற்பக நற்கொம் பிற்புனை யூசல் கலித்தா டிடவிரைவிற்
      கவின வசைப்ப விறும்பூ துற்றுக் கடவுண்மி னார்மகிழு
மற்புத வளமலி கோழியில் வாழ்மயி லாடுக வம்மனையே
      யகிலமு நிகிலமு முதவிய திருமக ளாடுக வம்மனையே.     (7)

வேறு.

365     பாருந் துளைத்துக் கீழ்போகிப் படர்வான் முகடு திறந்துமிசைப்
      பாய்ந்து பொலியுங் கோபுரத்திற் பசும்பொற் றகட்டிற் பதித்தநிறஞ்
சேரு முழுச்செம் மணிப்பிரபை திகழத் திரண்டு தழைப்பதனாற்
      செழுந்தண் டுளபச் சூகரமுந் திறம்பா மறைக ளொருநான்கு
மோரு மனமுந் தெரிவரிய வொருவ ருருவ மி·தெனவே
      யும்பர் முதலோர் கரங்கூப்பி யுருகித் துதிக்கு மரவொலியே
யாரு முறந்தைப் பெண்ணரசி யாடியருள்க வம்மனையே
      யடியா ருளத்துக் குடியானா யாடியருள்க வம்மனையே.     (8)

366    தெருள்சே ருள்ளத் தொருமூவர் திருவாய் மலர்ந்த திருப்பாடல்
      திகழ்வெண் சுதைமா ளிகைமீது தீபம் பொலிய வதன்முனுறீஇக்
கருள்சே ரிம்மை வினையொழிப்பார் கருதி யுருவேற் றிடக்கண்டு
      கயிலைப் பொருப்பி லெழுந்தருளிக் கழறிற் றறிவார் செம்மேனிப்
பொருள்சேர் பெருமாற் கினியவுலாப் புறங்கேட் பித்த துறழுமெனப்
      புலவர் மகிழ்ந்து கொண்டாடப் பொங்குஞ் சைவத் தன்புதழைத்
தருள்சே ருறந்தைப் பெண்ணரசி யாடியருள்க வம்மனையே
      யடியா ருளத்துக் குடியானா யாடியருள்க வம்மனையே.     (9)

367     மாடு மயில்க ணடமாட மாதர் குழலில் வண்டாட
      மனைக டொறும்வெண் கொடியாட மலர்ச்செங் கொடியு முவந்தாட
நீடு துறைக டொறுங்களிறு நிலவும் பிடியு நீராட
      நீறு புதைத்த முழுமேனி நிகரி லவருங் கூத்தாடக்
காடு புரிமென் குழல்சுமந்த கருங்கண் மடவார் குனித்தாடக்
      கண்டோர் மனமுஞ் சுழன்றாடக் கவின்செ யிவைகண் டியர்வருங்கொண்
டாடு முறந்தைப் பெண்ணரசி யாடி யருள்க வம்மனையே
      யடியா ருளத்துக் குடியானா யாடி யருள்க வம்மனையே.     (10)

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.