LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- முக்கிய தினங்கள்

பிரவரி 21 : உலக தாய்மொழி நாள் !!

யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2000‍ம் ஆண்டு முதல் பிப்ரவரி 21-ம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது. அதன்படி தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. உலகில் பல‌ நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். தமிழ்மொழியை சுமார் 7 கோடி பேர் பேசுகின்றனர்.


நாளுக்கு நாள் தாய்மொழிகள் மருகி அழிகிறது. தாய்மொழிகள் அழிவதை தடுக்கத்தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 


ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள பேசப்பட்ட‌ மொழி, இனத்தின் அடையாளமாக மாறியது. மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.


மொழிகள் பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகைப்படும். 100 ஆண்டுகளுக்கு முன் 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000மாக‌ குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.


இந்தியாவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு,பெங்காளி, மலையாளம், கர்நாடகம் உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. 


எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.”ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது.


தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு. பள்ளி கல்விமுறை தாய்த்தமிழுக்கு உரிய இடத்தை கொடுக்க தவறிவிட்டது


“தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது மூதுரை. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.


தமிழ் அடையாளம் காப்போம்! ஒன்றிணைந்து உயர்வோம்!

by Swathi   on 21 Feb 2014  0 Comments
Tags: Mother Language Day   Mother Tongue Language   Language   தாய்மொழி   தாய் மொழி தினம்        
 தொடர்புடையவை-Related Articles
இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!! இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!!
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
பிறந்தநாள் உயர்வு - நாகினி பிறந்தநாள் உயர்வு - நாகினி
உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை... உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை...
தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் தனது கல்வெட்டுக்களைப் பொறித்தாரா அசோகர் !! தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் தனது கல்வெட்டுக்களைப் பொறித்தாரா அசோகர் !!
3 அமெரிக்க மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்.. 3 அமெரிக்க மாநிலங்களில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் கட்டாயம் !! தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் கட்டாயம் !!
படங்கள் சொல்லும் செய்தி. படங்கள் சொல்லும் செய்தி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.