LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமலுக்கு வந்தது. 


ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவி ல்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. 


சாதாரணமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெறுவதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். 


பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. 


இனி நுகர்வோர் நீதிமன்றங்கள் பற்றி இங்கு காண்போமா :


நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பும், செயல்பாடும்: 


நுகர்வோர் நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் ”மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம்", தேசிய அளவில் ”தேசிய ஆணையம்” என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது. 


மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:


20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது.


இதனால் வழக்கு தள்ளுபடியாகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவறே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதி மன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-


1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-


5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-


10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-


வழக்கு தொடர தேவையான தகுதிகள்:


1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக இருக்கவேண்டும். 


2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறை தீர்மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.


3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.


4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும். 


யார் மீது வழக்கு தொடர முடியும்?


1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.


உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.


2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.


உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனிகள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.


எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. 


உதாரணத்திற்கு சப்-ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். 


இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது. ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப் பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் வில்லங்க சான்றுக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார்.


எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது.


அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறை பாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல” என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சே பனையை நிராகரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.


இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.


வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:


உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அளவு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே ”குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யாவிட்டால் நுகர்வோர் வழக்கு தொட ரப்படும்” என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள். 


அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 


விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.


தரம் சம்பந்த பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக்கிங் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 


எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்து விட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.


இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும்.


முன்பு குறிப்பிட்ட படியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்.


எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.


தேவையான அனைத்து ஆவணங்களையும் திரட்டிய பிறகு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்....

by Swathi   on 03 Jun 2014  40 Comments
Tags: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்   நுகர்வோர் நீதிமன்றம்   Consumer Protection Act   Consumer Court           
 தொடர்புடையவை-Related Articles
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள்
கருத்துகள்
07-Apr-2020 06:30:43 JPRaj said : Report Abuse
வணக்கம் ஐயா எங்கள் ஊரில் நாங்கள் ஒரு சமுகத்தை சேர்ந்த தனி குடும்பம் ஐயா எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் இருப்பவர் வேரொரு சமுகத்தை சேர்ந்தவர் அவரின் உறவினர் அதிகமாக எங்கள் ஊரில் வசிக்கின்றனர் அதனாலவோ என்னவோ எங்கள் வீட்டின் வாசல் எதிரிலேயே தினமும் குப்பைகளைக் கொட்டுகின்றார் நான் அவரிடம் வயதானவர்கள் குழந்தைகள் இருக்கும் வீட்டின் எதிரே இப்படி செய்கின்றீர்களே என்று கேட்பதற்கு நான் அப்படி தான் செய்வேன் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்ள என்கின்றனர் இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா.
 
20-Mar-2020 04:31:57 ஜான் பிரிட்டோ said : Report Abuse
ஐயா வணக்கம் நன் இரண்டு மாதம் முன்பு ஹார்ட்வர் கடையில் ரூபாய் 2000 மதிப்புள்ள சில பொருட்கள் வாங்கினேன் முறையான பில் தரவில்லை துண்டு சீட்டு மட்டும் கொடுத்துள்ளார் அதிக விலையயும் போடப்பட்டுள்ளது போய் கேட்டல் சரியான பதில் தரவில்லை அதனால் நன் மண உளைச்சலாக்கு அழகிவிட்டேன் நன் என்ன செய்வது என்று தயவு செய்வது ஆலோசனை கூறவும் நன்றி வணக்கம்
 
05-Mar-2020 20:05:46 உமா said : Report Abuse
பூர்விகாவில் நான் ஒரு மொபைல் வாங்கினேன் அது வாங்கிய மருநாளே டச் ஒர்க்காக வில்லை கடைக்கு சென்று கேட்டால் சரியான பதில் இல்லை இதர்க்கு நீதி மன்றத்தை அனுகலாமா
 
13-Nov-2019 04:39:37 T .SUBRAMANIAN said : Report Abuse
சார் நான் கடந்த 17 .10 .19 தேதி அன்று சேலம் இளம்பிள்ளை என்ற ஊரில் TMB பேங்க் ATM இல் ரூபாய் RS 10000 எடுத்த்த பொது பணம் வரவில்லை ஆனால் எனது ஆந்திர பேங்க் திருப்பூர் A /சி இல் டெபிட் ஆகி விட்டது.நான் அடுத்த நாள் திருப்பூர் எனது ஆந்திர பேங்க் மேனேஜர் இடம் காம்ப்ளின்ட் லெட்டர் கொடுத்தால் E MAIL அனுப்பீ ஒரு வாரத்தில் அனுப்பீவிடுவார்கள் என்று கூறீனார் ஆனால் ஒரு மாதம் ஆகியும் எனது பணம் ரிட்டர்ன் ஆகவில்லை இப்போது போய் கேட்டால் நான் என்ன செய்யமுடியும் மெயில் எனுப்பீ டேன் நீங்க TMB பேங்க் ல RETURN வந்தால் உங்க A /C கு பணம் வரும் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று கூறீ விட்டார் . எனவே எனக்கு பணம் கிடைக்க கோர்ட் மூலம் ஆலோசனை வழங்கவும் .
 
12-Apr-2019 04:26:50 ஊர்பொதுமக்கள் said : Report Abuse
எங்கள் ஊரில் கிளார்க் என்ற ஒரு போஸ்ட் உள்ளது அதில் ஒரு நபரும் உள்ளார் அவர் ஒருமுறை கூட எங்கள் ஊருக்கு வருவதே இல்லை . எந்த ஒரு நலத்திட்டங்களும் எங்கள் ஊரினை வந்து சேரவில்லை . கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார் . எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வசதி இல்லை பால்வாடி வசதியும் இல்லை நூலக வசதியும் இல்லை தெருக்கள் தோறும் சாக்கடை கழிவுகள் நிறைந்து உள்ளது அதனை அகற்றாமல் பலருக்கும் அதனால் காய்ச்சல் வருகிறது .இதற்கு என்ன வழி.யாரை அணுகுவது .
 
29-Mar-2019 02:47:48 Arunachalam said : Report Abuse
Sir, Nan AC repair seivatharkaha matrum shifting pannuvatharku koorinen antha kadai orimayalar velai seiyum pothu gas pipe udaithu vettar, apadiye fitting pannivittu payment um petrukondar.Ac on seithu parkamal OK sollivetar,nangal AC compressor gas puram leaks agi cooling agavillai,marupadiyum report seithathinal marumadiyum pipe kalati parthu vittu pipe cut agiruku itharku innum 2000 rs agum entrum kuduthalthan cooling varum engirar kadail Ulla mechanic ithu ungal thavaruthane neengal than sari seithu tharavendum enren atharku AC mechanic athu engal porupalla entru koorugirar itharku Jenna வலி
 
22-Mar-2019 16:22:05 கலைச்செல்வன் said : Report Abuse
ஐயா, வணக்கம் நான் ஒரு ஆம்பிலிபையர் வாங்கினேன் ஆனால் அது நான் கேட்டும் அனைத்தும் செயல்படும் என்றார் அதை நம்பி நான் பெற்றுக்கொண்டேன் பின்னர் அது அனைத்து விதமான ஒளிக்கும் சரிவராது என்று என்நண்பர்கள் கூறினர் பின்னர் நான் திரும்பி கொடுத்துவிட்டேன் பின்னர் பணத்தை திரும்ப தரமுடியாது அதற்கு மாற்று பொருள் பெற்றுக்கொள்ளலாம் என்றனர் அதற்கு சரி என்றால் அந்த பொருளுடன் விலையை அதிகமாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுகின்றனர் ஆனால் அதே பொருள் அவர் சொல்லும் விலையைவிட மலிவுதான் இதற்கு எதாவது வழி உண்டா
 
18-Dec-2018 04:31:23 Rajesh said : Report Abuse
ஐயா நான் முழு பணம் செலுத்தி ஒரு டியோ பைக் வாங்கி 6 மாதம் ஆகிறது. ஆனால் வண்டியின் RC book. Xerox, original எதும் கொடுக்கவில்லை. இதனால் அபராதம் ரூபாய்.3000 செலவு செய்து இருக்கிறேன்.
 
20-Sep-2018 20:32:03 Aravind said : Report Abuse
அய்யா சென்னை to திருச்சி செல்லும் வழியில். உள்ள பேருந்து ஓட்டுநர் ஓய்வுக்காக நீருத்ம் இடத்தில் பொருட்களுக்கு ஆதில் அச்சிடப்பட்ட உள்ள வீலையை விட அதிகமாக பெற்றுகொண்டர்கள்.இதெற்கு ஏதாவது செய்ய முடியுமா.
 
25-Jul-2018 04:46:03 arjun said : Report Abuse
ஐயா நான் வீடு அட்வான்ஸ் காக வீடு ஹவுஸ் ஓனர் கிட்ட 5000 ருபாய் கொடுத்தேன் ஆனால் நாங்கள் வீட்டை காலி செய்துவிட்டோம் ஆனால் அந்த அட்வான்ஸை எங்களுக்கு திருப்பித்தரவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும்
 
04-Jul-2018 18:05:10 கவி பாலா said : Report Abuse
ஐயா , நுகர்வோர் நீதிமன்றத்தில் வக்கீல் வேண்டுமா இல்லை தாமாக வாதாடலாமா. எலெக்ட்ரானிக் போன்ற பொருள்களுக்கு வழக்கு தொடரலாமா ?
 
27-Feb-2018 15:36:48 ரமேஷ் குமார் said : Report Abuse
ஐயா, நான் இரண்டு நாட்கள் முன்பு இரு சக்கர வாகனம் வாங்கினேன். அதற்கு தரமில்லாத தலைக்கவசத்தைக் கொடுத்துவிட்டார்கள்.கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. நான் வழக்கு தொடர இயலுமா?
 
16-Nov-2017 19:41:04 சத்தியராஜ் வீ said : Report Abuse
அய்யா நான் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடங்களாக பணிபுரிகிறேன் எனது ஊதியத்தில் இருந்து செலுத்தவேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை நான் பணிபுரியும் நிறுவனத்தார் செலுத்துவதற்கான எந்த ஒரு விவரமும் எங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. இது பற்றி அவரிடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை எனக்கு மட்டும் அல்லாமல் என்னுடன் பணிபுரியும் மற்ற பணியாளர்களுக்கும் இதே நிலைதான்.உங்களால் பல தொழிலாளர்கள் பயனடைவார்கள் .எனவே எனக்கு ஒரு நல்ல வழிழை கூறுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் எனது அலைபேசி எண்: 9094694392 ,8675238923
 
13-Nov-2017 06:05:57 மது balan said : Report Abuse
ஐயா,நாங்கள் 22 வருடமாக இருந்த வீட்டை இப்போது எனது தாத்தாவின் அண்ணன் இந்த இடம் என்க்கு சொந்தம் சட்ட மன்றத்தில் எனக்கு தீர்ப்பாகிவிட்டது எனவே நீங்கள் காளி செய்ய வேண்டும் என்று சொல்லி ஆவனங்கள் காட்டுகிரார் நாங்கள் 2000000 தகுந்த வீடு மற்றும் இருப்பிட வசதி செய்துள்ளோம் இப்போது நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை எதும் வழி உள்ளதா.....
 
12-Oct-2017 05:25:04 Jegatha said : Report Abuse
ஐயா நான் கடந்த ஏப்ரல் மாதம் 21 தேதி ஒரு நிலத்தினை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்தேன் அன்று மதியம் இனிமேல் பத்திர பதிவு தடை என்று அந்த நாளையும் குறிப்பிட்டு உள்ளார்கள் எனது மனை பழைய மனை புதியதாக போடப்பட்ட து அல்ல சார்பதிவாளரிடம் விசாரித்த போது அவர் எங்களது பத்திரம் செல்லும் என்று சொல்லிவிட்டார் ஆனால் அதற்கு பின் வந்தவர் தவறு என்கிறார்
 
14-Sep-2017 02:03:22 Maharajan ஸ் said : Report Abuse
Dear சார் நான் ஒரு டைல்ஸ் கடையில் டைல்ஸ் எடுப்பதற்கு full payment செலுத்தி விட்டேன். Payment செலுத்திய மறுநாள் என்னால் பொருள் தேவை இல்லை என்ற நிலையில் granite தான் வேண்டும் என்ற சூழலில் payment return செய்ய வேண்டும் என்று சொல்லி கேட்டு கொண்டேன்.2 மாதம் கடந்துவிட்டது. ஏமாற்றி கொண்டேயிருக்கிறார்கள்.
 
02-Sep-2017 11:46:22 ஜானகிராமன் said : Report Abuse
ஐயா, நான் equitas small finance bankல் tractor loan பெற்றிருந்தேன், முதல் மாதம் மட்டுமே தவணை கட்ட முடிந்தது, அடுத்த மூன்று மாதமமாக ,கடுமையான வறட்சி காரணமாக தவணை கட்ட முடியவில்லை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடனை கட்டசொல்லி போட்டபோது, கால அவகாசம் கேட்டேன், அவர்கள் பேக மோசமாக பேசி, தகாத வார்த்தைகளால் அசிங்கமாக phone பேசினார், இதற்கான voice recording என்னிடம் உள்ளது, அவர்கள் மீது வழக்கு தொடர முடியுமா?? நஷ்டயீடு பேரமுடியுமா????
 
19-Aug-2017 15:22:09 விமல் குமார் said : Report Abuse
வணக்கம் சாரதிதாசன் தங்கள் தந்தை விற்பனை செய்த தேதி மற்றும் கிரயம் பத்திரம் அதில் அடஙகிய வாசகங்கள் என் ஈமெயில் vimallaws @gmail.com அனுப்புங்கள் மேலும் தகவலுக்கு 9003012536
 
12-Aug-2017 11:03:04 சாரதிதாசன் said : Thank you
எனது தந்தை (௧௯௮௨) அருகில் உள்ள ஒருவர அவர் சொந்த காரணங்களுக்காக அவர்இடத்தை ஈடுக்கட்டி ரூபாய் (௭௦௦) பெற்று கொண்டார் .மேலும் அவ்விடத்தை எங்களுக்கே கிரயம் செய்து கொடுப்பதாக கூறி வெள்ளை தாளில் ரெவின்யூ ஸ்டாம்பில் கையெப்பம் இட்டுள்ளார்கல். அதில் இருவர் சாட்சி கையொப்பம் இட்டுள்ளார்கல். அவர் தேவைகள் முடிந்த நாளில் இருந்து இன்றுவரை கிரயம் செய்து தரவில்லை. பல காலம் ஏமாற்றி அவர் இறந்தும் போய்விட்டார். இப்போது அவர் மருமகன் தர மறுக்கிறார்கல் நன் என்ன செய்வது என்றும் தெரியவில்லை எனக்கு ஓரி வழி கூறுங்கள் நன் எங்கே செல்லவேண்டும் ....
 
04-Mar-2017 23:56:36 அப்பாஸ் said : Report Abuse
சார் நான் நிலா பர்ணிச்சர் கம்பனியில் ஏஜேண்ட்டா இருந்தேன் என் பார்டியல்லாம் எடுத்து என்னை ஏமாற்றிவிட்டாா்கள் அவர்கள் மிது வழக்கு பதிவு பன்ன முடியுமா
 
02-Feb-2017 00:15:48 தமிழரசன் said : Report Abuse
நான் spicejet விமானத்தில் பயணம் செய்ய முன் பதிவு செய்தேன் ஆனால் விமானம் தாமதமானதால் பயணத்தை ரத்து செய்து முன்பதிவையும் ரத்து செய்தேன். ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாக பயணச்சீட்டுகாண பணம் தரவில்லை. விமான அதிகாரிகளிடம் கேட்டால் உங்கள் வங்கி கணக்கில் அனுப்பிவிட்டோம் என்று கூறுகிறார்கள் ஆனால் பணம் வங்கி கணக்கில் வரவில்லை
 
27-Jan-2017 03:57:33 மு.குமரேசன் said : Report Abuse
சார் நான் ஆரோக்கியா பால் நிறுவனத்திடம் ஒரு கடையை (AROKYA DISTRIBUTOR STORE )எடுத்து நடத்தி வந்தேன். ஆனால் ஆரோக்கிய பால் நிறுவனம் என்னிடம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எனக்கு பால் வழங்குவதினை நிறுத்தி விட்டனர். இதற்கு நான் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா? ஏனெனில் இதனால் 3.5 லட்சம் வரை எனக்கு இழப்பு நேர்ந்து விட்டது.
 
22-Jan-2017 02:56:28 selva said : Report Abuse
Sir, எனது அப்பா சிறுவனாக இருந்த பொழுது அவருடைய சிற்றப்பா 5ஏக்கர் நிலத்தை ரூபாய் 5000 கடன் கொடுப்பதுபோல் கொடுத்து எழுதி வாங்கிவிட்டார் எனது தாத்தாவிடம், அப்பொழுது எனது அப்பாவும், அவர்கூட பிறந்தவர்களும் மைனர், கோர்ட்டில் கேஷ் நடந்து வந்த நிலையில் கடந்த 4 மாதமாக விட்டுவிட்டோம். காரணம் அவர் ஒரு வக்கில். எந்த வக்கிலும் அவருக்கு தான் support செய்கிறார்கள். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்க தொடர வாய்ப்பு உள்ளதா.
 
18-Jan-2017 09:35:26 Sudhakar said : Report Abuse
எங்கள் உடைய சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்காக நாங்கள் எங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதரர் அட்டை ஐ மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்..?
 
08-Jan-2017 10:39:27 Santhosh said : Report Abuse
I read this message i got some idea. what i phased perblom ,in bustand some shoop there saling water bottles more than Mrp .but they can't give bill also what to do .this kind perblom how to solve.
 
26-Oct-2016 05:41:47 சரஸ்வதி said : Report Abuse
Sir, I do not know English. My order number. 2143929063. I itiyappak order booking and caused the vessel. But I have come to the vegetable chop wood and plastic to keep the birds in case kattar cho. Check out what the hell. I mean, I have produced to order. If you do not have to return the money. No one has the right answer. Formed by the phone in English speaking. I want money. If it is not illegal to take action on their own. - இது நான் பைடம் கம்பெனிக்கு ஆங்கில வடிவாக்கம் செய்து அனுப்பியது. எனக்கு மாற்றுப் பொருள் வந்து உள்ளது. என்னிடம் எல்லா ஆதாரமும் உள்ளது. என்ன செய்யலாம் சொல்லங்கள். கைபேசி 9003614238
 
23-Oct-2016 22:23:09 குமர sakthi said : Report Abuse
நா ஒன்லைன் மார்கட்டிங் ஜோஇன் பண்ண ,அது கம்ப்யூட்டர் வுயர்ஸ் சம்பந்தமானது அதாவது நாம் 10880 செலுத்தி ஜோஇன் பண்ணனும் ,நானும் செலுத்தினேன் ,ஆனால் கொம்பியூட்டர் கோர்ஸ் பிடிஎ 10880 கு ஒர்த் இல்ல என்னமாரி நானும் நெறய பெற இதுல சேத்து வெட்ட எனக்கு பணம் குடுப்பாங்க அனா எது எமது வேல சோ நா யாரையும் ஏமாத்த விரும்பல எனக்கு என்னோட பணம் வேணும் நா என்ன பண்றது ,எங்க அப்பா பிஷ் மோங்கெர்.சோ எனக்கு 10880 ரொம்ப பெரிய தொகை
 
07-Oct-2016 05:22:29 சதிஷ் said : Report Abuse
வணக்கம் சார் என் பெயர் சதிஷ் எனக்கு ஆக்ட் 27(சி) டீடெயில்ஸ் தேவை பிளேஸ் சென்ட் மீ சார் நன்றி
 
18-Sep-2016 22:38:53 தனசேகரன் said : Report Abuse
1 தலைவர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்,எண். 212, இராமகிருஷ்ண மடம் சாலை, மைலாப்பூர், சென்னை - 600 004 044-24940687 044- 24618900 2 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் சென்னை (தெற்கு) , 212, இராமகிருஷ்ண மடம் சாலை, மைலாப்பூர், சென்னை - 4 044 - 24938697 3 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் சென்னை (வடக்கு), 212, இராமகிருஷ்ண மடம் சாலை, மைலாப்பூர், சென்னை - 4 044 - 24952458 4 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், சப் கலெக்டர் ஆபீஸ் வளாகம், ஜீ எஸ் டி சாலை, மேலமையூர் கிராமம், செங்கல்பட்டு நகரம், காஞ்சிபுரம் மாவட்டம் 044 - 27428832 5 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் எண்.1 டி.சி.வி.நாயுடு சாலைமுதல் குறுக்கு சாலை, திருவள்ளுர் - 602 001 04116 - 27664823 6 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் மாவட்ட நீதி மன்ற வளாகம் சத்துவாச்சேரி, வேலூர் - 632 009 0416 - 2254780 7 தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் 58/டி, அண்ணா சாலை, ஆதிதிராவிடர் நல அலுவலகம், கீழ்தளம், திருவண்ணாமலை - 606 601
 
18-Sep-2016 22:36:00 தனசேகரன் said : Report Abuse
தபாலில் மனு : சென்னையில், சென்னை மாவட்ட, (வடக்கு மற்றும் தெற்கு) நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய, தலைவர், சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், பிரேஷர் பிரிட்ஜ் சாலை, வ.உ.சி., நகர், பார்க் டவுன், சென்னை 3 என்ற முகவரிக்கு, தபாலில் மனு அனுப்பலாம். தொலைபேசி எண்கள்: மாநில நுகர்வோர் நீதிமன்றம் 044 2534 0050, சென்னை (வடக்கு) 044 2534 0083, சென்னை (தெற்கு) 044 2534 0085. நீதிமன்ற கட்டணத்தை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், டி.டி., எடுத்து, அனுப்ப வேண்டும்.
 
29-Aug-2016 06:35:47 கருணாகர ன் said : Report Abuse
அரசு ஊழியர் கூட்டுறவு கடன் சங்கத்தில எனது உறுப்பினர் சந்தா தொகை எட்டு வருடங்களாக திருப்பி தரதரவில்லை நான் நுகர்வோர் நீதிமன்றம் செல்லசெல்லலாமா நான்ஒஒய்வு பெற்று எட்டு வருடங்கள் ஆகிறது
 
20-Jun-2016 22:26:01 k.ilanchzhiyan said : Report Abuse
Oru manitha. அதாவது கோவ்மென்ட் வீளைபருகும் பொழுது அவன் advocte. படிப்பது சட்டம் தவறு அதுபோல இங்க கிராமம் துல ஸ்மார்க் வேலை சிறங்க இதுக்கு enna panalm
 
09-May-2016 20:06:45 nagendran said : Report Abuse
வாகன விற்பனை ஏஜென்ட் மூலம் ,எனது கார் விற்பனை செய்யப்பட்டது, அனால் அவர் எனக்கு பணம் கொடுக்காமல் அவரது கடனை அடைக்க எனது காரை பணயம் வைத்துவிட்டார், இன்றுவரை எனக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார், என்ன செய்வது, மன உலச்சலாக உள்ளது.
 
26-Apr-2016 23:57:52 monisha said : Report Abuse
how many problems in land sale
 
25-Apr-2016 12:00:08 வஹாப் said : Report Abuse
நான் snapdeal ஆன்லைன் முலம் ஒரு ஹீரோ பைக் புக் செய்தேன் அதை என்னக்கு 19-04-2016 தேதிக்கு தருவதாக சொன்னார்கள் ஆனால் இன்று வரைதரவில்லை சரியான பதில் அளிக்கவில்லை. என்னிடம் இருத்து முன்பணம் 1000/- ரூபாய் ஆன்லைன் வாங்கி கணக்கு முலம் பெற்றுகொண்டர். நான் snapdeal மீது வழக்கு பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்.
 
17-Mar-2016 10:32:31 செண்பகமூர்த்தி said : Report Abuse
சப் ரிஜிஸ்டர் மீது தொடரப்பட்ட வழக்கு எண் நாள் ஆணை விவரம் இருந்தால் தெரிவியுங்கள் நன்றி .
 
21-Feb-2016 05:49:18 Rithiya said : Report Abuse
இட்ஸ் வெரி உசெபிஉல் டு மீ ஆல் தி செக்டயொன்ஸ். இ learn திஸ் , பட் இ ஹவெ சமல் டவுட், If any மின்ட் upset means which section we have டு put சார்,. இ வான்ட் quick answer and section ,then i want the qualities for to writen the query.? Plz tel me sir.
 
26-Sep-2015 09:21:30 rajaram said : Report Abuse
நுகர்வோர் நிதிமன்றத்தில்நுகர்வோர்எந்தசட்டத்தில்வாதாடாலாமா
 
06-Aug-2015 02:03:50 ரத்னா குமார் said : Report Abuse
தமிழகம் மற்றும் சென்னை சுற்றுபுறங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் முகவரி தெரிவித்தால் நன்று.
 
03-Dec-2014 08:45:00 chiruthaikumar said : Report Abuse
குடும்ப வன்முறையில் இருந்து ஆண்களை பதுக்க சட்டம் இருந்தால் சொல்லுங்க நன் பதிக்க பட்டவன் than
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.