LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?

அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம். 


ரிட் மனு என்றால் என்ன ?


‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!


எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?


பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.


1. உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.


நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம். 


அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்ப ட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்பு தான்.


எந்தெந்த பிரச்னைகளுக்கு ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?


ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.


1. முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யா விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந் தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.


சாலையின் பிளாட்பார ஆக் கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.


2.அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமு றையை உணர்த்து ம்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதார ணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத் தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ் பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷப ணையைப் பரிசீலி க்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந் தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.


3.மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லா மல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவி யின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்ய லாம்.


4.அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பத ற்காகப் போடப்படுவது இது.


5.அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.


இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.

by Swathi   on 22 May 2014  43 Comments
Tags: Writ Petition   Writ Petition Meaning   ரிட் மனு   ரிட் மனு என்றால் என்ன           
 தொடர்புடையவை-Related Articles
ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ? ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?
கருத்துகள்
15-Jun-2020 10:47:20 Gnanasekar K said : Report Abuse
எங்கள் ஊரில் ஒரு கிராம நிர்வாக அலுவலர் குடிருந்து வருகிறார் அவர் தனது இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒருவரது இடத்தை ஆஹ்க்கிரமிப்பு செய்து வருகிறார் அதை கெய்ட்டால் அது உங்கள் பட்டாவில் இல்லை எங்கிறார் நிலத்தின் சொந்தரகாரர் கடந்த 50 ஆண்டு காலமாக அந்த இடத்தில் தான் வசித்து வருகிறார் VAO வந்து 2 ஆண்டு காலம் தான் ஆகிறது அவர்கள் அரசு அதிகாரி துணை கொண்டு ஆகிரமிப்பு செய்து நிலத்தின் சொந்தரகாரர்மிரட்டுகிர்கிறார் அவருக்கு உதவ எவரெய்னும் முற்பட்டால் தொடர்புகொள்ள 9940343716
 
09-Jun-2020 15:12:30 வெங்கடேஷ் said : Report Abuse
எங்கள் ஊரில் மக்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகிள் பொதுகழிப்பிடம் கட்டுகிராற்கள் ஊர்தலைவர் இடம் புகார்.கொடுத்தூம் கேட்கவில்லை லஞ்சம் வாங்கிகொன்டு கட்டுகிராற்கள்.அங்கு கலிப்பிடம் வந்தாள் பொதுமக்கள் வசிக்கமுடியாது ரிட் மனு எப்படி கொடுப்பது.
 
15-May-2020 14:16:27 Govindaraju said : Report Abuse
எங்க ஊரில் ஒரு சிலர் செய்யும் செயல் மிகவும் வேதனை அளிக்கிறது. காவல்துறை அவர்கள் மூலம் நல்ல பணம் வாங்கிக் கொண்டு எங்க ஊரின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் நாடு காவல்துறை என்றுமே சம்பந்தப்பட்ட வர்களை அழைத்து சமாதான ஒப்பந்தம் செய்து விடுவது அந்த காலம்,இன்று பிரச்சினையை பெரிதாக்கி வாழ்வதும் மக்களின் ஒற்றுமையை களைப்பவார்கள் என்ன செய்வது எப்படி அவரை அரசிடம் காட்டி கொடுப்பது காவல்துறை லஞ்சம் வாங்குதை தடுப்பது. எங்க ஊர் மக்கள் ஒற்றுமையாக வாழ சில சமுக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு நல்வழி காட்டுங்கள். இப்படிக்கு R.கோவிந்தராஜு மேலக்கிடாரம் கடலாடி,(தாலுக)இராமநாதபுரம் 9842180845
 
22-Apr-2020 14:24:30 Ramamoorthy.A said : Report Abuse
வீட்டு பிரச்சனை-Builders தரம் குறைவாக கட்டி கொடுத்தற்கு எதிராக வழக்கு தொடுப்பது எப்படி?
 
25-Jan-2020 05:31:34 Saravanan said : Report Abuse
நான் எங்கள் ஊரில் இருந்து வருடம் வசித்து வருகிறேன். எங்கள் தெருவிற்கு அருகிலுள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி பொது மக்களின் பயன்பாட்டில் இல்லை. ஆனால் முன் இருந்த கிராம தலைவர் அந்த தொட்டிற்கு மறு சீரமைப்பு செய்து அதை தண்ணீர் குழாய்கள் பொருத்தப்படாமல் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டதாக கூறி சுமார் அதன் மதிப்பு 1,71,000 என்பது கூறப்படுகிறது அதை எப்படி மறுபடியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது.
 
02-Aug-2019 19:32:29 karthikeyan said : Report Abuse
ரிட் பெட்டிஷன் வரையறுக்கப்பட்ட கால அளவு எவ்வளவு ஆண்டுகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
 
31-Jul-2019 15:38:54 ramanathan said : Report Abuse
good service
 
17-Jul-2019 05:46:24 Indira said : Report Abuse
வெரி குட் இன்போர்மஷன் டு ஆல். இஞ்ச் அண்ட் எவெரிஒன்னு ஷௌல்து க்நொவ் தி இன்போர்மஷன்.
 
12-Jun-2019 10:25:26 Manigandan said : Thank you
என் தாத்தா,பாட்டி சொத்துக்கள் என் அப்பா விற்க வேண்டிய நிலைமை வந்துள்ளது, அனால் என் அப்பாவின் அக்கா மற்றும் தங்கை விற்க தடையாக உள்ளனர் அவர்களின் கையப்பம் வேண்டிய நிலைமை உள்ளதால் என் அப்பாவால் அந்த நிலத்தை விற்க முடியவில்லை இதற்கு நீங்கள் ஒரு வழி, கடிதம் மற்றும் எந்த அதிகாரியை பார்க்க வேண்டும் உதவி செய்யவேண்டும் .
 
26-Apr-2019 11:13:07 Chinnasamy L said : Report Abuse
ரம்மி விளையாடிய ஒரு நபர் மீது எந்த வகை வழக்கு தொடுக்க இயலும் மற்றும் போலி வழக்கு போடும் காவல் அதிகாரி தடுக்கு சட்டம் என்ன?
 
22-Apr-2019 14:30:08 Dinesh said : Report Abuse
Filing writ is kind of enforcing our constitutional right guaranteed to the citizens by our Constitution of India. This could be done, when any of our constitutional or statutory rights got violated by the Government authority. By Writ, we can straightly approach the High Court or even Supreme Court, in certain cases. For further queries, contact our firm through the above mentioned email. Regards, Dinesh, MD & Associates. Madurai/Trichy.
 
22-Feb-2019 11:30:17 ராஜேஸ்வரி said : Report Abuse
நான் ஒரு விவசாயி மகள் ..எனது ஊர் கும்பகோணம் அருகில் ஒரு கிராமம்.வங்கியில் கல்விக்கடன் வாங்கி 2015 பொறியியல் முடித்தேன். படித்த படிப்பிருக்கு வேலையும் கிடைக்கவில்லை,சம்பளமும் கிடைக்கவே இல்லை.. அதனால் என்னால் வங்கிக்கடனை கட்ட முடியவில்லை.. இதனால் அந்த வங்கி மேலாளர் எனது அம்மா வங்கிக்கணக்கை லாக் செய்துள்ளார்...இது சட்டப்படி சரியா?..எனது அம்மா 100 நாள் வேலைக்கு சென்ற பெற்ற பணத்தையும் வங்கி மேலாளர் தர மறுத்துவிட்டார் .
 
21-Feb-2019 15:52:07 Adv dhass said : Report Abuse
ஏதேனும் ரிட் சம்மந்தமான கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் send mail yesudasan99@gmail.com I'm response to immediately
 
11-Feb-2019 18:05:41 Imiyanbala60@gmail.com said : Report Abuse
Sir/mam, I hava mca.mphil.SET.,mudithuvitean. Tharpothu, tn govt.,G.O.195(ms), enatju degree govt velaiku sellathu sollukirarkal.which petion appeal seisnum.reply ப்ல்ழ் Tanq
 
05-Feb-2019 10:18:50 Balasubramani said : Report Abuse
நான் TNEB ல் பணிபுரிக்கிறேன். Legal procedure புத்தகம் தமிழில் கிடைக்குமா
 
05-Feb-2019 10:15:53 Balasubramani said : Report Abuse
Legal procedure தமிழ் வடிவில் புத்தகம் கிடைக்குமா.
 
22-Sep-2018 05:07:11 Veera said : Report Abuse
Govt vazhangiya ilavasa house land Silar avatrai sales seikindranar atharkana rules and regulation plz
 
09-Sep-2018 06:08:55 M.palani kumar@பால்ராஜ்பாபுல்ல்ஸ் said : Report Abuse
Anbarnda ilayasamudaya nanbargalukku Oru veandukol enna venil inium porukkavean dam nalaya atchiyai nam ilaya samudayam kaiyala veandum apoludu than tamilnadu/india abdul kalam sonna du pola 22020 vallarasagum... JAI ஹிந்தி
 
09-Sep-2018 05:53:23 m.பழனி said : Report Abuse
migavum arumayana தகவல்
 
15-Jul-2018 07:37:55 செந்தில் said : Report Abuse
நான் ஒரு நபரிடம் நஞ்செய் நிலம் கிரயம் பெற்று பணம் முழுவதும் கொடுத்துவிட்டேன்.இந்த நிலையில் விற்றவர் இறந்து விட்டார். அவருக்கு ஒரு திருமணமாகாத சற்று மூளை வளர்ச்சிக்குன்றி சுற்றித்திரியும் ஆண் மகணும், திருமணம் செய்து கொடுத்த ஒரு மகளும் உள்ளனர்.இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் எப்படி பத்திர பதிவு செய்வது.மூலப்பத்திரம் இருக்கின்ற இடமும் தெரியவில்லை.
 
25-Mar-2018 15:55:47 Kumaran said : Report Abuse
Nanraga purinthathu....thank u... And affidavit meaning pls
 
25-Jan-2018 11:36:40 கா.முருகானந்தம் said : Report Abuse
நான் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிகமாக கணினி உதவியாளராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஆனால் என்னுடன் அதே அரசாணை மற்றும் அதே கடிதத்தில் தொழில் நுட்ப உதவியாளராக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து உதவி பொறியாளராக பணி உயர்வு செய்து கிட்ட திட்ட ரூ.55000 ஊதியம் பெற்று வருகிறார்கள், ஆனால் எனக்கு மட்டும் மாத ஊதியம் ரூ,12000 பெற்று வருகிறேன், என்னுடைய வாழ்வாதாரம் , எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது, எனக்கு வயது 42 நடந்து வருகிறது. எனது கைபேசி எண் 9943323956 ,
 
04-Nov-2017 14:07:46 Prakash said : Report Abuse
அருமை மிக தெளிவான கருத்து
 
10-Aug-2017 05:58:35 அன்புலிங்கம் ர said : Report Abuse
அருமையான தகவல்
 
05-Jul-2017 07:45:31 remo said : Report Abuse
நான் சாதாரணமாக நிலம் pirachanai thodarpaga வாசக்கு தொடர்வது epadi
 
15-May-2017 22:06:05 கணேஷ் குமார் said : Report Abuse
நீதி மன்றத்தில் எங்களது வழக்கறிஞர் CA COPY கேட்டுக்கொண்டு இருக்கிறார் ஆனால் நீதிமன்றத்தில் தரமறுக்கிறார்கள் ஒன்றரை ஆண்டுகள் சென்று விட்டன.இதற்கு என்ன செய்வது ?
 
20-Mar-2017 03:36:16 வெங்கடேசன் said : Report Abuse
பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி
 
21-Dec-2016 18:59:31 Saravanan said : Report Abuse
Dear sir/மேடம் Na Tnstc paniporikeran athil Ulla labour court ரூல்ஸ் Pondra nadavadikaigalai ennudaiya email. Magavariku anuppum maaru kekiren (tamilil)
 
18-Dec-2016 00:44:27 pragalathan.p said : Report Abuse
En appavin died/govt_avarin karunai adipadai varisui vellai innum kidaikavillai ahavei avarin arasanga vellaikku writ patri kuripitavum.
 
02-Dec-2016 03:13:08 சந்தோஷ் kumar said : Report Abuse
வணக்கம் தோழர் /அல்லது/ தோழி. சிறிய உதவி எனக்கு இந்தியன் தொழில் முனைவோர் சட்டம் மற்றும் வரி மற்றும் வரி சம்பந்த பட சட்டம் தமிழ் ஆக்கத்தில் கிடைக்குமா? உங்களை தொடர்பு கொண்டு பேச முடியும் என்றல் ஏன் மின் அஞ்சல் முகவரியில் உங்கள் துளை பேசி என்னை அனுப்புங்கள். நன்றி..
 
28-Nov-2016 09:25:41 ANBU said : Report Abuse
என் தாத்தா சுய கிரயம் பெற்ற 3.43நிலத்தை 1979ஆண்டு 3சென்ட்நிலத்தை என் தந்தைக்கு கிரயம்செய்து வித்தார் என் தந்தை 1983ஆண்டு இறந்துவிட்டார் தாத்தா ஞாபகம் இல்லாமல் எனக்கு1.43 என் சித்தபாவிற்கு1.43 என் அத்தைக்கு.53சென்ட்உயில் எழுதிவைத்துவிட்டு 1987இறந்துவிட்டார் நான் 2009 ஆண்டு 1.43CENTஉட்ப்பிரிவு செய்துவிட்டேன் மீதியுள்ள நிலம் என்தாத்தா பெயரில் பட்டா உள்ளது 3சென்ட் நிலமும் என் தாத்தா பெ யரிலுள்ளது அதை நான் மீட்கமுடியுமா
 
04-Nov-2016 01:00:06 manivannan said : Report Abuse
குண்டர் சட்டத்தில் ஒருவர் பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் அதற்கு எப்படிப்பட்ட மனுவை போடலாம்
 
30-Oct-2016 21:59:47 johnprabaharan said : Report Abuse
எங்க ஊர் பாப்பாகோவில் தனி ஓவர் தன்விடுவாசலில் இருபுறமும் ஸ்பீட் பிரேக்கர் போட்டுஉள்ளர் .அது பப்ளிக் தொல்லையாகவுள்ளது .சமத்துவபுரம் அர்ச் அருகில்
 
16-Aug-2016 11:16:38 கண்ணன் said : Report Abuse
ஒரு ரிட் மனு உதாதரவு தியதி முடிந்தபின்னும் வழக்கு நீதிமனற வரிசைக்கு வராவிட்டால் ரிட் மனு உத்தரவின் நிலை என்ன ?
 
14-Aug-2016 07:43:36 muthu Nayinar said : Report Abuse
நத்தம் நான் கிறயம் பெற்று 65ஆண்டுகள ஆகிறது UDRன் போது எனது மனைஆபதிவேட்டில் காலிஇருந்தது2yearsமுன்என்பெயரில் ஒப்படை பட்டா பெற்றேன் என் பின் வீட்டு காரர் பத்திரபடி வேரு வழிஇருந்தும் என் பட்டாவை ரத்துசெய்ய ரிட்மனு போட்டுள்ளார் நான் 1994முதல் முழுமையாக தொகுப்பு வீடு கட்டி உள்ளேன்.என்வீடுவரைசந்து உள்ளது சந்து எங்கள் மனையின் ஒரு பகுதியாகும் 30ஆண்டுகளாகசந்துவழியாகநடந்தேன் என்று பொய் கூருகிரார் மனு Rdo விடம் விசாரனையில் உள்ளது உங்கள் விளக்கம் எனக்கு தேவை
 
11-Jul-2016 23:03:07 Uravae roopan said : Report Abuse
Arumai
 
08-May-2016 13:56:48 Syed ali said : Report Abuse
I am Muslim என் Thai இக்கு முதல் திருமணம் தில் முன்று பசங்க முதல் கணவர் இறந்தபின் ஈரான்டவது திருமணம் தில் முன்று பசங்க கணவர் இறந்த பின் ஆறு பசங்களும் Amma கூடவே இருக்காங்கே அம்மா பேரில் உள்ள போரபோர்ட்டி யாருக்கும் தெரியாமல் ஒரே பய்யன் பேரில் தனம் செட்டில்மென்ட் கொடுத்த து செல்லுமா அம்மா உயருடன் இருக்கன்க்கே ஈது கோர்ட் டில் வழக்கு தொடர முடியுமா
 
11-Mar-2016 23:21:43 ram said : Report Abuse
பயனுள்ள செய்தி
 
05-Nov-2015 06:10:48 ன்.rengarajan said : Report Abuse
உயில் தமிழில் தேவை . போர்மட் இருந்தால் அனுப்பவும்
 
04-Apr-2015 11:20:50 NATARAJ said : Report Abuse
புஞ்சை பட்டா மற்றும் நத்தம் பட்டா விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும், ஏற்கனவே புஞ்சை காலிமனை கூட்டு பட்டாவை கொண்டு வீடுகட்டியத்தில் தற்போது தனி புஞ்சை பட்டாவாக தாசில்தார் மாற்ற முடியாது என்கிறார். மேலும் நத்தம் பட்டாவகத்தன் கொடுப்போம் என்றும், அதுவும் தற்போது கிடைக்காது என்கிறார். என்னிடம் கிரய பத்திரம் சுமார் 30 வருடமாக எங்களது பெயரில் உள்ளது. எனது மாவட்டம் திருச்சி மாவட்டம்.
 
04-Apr-2015 10:52:16 NATARAJ said : Report Abuse
உன்மையிலே அனைவருக்கும் பயனுள்ளது
 
20-Jan-2015 00:19:34 ப.செல்வம் said : Report Abuse
அருமையான தமிழ் விளக்கம்.அனைவருக்கும் பயன்படும்.
 
25-Sep-2014 02:18:30 loganathan said : Report Abuse
En peyar loganathan (20) en appa 5/3/2012l iranthu viddar enkalukku sonthamana purvikam 34 send itai kaddi enathu appa nallappa enpavaridam 50,000 panam 1,1,2011:l vankiyathaka kuri poli paththiram thayariththu appa iranthu oru varudam kalithu courdil o.s.o.no.118 enra enni valaggu thodankiyullar
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.