LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

பாப்பாக்களின் பிரகடனம்

எங்களுக்காய்
எங்கள் எதிர்கால வாழ்வுக்காய்
பாதயாத்திரையில்
பங்கு கொண்ட
எங்கள்
பாச அண்ணாக்களே...!
அக்காக்களே...!

"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"
என்ற பாரதி பாடலை
பாடி மகிழும்
பாப்பாக்கள் நாங்கள்
20ம் நு¡ற்றாண்டின்
புரட்சி யுகத்தில்
நடப்பதை...!
எம் பிஞ்சு மனதிலே
பதிய வைத்துள்ளோம்.

எத்தனை கொலைகள்...!
எத்தனை கொடுமைகள்...!!
ஓ...!
வெலிக்கடையின்
இருட் சிறைக்குள்ளே
பசித்த வயிற்றுடன்
பட்டினி கிடந்து
எங்களுக்காக
எங்கள் எதிர்கால வாழ்வுக்காக
இறப்பை எதிர்பார்த்து
காத்திருக்கும்
எங்கள்
ஆசை அண்ணாக்களே!

சிறையில்
உங்கள் நகங்கள் பிடுங்கப்படுவதை
வாய்க்குள் பாம்புகள்
திணிக்கப்படுவதை
கட்டி அடிப்பதை
சிறுநீர் பருக்குவதை
பக்கத்து வீட்டு மாமா
சொல்வதைக் கேட்டு
எங்கள் பிஞ்சுமனம்
வெஞ்சினம்
கொள்கிறது.

அன்று
உங்கள் அண்ணாவும்
அக்காவும்
அப்பாவும் அம்மாவும்
போராடியிருந்தால்
இன்று நீங்கள்
சித்திரவதைப்பட்டிருப்பீர்களா?

இன்றும் சில
அண்ணாக்கள், அப்பாக்கள்
அக்காக்கள், அம்மாக்கள்
எங்கள் வீடு
எங்கள் காணி
எங்கள் சொத்து
எங்கள் பிள்ளை
என
இடித்த புளியைப்போல்
இருக்கத்தான் செய்கிறார்கள்!

மற்றவா¢ன் தியாகத்திலே
நல்வாழ்வு தேடும்
நா¢க் கூட்டங்கள்
சில
பறந்து சென்று
வெளிநாடுகளிலே
பார்வையாளர் வா¢சையிலே.

ஓ...!
இவர்கள் எல்லாம்
எளிய சனியன்கள்;
எங்கள் எதிர்காலம் பற்றி
எள்ளளவும் சிந்திக்காத
முழியன்கள்.

ஆனாலும்
எங்களுக்காக
எங்கள்
ஆசை அண்ணாக்கள்
சிறையிலே
சித்திரவதைப்படுகிறார்கள்.
எங்கள்
பாச அண்ணாக்களும்
அக்காக்களும்
பாத யாத்திரையிலே.

ஓ...!!
எட்டு நாட்கள்
தொடர்ந்து நடக்கும்
எங்கள் அண்ணாக்களின்
கால்கள்
வலிக்கும் என்பதை
நாங்கள் அறிவோம்...!

நல்லு¡ருக்கு
நடந்து போனபோது
எங்கள் கால்களும்
வலித்ததுதானே...!

பக்கத்து வீட்டு
அம்மாக்களின்
பசபசப்பையும்
குசுகுசுப்பையும்
பொருட்படுத்தாமல்
பாதயாத்திரையிலே
தொடர்ந்து வரும்
எங்கள் அக்காக்களில்
எங்களுக்கு
சா¢யான ஆசை.

எங்கள் அன்பான
அக்காக்களே!
உங்கள்
கால்கள் வலிக்கிறதா?
அப்படியானால் சொல்லுங்கள்
எங்களுக்காக
நடந்து வீங்கிய
உங்கள் கால்களை
எங்கள்
பிஞ்சுக் கரங்களால்
தடவி விடுகிறோம்.

உங்கள்
களைப்பை எல்லாம்
போக்க
கட்டி அணைத்து
முத்தமழை
பொழிகின்றோம்.

ஓ...!!
எங்கள்
அன்புக்கு¡¢ய அண்ணாக்களே!
உங்களுக் கொன்று
தொ¢யுமா?
நாங்கள் எல்லாம்
இப்போ
அம்மா அப்பா விளையாட்டு
விளையாடுவதில்லை
யுஆமிருயும் பொடியளும்
என்ற
புதிய விளையாட்டை
கண்டு பிடித்துள்ளோம்.

எம்மை அடக்கும்
காடையருக்கு
எங்கள் அண்ணாக்கள்
தெருவினிலே
கண்ணிவெடி வைப்பதுபோல்
மணலுக்குள்
ஊமல் கொட்டையை
நாங்களும் தாட்டு வைத்து
எங்கள் நண்பர்களை
ஆமிக்காரர்போல்
ஓடவைத்து
ஊமல் கொட்டையை
வெடிக்கச் செய்வதுபோல்
பாசாங்கு செய்து
அந்த வெடியினிலே
ஆமிக்கு வரும்
எங்கள் நண்பர்கள்
சிக்கிச் சாவதுபோல்
விளையாடுவதைப் பார்த்து
மகிழ்ச்சி பொங்க
நாங்கள்
ஆர்ப்பா¢க்கின்றோம்.

பள்ளிக்கூடம்
விட்டதும்
நாங்கள்
பறந்தோடிவந்து
எங்கள் வீட்டு
கோடிக்குள்...!
வேப்ப மரத்திற்கும்
வெலிக்குமிடையிலே
கட்டப்பட்ட
கயிற்றிலே
பாய்ந்து! விழுந்து...!
தவழ்ந்து...! எழுந்து...!
'பிஸிக்கல் ட்ரெயினிங்'
எடுக்கிறோம்.

ஓ...!
இந்த முறை
நல்லு¡¡¢லே பொம்மைகள்
எங்கள் கவனத்தை
திருப்பவில்லை;
முஸ்லிம் கடையிலே
தூங்கிய
துப்பாக்கிகளும்
போர் விமானங்களும்
காற்றாடிக் கப்பல்களுமே
எங்கள்
கவனத்தைக் கவர்ந்தன.

எங்கள்
சின்னத் தம்பிக்கும்
அப்பா
ஒரு துப்பாக்கி
வாங்கிக் கொடுத்திருக்கிறார்;
எங்கள் படலையிலே
எந்தநாள் பின்னேரமும்
அவன்...!
அந்த...!
துப்பாக்கியுடன்
'சென்றி'க்கு நிற்கிறான்.

இப்போதெல்லாம்
விளையாட்டில்
அவனுக்கு
ஆர்வமில்லை;
தன் பிஞ்சுக் கரங்களிலே
துப்பாக்கி ஏந்தி
'சென்றி'க்கு நிற்பதே
இன்று
அவனது விளையாட்டு.

இன்று
எங்கள் அண்ணாக்கள்
நடாத்தும் போர்
எங்களுக்கு
நல்வாழ்வு தேடித்
தரவில்லை யெனில்
உங்கள்
குரல்வளையை நொ¢த்த
அந்தக் கொடியவர்களுக்கு
எதிராக
நாளை
எங்கள் கரங்கள் உயரும்!
இதை நம்புங்கள்!!

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சூழ்நிலையின் உயிர்ப்பு சூழ்நிலையின் உயிர்ப்பு
குயில் பாட்டு குயில் பாட்டு
எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.! எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.!
மனமும் மனிதர்களும் மனமும் மனிதர்களும்
நாணப்படுகிறாள் நதி நாணப்படுகிறாள் நதி
விளக்கின் வெளிச்சம் விளக்கின் வெளிச்சம்
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.