LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

ஆனந்த களிப்பு

கும்மி போல மும்மையில் வரினும்
அடியின் இறுதிசேர் அசைநீட் டத்தைத்
தனிச்சொல் முன்னர்த் தாங்கி வருவது
ஆனந்தக் களிப்பென் றறையப் படுமே.
கருத்து : கும்மிப் பாடல்போல மும்மை நடையில் வந்தாலும், கும்மிப் பாடலில் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் சேர்ந்திருக்கின்ற அசை நீட்டத்தைத் தனிச் சொல்லுக்கு முன்பாகவே கொண்டு வருவது ஆனந்தக் களிப்பென்று சொல்லப்படும். 
விளக்கம் : இறையருளைப் பெற்றவர்கள், பெற்ற மகிழ்ச்சியின் மிகுதியினால் பாடும் பாட்டுக்கு இப்பெயர் அமைந்ததாகக் கருதலாம். மாணிக்கவாசகர் ‘ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்’ (திருவாசகம், திருவம்மானை 3) என்று பாடிய ஆனந்தம்’ என்னும் வடசொல் இப்பெயர்க்கு முன்னோடியாய் இருக்கலாம். அதனுடன் அதே பொருள்படும் ‘களிப்பு’ என்னும் தமிழ்ச்சொல்லும் இணைந்து ‘ஆனந்தக் களிப்பு’ என்ற தொடர் உருவாகியிருக்கலாம். திருவம்மானைக்கு ஏற்பட்டிருந்த ஆனந்தக் களிப்பு என்ற பெயரைத் தம் சிந்துப் பாடலுக்கும் கடுவெளிச் சித்தர் முதலியோர் பயன்படுத்தியிருக்கலாம். கடுவெளிச் சித்தரின் ‘பாபம் செய்யாதிரு மனமே’, தாயுமானவரின் ‘சங்கர சங்கர சம்பு’ முதலியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு பின் வந்தோரால் ஆனந்தக் களிப்புகள் எழுதப்பட்டு வந்தன. 
கும்மிப்பாடல் மும்மை நடையில் வருவது போல ஆனந்தக் களிப்பும் மும்மை நடையில் வரும்; கும்மியில் அசை நீட்டம் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் வரும்; ஆனால் அந்த அசை நீட்டம் ஆனந்தக் களிப்பில் தனிச்சொல் பெறுகின்ற அரையடியின் முன்பாக வரும்; இது கும்மிக்கும் ஆனந்தக் களிப்பிற்கும் உள்ள வேறுபாடு. 
காட்டு : கும்மி
மானைப்ப ழித்தவிழியுடை யாள் - ஒரு
மாமயில் போலும் நடையுடை யாள் . .
தேனைப்ப ழித்தமொ ழியுடை யாள் - பெண்ணின்
தெய்வமெ னத்தகும் சீருடை யாள் . .
(ஆசிய சோதி. தொடை. மெற்.ப. 280)
இக்கும்மியின் அடி இறுதிகளில் ‘யாள்’, ‘யாள்’ அசை நீட்டம் வந்துள்ளது. ‘ஒரு’, ‘பெண்ணின்’ என்ற தனிச்சொற்களுக்கு முன் அசை நீட்டம் இல்லை. 
காட்டு : ஆனந்தக் களிப்பு
ஆதிசி வன்பெற்று விட்டான் . - . என்னை
ஆரிய மைந்த கத்தியன் என்றோர்
வேதியன் கண்டும கிழ்ந்தே . - . நிறை
மேவும்இ லக்கணம் செய்துகொ டுத்தான்.
(பா.கவி. ப.166)
இந்த ஆனந்தக் களிப்பில் அரையடிகளின் இறுதியில் வரும் ‘என்னை’ ‘நிறை’ என்ற தனிச் சொற்களுக்கு முன்பு அசை நீட்டம் வந்துள்ளதைப் பாடியுணரலாம். 
ஆனந்தக் களிப்புகள் அமைப்பில் நொண்டிச்சிந்துகளை பெரிதும் ஒத்துள்ளன; நடையால் மட்டுமே வேறுபடுகின்றன. நொண்டிச் சிந்துகள் நான்மை நடையின. ஆனால் ஆனந்த களிப்புகள் மும்மை நடையின. 
44.
அடி, அரை யடிதொறும் இறுதியில் அமையும்
இயைபுத் தொடையும், எடுப்பும், முடிப்பும்
ஆனந்தக் களிப்பில் அமைதல் மரபே.
கருத்து : ஆனந்தக் களிப்பில் ஒவ்வோர் அரையடி இறுதியிலும், அடி இறுதியிலும் இயைபுத் தொடை அமைந்து வருதலும் எடுப்பு முடிப்புகள் அமைந்து வருதலும் மரபாகும். 
காட்டு :
நந்தவ னத்திலோர் ஆண்டி . - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி . க்
கொண்டுவந் தானொரு தோண்டி . - . அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
(சித். பா.ப.225)
இதன் முதலடியில் ‘ஆண்டி’, ‘வேண்டி’ என்ற இயைபுகள் அரையடி இறுதி, அடி இறுதிகளில் வந்தன. இரண்டாம் அடியில் அதே இடங்களில் ‘தோண்டி’, ‘தாண்டி’ என்ற இயைபுகள் வந்தன. 
காட்டு :
எடுப்பு
பாபம்செய் யாதிருமனமே - நாளைக்
கோபம்செய் தேமன் கொண்டோடிப் போவான் (பாபம்)
முடிப்பு
சாபம்கொ டுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலேத டுத்திட லாமோ
கோபம்தொ டுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ (பாபம்)
(சித். பா.ப.223)
இந்த ஆனந்தக் களிப்பு அடி அரையடிதோறும் ‘லாமோ’ என்ற இயைபுகளுடனும், எடுப்பு முடிப்புகளுடனும் வந்துள்ளதைக் காணலாம். 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.