LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம்

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூல மாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.


நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.


பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் ஆகும்.


லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?


உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது . இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலை யில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்க்கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.


இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.


லீகல் நோட்டீஸ் 


BY REGISTERD POST WITH A/D, OR BY FAX OR E-MAIL


அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)

க.சிவராம கிருஷ்ணன்

14, 18 வது மெயின் ரோடு,

அண்ணா நகர்

சென்னை -600 040.


பெறுநர்:

LG Electronics Pvt Ltd,

AA11, 2nd avenue,

Fatima Tower,

Anna Nagar West,

Chennai - 600 040.


சட்ட பூர்வ அறிவிப்பு.


தங்கள் நிறுவன தயாரிப்பாகிய LG FAWM -9987 மாடல் வாஷிங் மெஷின் ஒன்றை M/s. A shok Traders , 2nd Main Road, Anna Nagar West, Chennai -40 என்ற் டீலரிடம் 5-6-2009 ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678 / 5-6-2009. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. 25-6-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 5660

2. 15 -7-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 9078

3. 10-8-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 10233

இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப்பட்ட மெஷின் உற்பத்தி குறை பாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.


எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என,தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப் படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசணையை சுமுகமாக தீர்க்க விரும்ப வில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.


இப்படிக்கு



( கையொப்பம்)

(க.சிவராம கிருஷ்ணன்)


நாள்: 25-8-2014

by Swathi   on 22 May 2014  30 Comments
Tags: Legal Notice   லீகல் நோட்டீஸ்                 
 தொடர்புடையவை-Related Articles
லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம் லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம்
கருத்துகள்
31-Jan-2021 10:07:06 Nagalakshmi said : Report Abuse
Hello sir Greetings We have a small land, my father passed away in 2013 My mom and my younger brother had built a house by taking a loan in my support. Once they built the house they assured me that they would give some amount, but now they are asking me to take the terrace part and refusing to give a settlement. How can I get my settlement amount without approaching it legally? Kindly share your suggestion. Thanks in advance.
 
16-Jun-2020 17:09:36 Lokeshvar said : Report Abuse
Yellow noticekku opposite vazhakku podamudiuma sir
 
20-Dec-2019 06:32:14 சித்ரா ரமேஷ் said : Report Abuse
வணக்கம் ஐயா எனக்கு 2 வருடங்களுக்கு முன் Bank Bazaar .com என்ற இணையத்தின் மூலம் personal loan தருவதாக அழைப்பு வந்தது.லோன் வேண்டுமென்றால் Elite Discount Card என்ற பெயருக்கு ரூ.15000 /- கட்ட வேண்டும் என்றார்கள் இந்த கார்டினை இன்சூரன்ஸ், மருந்து மற்றும் இதர கொள்முதல், மருத்துவ பரிசோதனை என 9 தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று சொன்னார்கள்.அதை நம்பி நானும் பணம் கட்டினேன்.கார்டு வந்தது.லோன் வரவில்லை.இன்று வரை அந்த கார்டு எந்த வகையிலும் உபயோக படுத்த முடியவில்லை.எனவே அவர்களிடம் பணத்தை திரும்ப பெற ஏதாவது வழி சொல்லுங்கள்.அவர்கள் மேல் எந்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள்.Under sec act Rules தெரிந்தால் அதை வைத்து அவர்கள் e .mailuku காம்ப்லின்ட் அனுப்ப எனக்கு உதவியாக இருக்கும் தயவு செய்து கூறுங்கள். நன்றி.
 
04-Oct-2019 10:50:02 கௌரி said : Report Abuse
சார், எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எங்களுக்கு குழந்தை இல்லை. எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அவரை நான் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். நான் என்ன செய்வது....
 
22-Jun-2019 10:34:26 AAA said : Report Abuse
எனக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தது .நான் ஒருவரை காதலித்தேன்.இப்பொழுது யாரும் வேண்டாம் என்று தனியாக வந்து விட்டேன்.எனக்கு திருமணம் ஆகி 15 நாட்களில் என் அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன். நான் விவாகத்திற்கு பதிவு செய்துள்ளேன் எனக்கு எப்பொழுது விவாகரத்து கிடைக்கும். எனக்கு சொல்லுங்கள்
 
24-May-2019 11:31:57 Kamaraj said : Report Abuse
நான் மருந்து விற்பனை தொழில் செய்துவந்தேன் கடன் வங்க வேண்டிய அவசியம் குறித்து கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் இதற்கு திவால் கோடுப்பது எப்படி சட்டம் செல்லுங்கள்
 
18-May-2019 09:18:27 சரவணன் said : Report Abuse
எனக்கு ஒரு வீடு உள்ளது அதற்க்கு வடக்கு சுவர் பொது சுவர் என்று எனது அப்பாவும் எதிர் தரப்பினரும் ௨௦௦௨வருடம் மத்தியஸ்த்தர்கள் முன்பு அக்ரிமென்ட் பிறப்பித்து உள்ளார்கள் .. இப்போது நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்து உள்ளோம் ஆனால் எதிர் தரப்பினர் சொந்த சுவர் என்று கூறுகிறார் . . பின்பு நாங்கள் அக்ரிமெண்ட் இருக்கு என்று கூறவும் அதற்கான தொகை தரவில்லை என்று வழக்கு தொடர்ந்து உள்ளார் இதற்க்கு ஏதேனும் ஈஸியான வழி இருக்கிறதா ..
 
14-May-2019 12:05:49 Jegan said : Report Abuse
ஜெகன் நான் ஒரு நிறுவனத்தில் சுமார் 24 வருடம் வேலை செய்கிறேன். என்னுடைய வயது 54. இப்போது கம்பெனி சரி வியாபாரம் ஆகிவில்லை என்று கூறி சம்பளத்தை நாள் கணக்கில் இழுத்து தருகிறார்கள். இது மாதிரி இழுத்து தந்தால் அவர்களே வேலை விட்டு சென்றுவிடுவார்கள் என்று ஒரு யுகம். நாம் அவர்களுக்கு ஏதாவது கொஞ்சும் பணம் தந்துவிட்டு அனுப்பிவிடலாம் என்று நினைக்கிறார்கள். இதில் நான் ஏதாவது செய்ய முடியுமா?
 
29-Mar-2019 05:43:09 சசிகுமார் said : Report Abuse
வணக்கம் சார், நான் ஒருத்தருக்கு 100000 பணம் கொடுத்தான் அவரிடம் 20 பாத்திரத்தில் கையொப்பம் மட்டுமே வாங்க இருக்கிறான் ஆனால் எதுவும் எலுதவில்லை இப்பொழுது அவர் காலம் தாழ்த்தி வருகிறீர் இப்பொழுது நான் என செய்யலாம் கோசம் ஆலோசனை கொடுக்க முடியுமா
 
13-Mar-2019 14:14:57 Gowri said : Report Abuse
எனது தந்தை மற்றும் தாய் இருவருமே தினக்கூலி வருமானம். தெரிந்த உறவினர் ஒருவரிடம் 20000 பணம் கடனாக வாங்கினர் அதற்கு அத்தாட்சி பிரோமிசரி நோட்டில் இருவரிடமும் கையெழுத்து வாங்கினார். 14000 கட்டிய நிலையில் மீதம் 6000 கட்ட சற்று தாமதம் ஆனதால் எங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்டுள்ளார் .அதிலும் 6000 ரூபாய் பணத்திற்கு 75000 கட்ட வேண்டும் என்று நோட்டிசில் குறிப்பிட்டுள்ளார். கீழ் கோர்ட்டில் 1 வருடத்திற்கு முன் இந்த வழக்கு தள்ளுபடி ஆனது. தற்போது எதிர் தாதர் மீண்டும் நோட்டீஸ் விட்டுள்ளார். ஐயா இதற்கு சரியான சட்ட பிரிவு இருந்தால் கூறுங்கள். நாங்கள் வறுமைக்கோட்டிற்குள் வாழும் சாதரண குடும்பம்.
 
17-Feb-2019 07:05:37 Raj said : Report Abuse
Yan wife வர ஒரு alu கோடா thapana ஒரு Thodarubu vachikataa நன் எப்போ Avala Divas பண்ண போறான் idea kodunga pls
 
04-Dec-2018 15:37:03 Dinesh Moorthi said : Report Abuse
ஒரு ஊர் பெயரில் கடை நடத்தினால் தடை செய்ய முடியுமா
 
22-Jun-2018 14:20:01 Saminathan.s said : Report Abuse
எனது தந்தையுடன் பிறந்தவர்கள் மூன்று பேர் எனது தந்தையுடன் சேர்த்து .பெண்கள் இருவர் தற்பொழுது இவர்களிருவம் தற்பொழுது உயிருடன் இல்லை. இதை சமயமாக பார்த்து ஆண்களிருவரும் எனது தந்தை யிடம் சொத்தில் பங்கு கேற்கின்றனர்.ஆனால் எனது தாத்தா பாட்டி இருவரையும் எனது அப்பா தான் பார்த்துக் கொண்டார் .அதற்கு ஆன செலவினங்களை எனது அப்பா மட்டுமே செலவு செய்தார் .அதற்குஏதாவது தொகை பெற முடியுமா.மற்றும் பொய்யாக காட்டை விற்று விட்டேன் கேவலப்படுத்துகின்றனர்.ஆனால் ஆதாரத்தை.கேட்டால் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.அவர்கள்மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா ஆலோசனை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
 
21-Jun-2018 08:39:27 கெளதம்.a said : Report Abuse
என் தயார் என் அக்காவின் திருமணத்திற்காக சுமார் இரண்டுளச்சம் நாற்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் விடு பெயரில் வாங்கி உள்ளனர் 2 % வட்டி வாங்கி இருந்தார்கள் அனால் 4 % வட்டி கட்டினார்கள் இரண்டு வருடம் கழித்து இந்த நபர் உங்களுக்கு 2 % வட்டிக்கு மட்ரி தருவதாக குறி மூன்று மாதம்தள்ளிப்போட மதுரிதரவில்லை பின்பு கேட்டபோது நீங்கள் வட்டி கொடுங்கள் பிறகு மாட்ரிகொள்வதாக குறி அந்த மூன்று மதத்திற்கு சேர்த்து வட்டி கேட்டார் சேர்த்து கொடுத்தோம் இதை போன்று நன்கு இந்து முறை நடந்தது அவர் எங்களை எம்டடப்போவது எங்களுக்கு தெரியாது அவர் எங்களுக்கு ரூபாய் பதுலச்சம் தருவதாக குறி எங்கள் வீட்டின்மீது பதுலச்சத்துக்கு அடமானம் செய்தார் ஆனால் அவர் அந்த பணத்தை எங்களிடம் கொடுக்கவில்லை பணமாகவும் செக்காகவும் டிடி யாகவும் கொடுக்கவில்லை அவர் எனக்கு வரவேண்டிய பணம் வந்த வுடன் தருகிறேன் என்று குறி காலம் கடத்தினர் தற்போது நங்கள் அவரை ஏமாத்திரியதாக குறி லீகில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இப்பொது நங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
 
15-Mar-2018 07:57:07 Mohan said : Report Abuse
Nanum Oru ponnum Love pannitdu iruntham but aviga Vera Community Naaga Vera community sir but aviga vitla 1st Enaku kalyanam panni Tharanu sonnaga but eppa vanthu kalyanam panni thara mattam aptinu solraga but Nanum antha ponnum kalyanam pannitam photo and friend munndatitha kallayanam pannam. but viga vitduku Ellathukum naaga kalayanam Pannathu theriyum but aviga antha ponna blackmail panraga atha antha ponnu eppa antha paiyana kalyanam pannikranu solra..naa antha ponna family mela complaint kuduka mutiyum..naa ethu police station la complaint kuduklama.. Court la case poda ethachu vali iruka.. please help me
 
12-Mar-2018 01:57:13 ealiya said : Report Abuse
சோழமண்டலம் பைனான்சில் வாகனம் வாய்ஞ்சுருந்தான் அண்ணல் தாவணி கட்டவில்லி என்று பர்றிமுதல் சையது விட்டார்கள் அண்ணல் மூன்று varudam kallithu நங்கள் உன் வீட்டிக்கு அம்மீனவை அழைத்துவந்து உன் வீட்டிலுள்ள பொருட்கெல்லி aduthu செல்வோம் என்று மிரட்டுறார்கள்
 
07-Jan-2018 15:46:38 J swaminathan said : Report Abuse
Ayya bangalore Madan that 35 varudangala order ventilation kudiinruthukondirukiram. Tharp other governmental be educated pasta veedaga Krupa thales iddethuveetu Kattan Songkran. Engage exam aveelvu Panama Illinois. Enhance search Vendome endru soolungal. Thanking you
 
01-Sep-2017 04:13:15 REVATHI said : Report Abuse
எனது பெயர் ரேவதி ,எங்கள் கம்பெனி மூலம் யூனிவேர்சல் என்டர்ப்ரிசேஸ் எனும் கம்பெனிக்கு ப்ராஜெக்ட் ஒர்க் செய்தோம் .அவர்கள் பெமென்ட் பன்னேறேன் நீங்க ஒரு மாதம் பொறுங்க அப்படீன்னு சொன்னாங்க.இப்போ உங்ககிட்ட என்ன புரூப் இருக்கு என்கிட்டே வேல செஞ்சதுக்குன்னு கேக்கிறாங்க.நாங்க முதல் ஆர்டர் மட்டும் பர்ச்சஸ் ஆர்டர் வாங்கினோம் .மற்றது வாங்காமல் செய்து விட்டோம் .ஆனால் பில் அத்தனைக்கும் அனுப்பியுள்ளோம்.அவர்களும் பில் திரும்ப அனுப்ப வில்லை .பணம் மோசடி கேஸ் போடலாமா.பெண்டிங் 8 லட்சம் r
 
21-Jul-2017 09:43:50 டி.திருமால் murugan said : Report Abuse
என் மாமியார் மீது 1,00000 ரொக்கம் வாங்கியதாக பொய் குற்றம் சுமத்தி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.இதற்கு தகுந்த சட்ட நடவடிக்கையை எனக்கு பகிரவும் இப்படிக்கு, டி.திருமால் முருகன். +91 9789802819
 
15-Jul-2017 08:55:30 மணியன் said : Report Abuse
எங்களது நிலம் பட்டா நிலம். எங்கள் நிலத்திற்கு கிழக்கே உள்ள நிலம் பஞ்சமி நிலத்தை சார்ந்தது. 3 .50 ஏக்கர் உள்ளது.கல்லுக்கால் ஊன்றி முள்வேலி போட்டு நாங்கள் எங்கள் நிலத்திற்கு செல்லவிடாமல் தடை செய்துள்ளனர் . அதேபோன்று தெற்கு திசையில் அரசிடமிருந்து நில ஒப்படை 1964 இல் பெற்று புஞ்சை நிலத்தை விவசாயம் செய்யாமல் 10 .7 .2017 இல் கல்லுக்கால் ஊன்றி முள்வேலி போட்டு நாங்கள் எங்கள் நிலத்திற்கு செல்லவிடாமல் தடை செய்துள்ளனர். ஒருவர் நிலம் பட்டா நிலம் மற்ற்றொரு நிலம் பஞ்சமி அரசு நிலம். நீதி மன்றத்தில் eviction order பெற வாய்ப்புண்டா. தடையை அப்புறப்படுத்த சட்டத்தில் வழிவகை உண்டா.
 
09-May-2017 04:53:47 PREM KUMAR said : Report Abuse
How to vacate truss pass person in land pl. need in tamil format notice
 
03-May-2017 01:49:34 sudha said : Report Abuse
எனது குடும்பத்திற்கும் பக்கத்து வீடு குடும்பத்திற்கும் இடப பிரச்னை அவர்கள் எங்கள் இடத்தில் 2 அடி தள்ளி வீடு கட்டி உள்ளனர் அவர்கள் கணவர் மிலிடரி பணிபுரிபவர் எங்கள் இடம் government கொடுத்த இடம் நங்கள் பலதடவை சொல்லியும் அவர்கள் வீடு கட்டுகின்றனர் இதை பார்த்த என் பெரியப்பா சித்தப்பா கைப்பிடி சுவர் தள்ளிவிட்டனர் இதற்க்கு அவர்கள் அப்பா ஓய்வு மிலிடரி காவல் துறை fir போட்டு சிறையில் வைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் நங்கள் அவர்களை தகாத முறையி பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார் இந்த சம்பவம் நடந்த பொது எனது அப்பா இல்லை ஆனால் அவரையும் fir போட்டு உள்ள வைத்துள்ளார் எங்கள் இடம் அரசாங்கம் எங்கள் தாத்தா பெயரில் உள்ளது நங்கள் என்ன செய்ய வேண்டும்
 
23-Apr-2017 13:36:17 vadivel said : Report Abuse
நான் கடந்த 2012 ல் ஒருவருக்கு விவசாய நிலம் மீது அடமானப் பதிவு மூலம் கடன் வழங்கினேன். அவர் இன்று வரை வட்டியும் கொடுக்கவில்லை, அசலையும் கொடுக்கவில்லை. 3 மாதம் முன்பு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினேன் அதை அவர் பெற்றுக் கொள்ளவில்லை திரும்பி என்னிடமே வந்து விட்டது. இப்போது நான் என்ன செய்வது?..........1.அந்த நிலம் என் மீது பதிவு செய்ய முடியுமா?.......அல்லது 2.மொத்த பணத்தை வாங்க நான் என்ன செய்ய வேண்டும்?
 
16-Mar-2017 10:58:42 Babu said : Report Abuse
என் பெயர் பாபு எனது நண்பர் ஒருவர் அவருடைய சொந்தக்காரர் வீட்டிற்கு அருகில் 10செண்ட் பரப்பளவில் இடம் வாங்கி வீடு கட்டி 28 வருடம் வாழ்ந்து வந்தார்.ஆனால் அவர் அந்த இடத்திற்கு நம்பிக்கையின் அடிப்படையில் எந்த விதமான பத்திரப்பதிவுகளையும் தனது பெயரில் எழுதி வைக்க தவறி விட்டார். இப்பொழுது அந்த உறவினர் இந்த இடம் எனக்கு வேண்டும் இது என் தாத்தா பெயரில் உள்ளது நீங்கள் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் இல்லையென்றால் சட்டப்படி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரம். இதற்கு ஏதாவது வழி உள்ளதா..?
 
02-Feb-2017 06:54:43 muthupandi said : Report Abuse
ஐயா, என் உறவினர் ஒருவர் நில பிரச்சினையில் இருந்து முறை தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதில் முதலில் உறவினரும் இரண்டாவது எதிர் தரப்பும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு எதிர் தரப்பினர் மூன்றாவது முறையாக வழக்கு தொடர்ந்ததில் எனக்கு தீர்பாகி விட்டது என்று நகளை காண்பித்து உரிமை கோரினார். இதில் மூன்றாவது முறையாக வழக்கு தொடர்ந்தது பற்றிய தகவல்கள் எதுவும் எங்களுக்கு தெரியாது. அவ்வாறு எங்களுக்கு தொரியாமலே வழக்கு தொடர்ந்து முடிக்க முடியுமா?
 
26-Jan-2017 23:51:06 G.Jaya murugan said : Report Abuse
 
24-Jan-2017 20:35:13 Arun Kumar said : Report Abuse
சார் எங்க அம்மா பெயரில் ஒரு இடம் உள்ளது அதை வேறு ஒருவருக்கு வீடு கட்டி இருக்குமாறு சொன்னோம் அந்த வீட்டிற்கும் பாதி செலவு நாங்கள்தான் செய்தோம் இப்பொழுது அவர்கள் காலி செய்ய மறுக்கிறார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் அ தி மு க கட்சி காரர்கள் உள்ளே வந்து இடம் அவர்களுக்குத்தான் என்று சொல்லுகிறார்கள் இதற்கு என்ன வழி உள்ளது
 
20-Oct-2016 00:11:56 கண்ணன் said : Report Abuse
நானும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தோம், நாங்கள் வேற வேற சாதியை சேர்த்தவர்கள் இருந்தும் அவளும் நானும் காதலித்து வந்தோம்.ஒரு நாள் அவள் என்னை வேண்டாம் என்று சொன்னால் நான் எதுக்கு அப்படி சொல்றன்னு கேட்டேன் அதற்கு அவள் எங்க வீட்டுல ஒதுக்க மாட்டாங்க என்ன பேசுனாலும் ஒதுக்க மாட்டாங்கன்னு சொல்லி என்ன விட்டுருன்னு சொன்ன, இருந்தாலும் அவளை என்னால மறக்க முடியல அதனால அவகிட்ட நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன அவழும் கொஞ்ச நாள் என்ன விட்டு அப்புறம் பத்துக்கலாம்னு சொன்ன நானும் அவ சொன்னதை நம்பி இருந்துட்டேன். இப்பொது அவளுக்கு கல்யாணம் ஆகா போகிறது, அதை அவள் என்னிடம் இதுவரைக்கும் சொல்லவில்லை, அது எனக்கு தெரிஞ்சதும் அவங்க அப்பா கிட்ட பேசுனா, அதுக்கு அவங்க நாங்க எங்க சாதிலத கொடுப்போம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.இருந்தாலும் அந்த பொண்ணு கிட்ட பேச எவ்ளோ முயற்சி செஞ்சி பார்த்தேன் என்னால அந்த பொன்னுட பேசவேய் முடில.அந்த பொன்னுட பேசறதுக்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்க. நான் அந்த பொண்ணுமேல போலீஸ் ல புகார் கொடுக்கலாம்னு இருக்க அது சரியாய் தப்ப...அப்படி பண்ணுன என்னக்கு எதாவது பிரச்சனை வருமானு...எனக்கு ஒரு வழி சொல்லுங்க.
 
05-Nov-2015 05:37:31 ப suresh said : Report Abuse
நன் ஒருவர்க்கு பணம் கொடுத்தேன் அவர் இப்போத் ஊரில் இல்லை அனால் அவர் பெயரில் இருந்த விட்டை அவர் மாமன் பெயரில் மாற்றி பேங்க் லோன் வாங்க போகிறார்கள் .சரி பணம் கொடு என்றால் யெல்லொவ் நோட்டீஸ் விடுவதாக சொல்கிறார்கள் அவர் அம்மா என்ன செய்வது என்று சொல்லுங்கள் .என்னிடம் 100 ரூபா பண்டு பத்திரத்தில் கை ரேகை வைத்து கொடுத்து இருக்கிறார் எது மட்டும் தான் என்னிடம் உள்ளது .அவர்கள் பேங்க் லோன் வாங்குவதை a தடுக்க முடி யூமா
 
29-Mar-2015 02:01:53 chandru said : Report Abuse
எனக்கு இடம் வாங்க தேவையான முக்கிய விபரங்கள் அடங்கிய தமிழ் கையேடு தேவை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.