LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமைகள் !!

பணியில் இருக்கும் போது நடத்துனர் (MVR Sec 78) ......


(அ) புகை பிடிக்கக் கூடாது


(ஆ) பயணிகளிடம் உபசரிப்புடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும்


(இ) தூய சீறுடை அணிந்திருக்க வேண்டும்


(ஈ) வாகனத்தை சுத்தமாகவும், சுகாதாரமாககும் வைத்திருக்க வேண்டும்


(உ) அடுத்த வாகனத்தில் ஏறும் பயணிகளிடம் இடையூறு செய்யக் கூடாது. அதாவது எந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்வது பயணிகளின் உரிமை. அதில் தலையிடக் கூடாது.


பயணிகளிடம் நடத்துனரின் கடமை (MVR Sec 79).........


(அ) அனுமதிக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது


(ஆ) பொருட்களை ஏற்றுவதற்கோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ இடத்தை மிச்சப்படுத்த, பயணச்சீட்டுக்கு சரியான தொகையைத் தர முன் வரும் எந்த ஒரு பயணியையும் புறக்கணிக்கக் கூடாது


(இ) பயணிகள் போக பொருட்களை ஏற்றும் போது, அப்பொருட்களால் பயணிகளுக்கு நெருக்கடியோ இடையூறோ அல்லது அபாயமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


(ஈ) எந்த காரணத்திற்காகவும் பயணிகள் வாங்கிய பயணச்சீட்டின் படி பயணம் முடியும் முன்னர் பயணிகளை இறக்கி விடக் கூடாது


(உ) உரிய காரணமில்லாமல் பயண நேரத்தை தாமதிக்கக் கூடாது


(ஊ) எதிர் பாராமல் வாகனத்தில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது வேறு சில தவிர்க முடியத காரணத்தினால் பயணத்தில் இடையூறு ஏற்பட்டால், நடத்துனர் “அதே வகையான” வேறு ஒரு வாகனத்தில் பயணிகள் பயணத்தை தொடர ஆவன ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்க்குள் இதை ஏற்படுத்தி தராவிட்டால், பயணிகள் பயணக் கட்டணத்தை நிர்பந்திக்கும் பட்சத்தில் மீதிப் பயணத்தை முடிக்கத் தேவையான பணத்தை செலுத்திவிட வேண்டும்


(எ) பயணிகள் ஏறும், இறங்கும் வழியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொருட்களை வைக்க அனுமதிக்கக் கூடாது


(ஏ) பயணிகளின் சரக்குகள், பொருட்கள் வேறு நபர் மாற்றி எடுத்துச் சென்று விடாமல் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்


(ஐ) பணி நேரத்தில் மது அருந்தி இருக்கக் கூடாது


(ஒ) வாகனத்தின் இயக்க கால அட்டவனை மற்றும் கட்டண விபரம் வாகனத்தில் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளதையும், முதலுதவிப் பெட்டியில் குறிப்பிடப்பட்ட அனைத்துப் பொருட்களும் நல்ல நிலைமையில் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.


(ஓ) நடத்துனரின் மீது புகார் அளிக்க எந்த ஒரு பயணியும் அவருடைய விபரத்தைக் கேட்கும் போது, அவருடைய பெயர், முகவரி மற்றும் அவருக்கு நடத்துனர் உரிமம் வழங்கிய அதிகாரியின் விபரத்தை மறுக்காமல் கொடுக்க வேண்டும்


பயணச் சீட்டு வழங்குதல் (MVR Sec 80)..................


நடத்துனர்,.......


(அ) மூன்று வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயணிகளிடமும், சொந்த பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கு உரிய சீட்டு வழங்க வேண்டும்


பேருந்து பலகையை மாற்றுவதும், சரியான வெளிச்சம் அதன் மீது விழுவதை உறுதி செய்வதும் நடத்துனரின் கடமை. – (MVR Sec 81) (மோ.வா.ச பகுதி 81)


ஒரு நடத்துனரோ, அல்லது நிர்வாகம் பயணக் கட்டணத்தை வாங்குவதற்கு அங்கீகரித்த நபரோ, ஒரு பயணி கட்டணம் செலுத்த தயாராக இருக்கும் போது அதை வாங்க மறுக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயனிகளோ பொருட்களோ ஏற்றப்பட்ட உடன் சீட்டு வழங்குவதை நிறுத்திவிடலாம் – (MVR Sec 82.1) (மோ.வா.ச பகுதி 82.1)


ஒரு நடத்துனரோ, அல்லது நிர்வாகம் பயணக் கட்டணத்தை வாங்குவதற்கு அங்கீகரித்த நபரோ, ஒரு பயணியிடம் உரிய கட்டணத்திற்கு மேல் பணம் வசூலிக்கக் கூடாது – (MVR Sec 82.2) (மோ.வா.ச பகுதி 82.2)


ஒவ்வொரு நடத்துனரும் ஒவ்வொரு பயண இறுதியின் முடிவிலும் உடனடியாக பயணிகள் ஏதேனும் பொருட்களைத் தவற விட்டுச் சென்றனரா என வாகனத்தை நன்றாக சோதித்துப் பார்க்க வேண்டும். அப்படி ஏதேனும் பொருள் இருந்தால் அதை உடனடியாக அந்த பயணியிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது 24 மணி நேரத்திற்குள் அதை பணிமனை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 


அழுகக் கூடிய பொருளாக இருந்தால் அதை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், மற்றவற்றை ஒரு மாதத்திற்குள்ளாகவும் உரிய ஆதாரத்தைக் காட்டி பனிமனை கண்காணிப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். 


30 நாட்களுக்குள் பொருட்கள் மீது உரிமை கேட்டு எந்த தகவலும் வரவில்லையெனில் தகவல் அலுவலர் மூலம் தகவல் அறிவிப்பு வெளியிட்டு பொது மக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும். தவறவிடப்பட்ட பொருளின் மதிப்பு 25 ரூபாய்க்கு குறைவாக இருந்து 30 நாட்களுக்குள் உரிமை கேட்டு உரியவர் வரவில்லையெனில் எந்த முன்னறிவிப்புமின்றி ஏலம் விடப்படும். 


ஏலம் குறித்த விபரங்கள் அலுவலக தகவல் பலகையில் வெளியிடப்படும். – (MVR Sec 293.1)

by Swathi   on 22 May 2014  10 Comments
Tags: Motor Vehicle Act   Conductor Rules and Regulations   மோட்டார் வாகன சட்டம்   நடத்துனரின் கடமைகள்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
05-Jun-2020 05:12:53 Jesus Selva Kenjock said : Report Abuse
Migavum prayojanamaaga irunthathu, enakku motar vehicle act 1988 mulumaiyaaga thamilil anuppa mudiyumaa, atleast thayavu Saithu Sec.145-178 varai ulla section kal thamilil anuppaudiyumaa?
 
18-Sep-2019 10:58:05 வினிஷா ஜெயசெல்வி said : Report Abuse
அளவுக்கு மீறி பயணிகள் பேருந்தில் ஏறும்பொழுது நடத்துனரால் பயணசீட்டு கொடுக்க முடிவதில்லை . எனவே நடத்துனர் ரூபாயையை மட்டும் வாங்கி கொண்டு பயணசீட்டு கொடுப்பதில்லை . பேருந்து கணக்காக விடப்படுவது அல்லது தாமதமாக வருவது போன்ற நிகழ்வுகளால் பேருந்தில் நெரிசல் ஏற்படுகிறது . இதை தவிர்க்க என்ன செய்வது .... இந்த பகுதி எனக்கு மிகவும் பயனுள்ளதக இருந்தது . நன்றி.
 
10-Jul-2019 10:34:13 கண்ணன் said : Report Abuse
18வயது முடிந்தும் நடத்துனர் உரிமம் தருமருக்கும் RTO
 
01-May-2019 06:20:32 Mahatheer mohamed said : Report Abuse
I am school students i am everyday going to school at any once problem in involved in police at no crime and no refused in people at police is case file and for ATTACK in me
 
09-Jul-2018 08:41:59 Karthick J said : Report Abuse
என்னக்கு இன்னும் சில தகவல் வேண்டும் நடத்துனர் பேருந்து நின்று செல்லக்கூடிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று பொய் சொல்லும் போதும் எப்படி நடவடிக்கை எடுப்பது. தமிழ் நாடு போக்குவரத்துக்கு கழகத்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அவர்களின் கடமைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் .உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி கார்த்திக் ஜெ
 
09-Dec-2017 04:42:33 Karthik said : Report Abuse
I really happy this kind of book very very useful to me so I 'll reading full sections quickly so that after tell you how ?? Thank-you....
 
09-Dec-2017 04:42:23 Karthik said : Report Abuse
I really happy this kind of book very very useful to me so I 'll reading full sections quickly so that after tell you how ?? Thank-you....
 
09-Dec-2017 04:42:11 Karthik said : Report Abuse
I really happy this kind of book very very useful to me so I 'll reading full sections quickly so that after tell you how ?? Thank-you....
 
09-Dec-2017 04:41:53 Karthik said : Report Abuse
I really happy this kind of book very very useful to me so I 'll reading full sections quickly so that after tell you how ?? Thank-you....
 
01-Apr-2016 07:18:00 vinothkumar said : Report Abuse
ஈனக்கு மிக ஔபயொகமக இருந்த்த thu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.