LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

எட்டாம் திருமுறை-திருச்சிற்றம்பலக் கோவையார்-2

இரண்டாம் அதிகாரம்
2. பாற்கற் கூட்டம்
1. பாங்கனை நினைதல்
பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்(து) அம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யான்அன்ன பண்பனைக் கண்(டு)இப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை எய்துதற்கே. 19
கொளு
எய்துதற்(கு) அருமை ஏழையில் தோன்றப்
பையுள் உற்றவன் பாங்கனை நினைந்தது.
2. பாங்கன் வினாதல்
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளம்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) எய்தியதே. 20
கொளு
கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.
3. உற்றது உரைத்தல்
கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்(து) ஆங்(கு)அப் பணைமுலைக்கே
தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச் சிவன்தாள்
ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே. 21
கொளு
மற்றவன் வினவ, உற்றது உரைத்தது.
4. கழறியுரைத்தல்
உளமாம் வகைநம்மை உய்யவந்(து) ஆண்டுசென்(று) உம்பர்உய்யக்
களமாம் விடம்அமிர்(து) ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றோர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே. 22
கொளு
வெற்பனத்தன் மெய்ப்பதங்கன்
கற்பனையில் கழறியது.
5. கழற்றெதிர் மறுத்தல்
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற்றம் பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை ஒவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே. 23
கொளு
ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது.
6 கவன்றுரைத்தல்
விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுகலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற்றம்பலத் தான்அருள் இல்லவர்போல்
தலங்கலைச் சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே. 24
கொளு
கொலைகளிற் றண்ணல் குறைநயந்(து) உரைப்பக்
கலக்கங்செய் பாங்கன் கவன்(று) உரைத்தது.
7. வலியழிவுரைத்தல்
தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே. 25
கொளு
நிறைபொறை தேற்றம் நீதியடு சால்பு
மறியறு நோக்கிற்கு வாடினேன் என்றது.
8. விதியடு வெறுத்தல்
நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
கொல்வினை வல்லன கோங்கரும் பாம்என்று பாங்கன் சொல்ல
வல்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கித்
தொல்வினை யால்துய ரும்என(து) ஆருயிர் துப்புறவே. 26
கொளு
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.
9. பாங்கன் நொந்துரைத்தல்
ஆலத்தி னால்அமிர்(து) ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணங்கெடினும்
காலத்தி னால்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா(து) ஒழிவதென் தீவினையே. 27
கொளு
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி 
நின்னது நன்மை நினைந்திலை என்றது.
10. இயல் இடங்கேட்டல்
நின்னுடை நீர்மையும் நீயும்இவ் வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி(து) என்னென்ப தேதில்லை யேர்கொள்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல ரோவிகம் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே. 28
கொளு
கழுமலம் எய்திய காதல் தோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.
11. இயலிடங் கூறல்
விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று
மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழல்தில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்(கு)எழி லாம்எங் குலதெய்வமே. 29
கொளு
அழுங்கல் எய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.
12. வற்புறுத்தல்
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண்செவ்வாய்
மயிலைச் சிலம்புகண்(டு) யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பனிக்கறையே. 34
கொளு
பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது.
13. குறிவழிச் சேறல்
கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ் பொழில்எழில் குன்றும்அன்றும்
நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ லாம்தில்லை ஈசன் வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலம் தண்புனத்தே. 35
கொளு
அறைகழல் அண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.
14. குறிவழிக்காண்டல்
வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்(கு) அம்பலம்போல்
படிச்சந் தமும்இது வேஇவ ளேஅப் பணிமொழியே. 36
கொளு
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று 
தளிர்புரை மெல்லடித் தையாலக் கண்டது.
15. தலைவனை வியந்துரைத்தல்
குவளைக்களத்(து)அம் பலவன் குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்(று) ஆண்ட அவயவத்தின்
இவளைக்கண்(டு) இங்குநின்(று) அங்குவந்(து) அத்துனை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி யான்இக் கடலிடத்தே. 37
கொளு
நயந்த உருவம் நலனும் கண்டு
வியந்த வனையே மிகுத்துரைத்தது.
16 கண்டமை கூறல்
பணந்தாழ் அரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங்(கு) அகன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேன்ஒன்று நின்றதுவே. 38
கொளு
பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிறல் அண்ணற்கு அறிய உரைத்தது.
17. செவ்வி செப்பல்
கயலுள வேகம லத்தவர் மீது கனிபவளத்(து)
அயலுள வேமுத்தம் ஒத்த நிரைஅரன் அம்பலத்தின்
இயலுள வேபிணைச் செப்புவெற் பாநின(து) ஈர்ங்கொடிமேல்
புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. 37
கொளு
அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்கு
அவ்வுரு கண்டவன் செவ்வி செப்பியது.
18. அவ்விடத்து ஏகல்
எயிற்குலம் முன்(று)இரும் தீஎய்த எய்தவன் தில்லையத்துக்
குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தம்நிரைத்(து)
அயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனம்நடக்கும்
மயிற்குலம் கண்டதுண் டேல்அது என்னுடை மன்னுயிரே. 36
கொளு
அரிவையது நிலைமை அறிந்தவன் உரைப்ப
எரிகதிர் வேலோன் ஏகியது
19. மின்னிடை மெலிதல்
ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்(று) அளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாயின ராய்க்கெழு மற்(கு)அழிவுற்(று)
ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்(து) அருவரையே. 37
கொளு
மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது.
20. பொழில்கண்டு மகிழ்தல்
காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி ஒல்குத லான்மன்னும் அம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும்
தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றும்என் சிந்தனைக்கே. 38
கொளு
மணங்கமழ் பொழிலின் வடிவுகண்(டு)
அணங்கென நினைந்(து) அயர்வு நீங்கியது.
21. உயிரென வியத்தல்
நேயத்த தாய்நென்னல் என்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாய் அமிழ் தாய்அணங் காய்அரன் அம்பலம்போல்
தேயத்த தாய்என்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி இதோவந்து நின்ற(து)என் மன்னுயிரே. 39
கொளு
வெறியறு பொழிலின் வியன்பொ தும்பரின்
நெறியறு குழலி நிலைமை கண்டது.
22. தளர்வு அகன்று உரைத்தல்
தாதிவர் போதுகொய் யார்தைய லார்அங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந்(து) அடியார் கனைப்புனல் ஆடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல் வென்னத்தம் பொன்அடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை எய்துதற்கே. 40
கொளு
பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத்
தனிநிலை கண்டு தளர்வகன்(று) உரைத்தது.
23. மொழிபெற வருந்தல்
காவிநின்(று) ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்
தேவிஎன் றேஐயம் சென்ற(து)அன் றேஅறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடின்என்
ஆவியன் றேஅமிழ் தேஅணங் கேஇன்(று) அழிகின்றதே. 41
கொளு
கூடற்(கு) அரிதென வாடி யுரைத்தது.
24. நாணிக் கண் புதைத்தல்
அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின்
இகலிடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்கிடமாய்
உகலிடம் தான்சென்(று) எனதுயிர் நையா வகையதுங்கப்
புகலிடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே. 42
கொளு
ஆயிடைத் தனிநின்(று) ஆற்றா(து) அழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.
25. கண் புதைக்க வருந்தல்
தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தான்அம் பலங்கை தொழாரின்உள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ
வாழச்செய் தாய்கற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. 43
கொளு
வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்(கு) என்றது.
26. நாண்விட வருந்தல்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்(று)
ஒருநாள் பிரியா(து) உயிரின் பழகி யுடன்வளர்ந்த
அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்(து) அழிகின்றதே. 44
கொளு
ஆங்ங னம்கண்(டு) ஆற்றா ளாகி
நீங்கன நாணொடு நேரிழை நின்றது.
27. மருங்கணைதல்
கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு) அ·தே குறைப்பவர்தம்
சீலத் தன்கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால்
சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. 45
கொளு
ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.
28. இன்றியமையாமை கூறல்
நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
தீங்ரும் பும்அமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்பும்
கோங்கரும் பும்தொலைத்(து) என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே. 46
கொளு
வென்றி வேலவன் மெல்லி யல்தனக்(கு)
இன்றியமை யாமை எடுத்து ரைத்தது.
29. ஆயத்து உய்த்தல்
சூளா மணியும்பர்க்(கு) ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு)
ஆளா ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
நாளார் மலர்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே. 47
கொளு
தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது. 29
30. நின்று வருந்தல்
பொய்யுடை யார்க்(கு)அரன் போல்அக லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான்
பையுரை வாளர வத்(து) அல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48
கொளு
பாங்கிற் கூட்டிப் பதிவயின் பெயர்வோன்
நீங்கற்(கு) அருமை நின் று நினைந்தது.
பாற்கற் கூட்டம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.