|
|||||
நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு |
|||||
நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு
சனவரி, 8, 2023, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் திருவருட்பா மார்கழி இசைவிழா முதன் முறையாக வள்ளலார் யுனிவர்சல் மிஷன் (https://vallalaruniversalmission.org/) மற்றும் வலைத்தமிழ் கல்விக்கழகம் (www.ValaiTamilAcademy.org) இணைந்து முன்னெடுத்தது. இந்நிகழ்ச்சியில் 26 மாணவர்கள் பங்கேற்று திருவருட்பா பாடல்களை ராகம் தாளத்தோடு மிக அழகாகப் பாடினர். இதில் பெருவாரியாக வள்ளலார் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வலைத்தமிழ் இசைப்பள்ளியின் முதல்வர் திருபுவனம் குரு.ஆத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டு திருவருட்பா பாடி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். வலைத்தமிழ் திரு.ச.பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை வள்ளலார் யூனிவர்சல் மிஷன் தன்னார்வலர்கள் திருமிகு.பிரசன்னா சிவசுப்ரமணியன், திருமிகு.கோபி சுந்தரேசன் , திருமிகு.ஜெயராஜ் ராஜா , திருமிகு.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் திருமிகு.சியாமளா வெங்கடேஷ் , திருமிகு.வெங்கடேஷ் கஜபதி ஆகியோர் ஒருங்கிணைப்பு உதவி செய்தனர். இந்நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் திருவருட்பாவை ராகம் தாளத்தோடு இனிமையாகப் பாட இசையாசிரியர்களைக்கொண்டு பயிற்சி வழங்கும் வகையில் "வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல்" வெளியீடும் இடம்பெற்றது. உலகெங்கும் தமிழ்மொழி-கலை-பண்பாடு-வாழ்வியல் பயிற்சிகளை இணையவழியில் நடத்திவரும் வலைத்தமிழ் கல்விக்கழகம் " இப்பயிற்சி நூலை தயாரித்து வழங்கியது. இப்பயிற்சி நூலை நியூஜெர்சி வள்ளலார் தமிழ்ப்பள்ளியின் தலைவர் திருமிகு.சசிக்குமார் ரெங்கநாதன் பெற்றுக்கொண்டவர் மரு .பிரியா பாலா, திருமிகு.அண்ணாமலை சம்பந்தன், உரம் இசைப்பள்ளி மாணவர்கள், திருமிகு.லலிதா (லயா இசைப்பள்ளி) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை திருமிகு.இராமா ஆறுமுகம் தொகுத்து வழங்கினார்.
|
|||||
by Swathi on 13 Jan 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|