LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

தீப ஒளியால் விளைந்த நன்மை !!

இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளியன்று எமதர்மனை வழிபடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கான காரணம் சுவாரசியமானது.


முன்னொரு காலத்தில் வட இந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணம் முடிந்த நான்காவது நாள் பாம்பு தீண்டி இறந்து விடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர். இதனால் மன்னன் பயந்து போனான். இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு மகனுக்கு மணமுடித்து வைத்தான். மன்னனின் மகனை மணந்து கொண்ட இளம் பெண்ணின் பெயர் சாவித்திரி.


புத்திசாலியான சாவித்திரி, கணவனை எமதர்மனின் பாசக்கயிற்றில் சிக்கவிடமாட்டேன் என்று  உறுதி பூண்டாள். ஜோதிடர்கள் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. அன்று இரவு, கணவனை தூங்க சாவித்திரி அனுமதிக்கவில்லை.


கணவனுடன் அவள் இருந்த அறையின் வாயிலில் தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளை எரியவிட்டாள்.


குறிப்பாக படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன் பிறகு தனது இனிய குரலால் பாடத் தொடங்கினாள். கணவன் தூங்காதிருக்க, அவ்வப்போது கதைகளையும் கூறிக்கொண்டிருந்தாள். 


எமதர்மன் அனுப்பி வைத்த பாம்பு அறைக்கு வெளியே வந்தது. ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடியவாறு ஊர்ந்து சென்ற பாம்பினால் சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது. 


சோர்ந்து போய் படுத்த விட்ட பாம்பு, பொழுது விடிந்ததும் வந்த வழியாக திரும்பி சென்று விட்டது. இதனால் இளவரசன், சாவின் பிடியில் இருந்து தப்பினான்.


இதன் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளி, எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அன்று இரவு அப்பகுதிகளில் விளக்குகள் விடியும் வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டிக்கும்.


கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக, பெண்கள் தீபாவளியை எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாக கொண்டாடுகின்றனர். 


இது போன்ற சுவராசியமான கதைகள் தீபாவளிக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

by Swathi   on 21 Oct 2014  0 Comments
Tags: சாவித்திரி   எமதர்மன்   தீபாவளி வரலாறு   Diwali   Diwali History   Yamadharma     
 தொடர்புடையவை-Related Articles
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில் தீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்
தீப ஒளியால் விளைந்த நன்மை !! தீப ஒளியால் விளைந்த நன்மை !!
கத்திக்கு யு... பூஜைக்கு யு/ஏ....!! கத்திக்கு யு... பூஜைக்கு யு/ஏ....!!
பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !! பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!
தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா கத்தி !! தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா கத்தி !!
திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி !! திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி !!
பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி..,! பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி..,!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.