LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

வட்டிக்கு விடுதல்

வட்டிக்கு விடுதல்

வட்டிக்குக் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம்:

    உரிமம் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா, அப்படி வட்டிக்குக் கொடுத்தால் என்ன தண்டனை போன்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் உண்டு. வட்டிக்குப் பணம் கொடுத்து, வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957லிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் (வுயஅடையேனர ஆழநெல டுநனெநசள யுஉவ 1957) கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தியும் உள்ளது.

வட்டிக்கு விடும் தொழில் செய்பவர்கள்:

    அச்சட்டத்தின்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். இத்தொழிலைத் தனிநபராகவோ, கூட்டாகப் பங்குதாரர்களாகவோ நடத்தலாம். ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ பொருந்தாது. ஏனென்றால் வைப்புத்தொகை வாங்குவது மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்றவை வங்கி நடைமுறைக்குக் கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும்.

வட்டாட்சியரிடம் பெற வேண்டிய உரிமம்:

‘  நான் வைப்புத்தொகை எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன்’ என்றால் அதற்கு வட்டாட்சியரிடம் உரிமம் வாங்க வேண்டும். அடகுக்கடை வைத்திருப்பவர்கள் உரிமம் வாங்குவது போன்று, இதற்கும் ஆழநெல டுநனெநசள யுஉவ 1957-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் உரிமம் வாங்க வேண்டும். அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாகச் செய்வது சட்டப்படி குற்றம். எனவே முழுநேரத் தொழிலாக ஒரு இடத்தில் நிறுவனம் தொடங்கி முழு நேரத் தொழிலாக வட்டிக்கு விடுவதைச் செய்தால் உரிமம் எடுக்க வேண்டும்.

உதவி செய்வதற்குத் தேவையற்ற உரிமம்::

    பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் தனிநபரானவர் மற்ற உறவினர்களுக்கு உதவியின் பொருட்டு வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவார். அவர்களை முழுநேர வட்டிக்கு விடும் தொழிலாளராக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இதில் உரிமம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

வட்டிக்கு விடுதலின் தண்டனை:

    ஒருவேளை ‘ஒருவர் உரிமம் எடுக்காமல் வட்டிக்கு விடும் தொழிலைச் செய்தார்’ என்று புகார் வந்தால் அதற்குத் தண்டனையாக ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை. இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்குக் கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றிச் சொல்லவில்லை. ‘உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதுதான் குற்றம்’ என்கிறது. அதற்கு ரூ.1000 அபராதம் என்பதுதான் சட்ட நடவடிக்கை ஆகும்.

by Lakshmi G   on 08 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றகளில் வழக்கு தொடர தேவையான தகுதிகள்
முதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி? முதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி?
பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை !! பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை !!
லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம் லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம்
தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்)
ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ? ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?
அதிகரித்து வரும் மது கடைகள் !! சீரழிந்து வரும் இளைய சமுதாயம் !! மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன ? அதிகரித்து வரும் மது கடைகள் !! சீரழிந்து வரும் இளைய சமுதாயம் !! மதுக்கடைகளை மூட சட்டம் சொல்வது என்ன ?
மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமைகள் !! மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமைகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.