LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

எழுதப்பட்டுவிடும்-- நாளைய காவியம்

வீதிகளில் கேட்பாரற்று
விடப்பட்ட தெய்வங்கள்
குப்பைமேட்டு கோயில்களில்
கொலுவிருக்கும் மனித மிச்சங்கள்
பாவப்பட யாருமின்றி
பராரியாய் பசியோடு கையேந்தும்
எதிர்கால தேசத்தின் மன்னர்கள்
இந்த விக்ரகங்களை கண்டுகொள்ளாமல்
புதிய கும்பாபிஷேகங்களுக்கு நாள் குறிக்கும்
விந்தையான ஆத்தீகர்களே
சிந்தையை சற்று வீதியோரம் திருப்புங்கள் நம்
சொந்தத்தின் மிச்சங்கள்
எச்சில் இலைகளோடு போராடுவதை பாருங்கள்
ஆன்மிகம் தேவையில்லை
என்றுரைக்க வரவில்லை
மனிதத்தோடு ஆன்மிகம்
மன்பதையில் வேண்டுமென்கிறேன்
கல்யாண விருந்துகளில்
காசை கரியாக்கும் கனவான்களே
விருந்து என்பதை எழுத்தில் கூட பாராத
வியப்பின் உச்சங்களுக்கு விருந்திடுங்கள்
விதி முடிந்து போகும்போது
உங்களோடு கூட வரும்
விழைவுடன் உங்கள் நற்பெயர்
பிள்ளையில்லா கனவான்களே
பிள்ளைகள் கோடானுகோடி வீதியில்
தனித்து விடப்பட்ட விடுதிகளில்
உள்ளன்போடு தத்தெடுப்பீர்
உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி அர்த்தப்படும்
மனிதத்தை காப்பீர் மனித இனத்தின்
மாண்பினை காப்பீர்
புனிதப்பட்டு விடும் இந்த பாரதத்தின்
தனித்துவமிக்க புதிய சரித்திரம்
எழுதப்பட்டுவிடும் நாளைய காவியம்

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சூழ்நிலையின் உயிர்ப்பு சூழ்நிலையின் உயிர்ப்பு
குயில் பாட்டு குயில் பாட்டு
எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.! எனக்கு ஒன்றுமில்லை என்றாலும் யாரோ சொல்லிவிட்டதற்காக.!
மனமும் மனிதர்களும் மனமும் மனிதர்களும்
நாணப்படுகிறாள் நதி நாணப்படுகிறாள் நதி
விளக்கின் வெளிச்சம் விளக்கின் வெளிச்சம்
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.