|
|||||
வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி. |
|||||
தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் மருதநாயகம் அவர்களை 22/12/2023 அன்று செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி சந்தித்து பிறந்தநாளில் வாழ்த்து பெற்றார்.
அப்போது, வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி கூறும்போது, "வலைத்தமிழ் என்ற ஓர் இணையதளக் கட்டமைப்பு தமிழுக்குத் தொடங்கவேண்டும் என்று 2009 ஆம் ஆண்டில் முடிவெடுத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினாலும், தொடங்கி ஐந்து ஆண்டுகள் கழித்தே முதல் காணொலியை பதிவேற்றினோம்.
ஆழ்ந்து வாசித்த அறிவுப் பெட்டகம்
அந்த முதல் காணொளி ஒரு தமிழாய்ந்த ஓர் அறிஞர் வெளியிடவேண்டும் என்று நினைத்தபோது , செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த தமிழறிஞர் பேராசிரியர் முனைவர். மருதநாயகம் அவர்கள் வாசிங்டன் வந்தபோது அவரை வைத்து புறநானூறு குறித்துப் பதிவுசெய்தோம். வலைத்தமிழில் பதிவேற்றப்பட்ட முதல் காணொளி ஐயாவின் புறநானூறு குறித்து இரண்டு மணி நேரக் காணொளி. பேரன்பு கொண்ட தமிழாளுமை. தமிழின் இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்த அறிவுப் பெட்டகம். அவரின் உரைகள் ஒவ்வொன்றும் உலகின் பல மொழி இலக்கியங்களைத் தொட்டுக் கேட்பதற்குப் பெருமிதமாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
ஆளுமைகளை ஒருங்கிணைப்பு செய்யுங்கள்
இந்தச் சந்திப்பின் போது, திருக்குறள் சார்ந்த முன்னெடுப்புகளை வலைத்தமிழ் சா. பார்த்தசாரதியிடம் கேட்டு மகிழ்ந்த மருதநாயகம், "தொய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். திருக்குறளைத் தேசிய நூலாகவும், யுனெஸ்கோ அங்கீகாரம் பெறவைக்கவும் சரியான சூழல். முன்னெடுத்து ஆளுமைகளை ஒருங்கிணைப்பு செய்யுங்கள் என்று வாழ்த்தினார். https://www.youtube.com/watch?v=Db0m4-9S95w |
|||||
by Kumar on 27 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|